"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Fri Jul 04, 2014 11:58 pm

சூரியக் கீற்றுகள் (கவிதைகள்)
நூலாசிரியர் :  முனைவர் கவிஞர் வா. நேரு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மானமிகு பதிப்பகம், 3/20-A, ஆதிபராசக்தி நகர், திருப்பாலை, மதுரை-14.
விலை : ரூ. 70
*****
       இனிய நண்பர் நூலாசிரியர் முனைவர் கவிஞர் வா. நேரு அவர்கள் புதுவை மற்றும் தமிழக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்.  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைபேசி மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.  பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி.  என்னுடைய வேண்டுகோளை ஏற்று எழுத்து டாட் காம் மில் எழுதியவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளார்.  அதனை ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புகளில் “தன்னம்பிக்கையும் மனித நேயமும்” எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ளார். இந்த நூலை, “எனது தாயார் சாப்டூர் திருமதி சு. முத்துக்கிருஷ்ணம்மாள் வாலகுரு அவர்களுக்கு”.  என தனது தாயாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.

       திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் அணிந்துரை மிக நன்று.  திரு. அகன் அவர்களின் வாழ்த்துரையும் நன்று. 
       “வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட” என்று தொடங்கி தந்தை பெரியாரின் புகழ்பெற்ற நூலான “பெண் ஏன் அடிமை ஆனாள்?” என்ற தலைப்பு வரை 51 தலைப்புகளில் புதுக்கவிதை வடித்துள்ளார். 
       நூலாசிரியர் முனைவர் கவிஞர் வா. நேரு அவர்கள் பகுத்தறிவாளர்.  சமுதாயத்தை உற்று நோக்கி பகுத்து அறிந்து புதுக்கவிதை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள்.  இது இவரது இரண்டாவது கவிதை நூல்.  பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் என்ற இவரது முதல் நூல் விமர்சனத்தை இணையங்களில் பதிவு செந்துள்ளேன்.  பலரின் பாராட்டைப் பெற்ற நல்ல நூல்.  அதன் வெற்றியினைத் தொடர்ந்து இரண்டாவது நூல் எழுதி உள்ளார். 
       முதல் கவிதையே மதவெறியைச் சாடுவதாக உள்ளது.
       வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட
       மறக்க இயலவில்லை / என்னால் / பத்து வயதில்
       நான் பார்க்க இறந்துபோன / பசிக்கிற குழந்தைகளுக்காக
       தெருவில் இறங்கி / வேலை தேடிய காதர் மைதீனை”
       நோபல் பரிசு வாங்கிய / நிகழ்விலும்
       நினைவு கூர்ந்தார் / அமர்த்தியா சென்.

       வாழ்வின் நிலையாமையை உணர்த்தி மனிதனின் அகந்தையை அகற்றும் விதமாக வடித்த கவிதை மிக நன்று.
என் காலில் பட்டு / என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று / சிதைந்து போனது போலவே
உனது வாழ்க்கையும் / எனது வாழ்க்கையும்
இதில் எதற்கு / சாதிப்பெருமையும் / தற்பெருமையும்
முடிந்தால் / எவருக்கேனும் உதவு / இல்லையெனில்
அமைதியாய் முடங்கு.

                     பிறருக்கு உதவி நல்லது செய்ய முடியாவிட்டாலும் அல்லது செய்யாமல் அடங்கு என்று உணர்த்தியது மிக நன்று.
                    அரசியல்வாதிகளில் நல்லவர்களை, நேர்மையானவர்களை தேடிக்கொண்டு பிடிக்க வேண்டி உள்ளது.  நேர்மையற்றவர்கள் மலிந்து விட்டனர் என்பதை புதுக்கவிதையில் நமக்கு உணர்த்தியுள்ளார்.
                     கெஞ்சியும் குழைந்தும்
                    காசு கிடைக்குமென / குட்டிக்கரணம்
       போடும் வித்தைக்காரன் / போலவே
       கெஞ்சியும் குழைந்தும் / கும்பிடு போடுவதெல்லாம்
       பதவிக்கு வந்து / பொறுக்கித் திங்கத் தானே!

                    விஞ்ஞான கண்டுபிடிப்பில் மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசும் விதமாக பித்தலாட்ட இராசிபலன் சோதிடம் .போட்டிப் போட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர்.  நாம் எந்த வண்ணத்தில் சட்டை அணிய வேண்டும் என்பதை சோதிடர் அறிவிக்கிறார். இந்த அவலங்களைச் சாடும் விதமான கவிதை ஒன்று மிக நன்று.
                    பலர் வாழ்வைக் கொல்லும் நஞ்சாய்
       தொலைக்காட்சி / பெட்டிகளில் / வேறுபட்ட ஆடைகளில்
       வெவ்வேறு சேனல்களில் / ஒரே மாதிரி பொய்களோடு
       ஜோதிடர்கள்.

                    வதந்திகள் மூலம் மூடநம்பிக்கையை பரப்பி பணம் சேர்த்து வருகின்றது ஒரு கூட்டம். பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல மனிதனின் மகத்துவமே பகுத்தறிவு.  எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேட்டால் தான் தெளிவு பிறக்கும். பகுத்தறிவு உணர்த்தும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.                   

                    புரளி பிள்ளையார்!
                    பால் குடித்தார் பிள்ளையார் / ஒரு நாள புரளி
       ஓரிரு நாளில் முடிந்த்து / அழியப் போகிரது உலகம்
       சில நாளில் புரளி கொடி கட்டிப்பறக்கிறது.

                    அன்று காந்தியடிகள் காலத்தில் உண்ணாவிரதம் என்பது ஆள்வோரின் கவனம் ஈர்ப்பதாக, அமைதியான வழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மரியாதைக்கு உரிய ஒன்றாக இருந்தது.  ஆனால் இன்று உண்ணாவிரதம் என்பது  கேலி  கூத்தாகி விட்டது.
                    அழகாய் படமெடுத்தாலும்
                     உண்ணாவிரதம் / இருப்போர் எல்லாம் / காந்தியல்ல
       அழகாய் படமெடுத்தாலும்
       என்னவோ நஞ்சு தான்.

                    கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரும் வழிபாட்டு தலத்தை இடித்த்தாக வரலாறு இல்லை.  கடவுள் உண்டு என்பவர்கள் தான் மாற்று மத்த்தினர் வழிபாட்டு தலத்தை இடித்து கொள்கிறார்கள் என்ற உண்மை இடித்து கூறும் விதமாக புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.
                    ஆத்திகர்களாய் அடையாளம் / காட்டிக் கொண்டவர்களின்
       கைகளில் / கடப்பாரைகளும் / கத்திகளும்
       இடித்தே தீருவோம் / உடைத்தே தீருவோம்
       கட்டியே தீருவோமென்னும் உறுதிழொழிகள்.

                    தொடர்ந்து எழுதுங்கள்.  வாழ்த்துக்கள்.  சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.  கவிதையில் ஒரு சில இட்ங்களில் உள்ள ஆங்கிலச் சொற்களை அடுத்த பதிப்ப்ல் தவிர்த்திடுங்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2100
Points : 4736
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum