"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Thu Jul 10, 2014 7:55 pm

பச்சைத் தேவதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா அலைபேசி : 92821 11071
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
எண் : 9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை 600 062. 
விலை : ரூ. 45
*****
நூல் ஆசிரியர் கவிஞர் மரிய தெரசா அவர்கள் காரைக்காலில் பிறந்தவர்.  தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பட்டம் பயின்றவர்.  முனைவர். ஆசிரியர் பணிபுரிந்து வருபவர்.  ஓய்வின்றி படைத்து வரும் படைப்பாளி.  ஏழு லிமரைக்கூ வடிவ கவிதை நூல் எழுதியுள்ள ஒரே கவிஞர் என்ற புகழுக்கு உரியவர்.
“பச்சைத் தேவதைகள்” நூலின் தலைப்புக்கு ஏற்றபடி மரம், செடி, கொடி பசுமையின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் நூல் முழுவதும் லிமரைக்கூ வடிவில் கவிதை வடித்துள்ளார்கள்.  மரங்களின் முக்கியத்துவத்தையும் மழையின் தேவையையும் நன்கு உணர்த்தி உள்ளார்.  ஒரே மைய தலைப்பில் ஆழ்ந்து சிந்தித்து மிக நுட்பமாக எழுதி உள்ளார்கள்.  நூல் ஆசிரியர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஆசிரியர் என்பதால் சொல் விளையாட்டு விளையாடி உள்ளார்கள்.  பாராட்டுக்கள். 
இந்த நூலை “புன்னகை அரசி, புதுக்கவிதை படைப்பாளி, புவிமேல் பற்றுடை பூங்கோதை புதுமல் வைகைச் செல்வி அவர்களுக்கு” என்று எழுதி காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.  தொடர்ந்து பல நூல்கள் எழுதி வருவதால் ஒவ்வொரு நூலையும் ஒருவருக்கு சக படைப்பாளிகளுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறார்கள். எனக்கும் ஒரு நூல் காணிக்கையாக்கி இருந்தார்கள்.
நூலின் முதல் லிமரைக்கூ முத்தாய்ப்பாக உள்ளது.  எந்த செயலையும் தள்ளிப்போடாமல் உடன் முடி என்று அறிவுறுத்தும் விதமாக உள்ளது.
இன்றே மரம் நடு
      பசுமைக்கு இதுவே சிறந்த வழி
      இதற்கு ஏன் கெடு?

அறிவியல் கருத்துக்களையும் கவிதையில் விதைத்து விழிப்புணர்வு ஊட்டுகிறார்.
ஓசோனில் ஏற்படுகிறது ஓட்டை       
      அறிந்தும் இதன் உபயோகம் ஏன்
      நிறுத்துவோம் நம் சேட்டை!

பொன் விளையும் பூமி என்பார்கள்.  பூமியை நன்றாகப் பேணி காத்தால் வளங்கள் கொழிக்கும், பசுமை செழிக்கும் என்பது உண்மை.
நமக்கு உதவும் மண்
      அதன் பயன் அறிந்து பேணிட
      வாழ்வு ஆகும் பொன்!

சாலை போடுகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டி சாய்க்கின்றனர்.  ஆனால் வெட்டி வீழ்த்தும் அளவிற்கு மரங்களை நட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
மழை வேண்டி அலைகிறாய்
      மரங்கள் நட நீ மறுக்கிறாய்
      வீணான கவலையில் திளைக்கிறாய்!

வருங்கால சந்ததிகள் வளமாக வாழ நாம் பூமியின் வளத்தைப் பேணுவது நலம்.  பூமி என்பது தங்க முட்டை போடும் வாத்து போன்றது.  அளவோடு பயன்படுத்தினால் தந்து கொண்டே இருக்கும்.  தங்க முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தை அறுத்த கதை போல பூமியை சிதைப்பதை நிறுத்த வேண்டும்.
நாளைய நம் சமுதாயம்
      வறட்சியில் வாடி மடிவதா சொல்
      உன் கரங்களில் சமுதாயம்!

மழைநீர் சேகரிப்பு என்பது அவசர அவசியம் இன்று.  இன்னும் பலர் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் உணராமல் உள்ளனர்.  அவர்களுக்கான லிமரைக்கூ ஒன்று.
நீரின்றி வாடுபவர் பலர்
      அறியாது இதன் அருமை வீணாக்கிபவர்
      புவியில் பலர் உளர்!

பசுமை அழிந்து வருகின்றது.  மழை பொய்த்து வருகின்றது.  வறட்சி வாட்டி வருகின்றது.  இதற்கு காரணம் நாம் தான்.
பசுமை பசுமை எங்கே
      இதற்கு காரணம் நாம் தான்
      மீண்டும் உருவாக்குவோம் இங்கே

பல வருடங்களுக்கு முன்பு பாலித்தீன் என்றால் என்னவென்றே அறியாது இருந்தது சமுதாயம்.  ஆனால் இன்று எங்கும் எதிலும் பாலித்தீன் பரவி, விரவி விட்டது.  இதனை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைத்திடவாவது நாம் முன் வர வேண்டும்.  பழையபடி மஞ்சப்பை தூக்கி செல்வோம் கடைகளுக்கு.  இதில் இழுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்வோம்.
வாழ்க்கை அல்ல வேடிக்கை
      பாலித்தீன் உபயோகம் ஏற்படுத்தும் தீமை
      மாற்று உனது வாடிக்கை!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள்.  எனவே எதையும் அளவோடு பயன்படுத்தினால் பாதிப்பு இல்லை.  எதிலும் அளவு மீறும் போது ஆபத்து நிகழும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
பூமி ஒரு கேணி
      வசந்தத்தை அள்ளி அள்ளி வழங்கும்
      காத்திடுவோம் அதனைப் பேணி
!
பசுமை செழிக்க வறட்சி அழிய ஒரே வழி மரம் நடுவதே என்பதை தொடர்ந்து நூல் முழுவதும் லிமரைக்கூ கவிதைகளால் வடித்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைத்து உள்ளார்கள்.
வறட்சியால் மீளா தொல்லை
      மரங்களை நட்டு மழையை மீட்போம்
      தட்டாதீர் என் சொல்லை.

சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பயனுள்ள பல தகவல்களை, கருத்துக்களை லிமரைக்கூ வடிவில் வடித்து நூலாக்கி வழங்கி வரும் உண்மையான படைப்பாளி முனைவர் மரிய தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  இன்னும் தொடர்ந்து எழுதி சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்துக்கள்.
-- 

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2197
Points : 5027
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 14, 2014 10:53 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Sat Aug 16, 2014 10:07 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2197
Points : 5027
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பச்சைத் தேவதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum