"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் அதன் மாற்றங்களும் அவற்றின் சிகிச்சை முறைகளும் - அறிமுகம் (Chronic Kidney Disease (CKD) – Its progression and treatment)

Go down

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் அதன் மாற்றங்களும் அவற்றின் சிகிச்சை முறைகளும் - அறிமுகம் (Chronic Kidney Disease (CKD) – Its progression and treatment)

Post by RAJABTHEEN on Wed Dec 22, 2010 2:51 am

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதன் மாற்றங்களும் அதன் சிகிச்சை முறைகளும் - ஒரு அறிமுகம்

சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) என்றால் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள். இந்த பாதிப்பு நாள்பட்டதாக இருந்தால் அது முழுமையாக குணமாகப் போவதில்லை. தொடர்ந்து இருக்கும். ஆனால் சரியான சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நீங்கள் முறையான வைத்தியத்தை பிசகாது பின்பற்றுவீர்களானால் உங்கள் பழுதுபட்ட சிறுநீரகங்கள் மேலும் கெடாது பார்த்துக் கொள்ளலாம். மேலும் பல வருடங்கள் நலமாக வாழவும் முடியும்.

நாள்பட்ட நிரந்தர சிறுநீரக செயலிழப்பு ஆங்கிலத்தில் Chronic Kidney disease – CKD என்று அழைக்கப்படுகின்றது.

எப்படி ஒருவருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது?

பல்வேறு காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களின் வேலைத் திறன் 50 சதவிகிதத்திற்கு கீழே குறைந்து விட்டால் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்கள் தொடர்ந்து சேதமடைகின்றன. கூடவே கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன இருந்தால் வேகமாக சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன.
இந்த வரைபடம் நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சிறுநீரகங்களின் செயல்திறன் பல வருடங்களில் எவ்வாறு மாறுகின்றது என்பதைக் காட்டுகின்றது. அவரின் சிறுநீரகங்கள் ஆரம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சரியான சிகிச்சையின் மூலம் சிறுநீரகங்களின் செயல் திறன் சுமார் 30% வரை உயர்ந்தது. ஆனால் சரியான மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்தும் அடுத்த 5 வருடங்களில் அவரது சிறுநீரகங்கள் படிப்படியாக செயலிழந்து முற்றிய செயலிழப்பாக மாறியது. அதன் பின்னர் அவர் டயாலிசிஸ் எனப்படும் செயற்கை சிறுநீரக இயந்திர சுத்தீகரிப்பு சிகிச்சையைத் தொடங்க வேண்டியதாகிவிட்டது.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சையின் மூலம் முற்றிய செயலிழப்பு நிலையை தவிர்க்க முடியுமா? டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க முடியுமா


சில சமயம் முடியும். பல சமயங்களில் முற்றிய சிறுநீரக செயலிழப்பு நிலையை பல வருடம் தள்ளிப் போடவும் முடியும். சிகிச்சை முறைகளில் கீழ் கண்டவை முக்கியமானவை. 1. இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்துவது. இதற்கு பல இரத்த அழுத்த மருந்துகள் தேவைப்படலாம். இவற்றில் ACEI மற்றும் ARB என்ற குழுமத்தை சேர்ந்த மருந்துகள் சிறுநீரகங்களை அதிகபட்சமாக பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே கொடுக்க முடியும். 2. உணவுக் கட்டுப்பாடுகள். 3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல். 4. கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியன.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பின் நிலைகள்

நிலை சிறுநீரக
செயல்திறன் விளக்கம் சிகிச்சை
1 90+ பரிசோதனைகளில் மட்டுமே சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் தொடர் கண்காணிப்பு இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
2 60-90 லேசான சிறுநீரக செயலிழப்பு பரிசோதனையில் மட்டுமே தெரியும் தொடர் கண்காணிப்பு இரத்த அழுத்தக் கட்டுப்பாடு காரணிகள் கண்டுபிடிப்பு
3 30-59 ஓரளவு அதிக சிறுநீரக செயலிழப்பு மேற்கூறியவையே
4 15-29 முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு முற்றிய சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்கு தயார்படுத்துதல்
5 14க்கு கீழ் முற்றிய அல்லது கடைநிலை சிறுநீரக செயலிழப்பு (ESRD) பல சிகிச்சைகள் உள்ளன அதற்குரிய பகுதிகளில் காண்க

தற்போது நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு 5 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருவரது சிறுநீரகங்களின் செயல் திறன் தெரிய வேண்டும். இதை நேரிடையாக அளக்கலாம். அல்லது உங்கள் வயது, எடை, இரத்தத்தில் கிரியேட்டினின் (Creatinine) என்ற வேதிப் பொருளின் அளவு ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடலாம்.

1. 1,2,3 நிலைகளில் உள்ள சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எந்த கஷ்டத்தையும் உணரமாட்டார்கள். 4ஆம் நிலையில்தான் தொந்திரவுகள் ஆரம்பிக்கும். ஆனால் 1,2 ஆம் நிலையில் உள்ளவர்களின் சிறுநீரக செயலிழப்பு படிப்படியாக அதிகரித்து முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாற அதிக வாய்ப்பு உள்ளவர்கள்.

2. மேலும் 1,2 ஆம் நிலைகளில் உள்ளவர்களுக்குக் கூட இரத்தக் குழாய்களை பாதிக்கும் மாரடைப்பு, வாத நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.இவ்விரு ஆபத்துக்களையும் நீங்கள் முறையான மருத்துவ ஆலோசனை / கண்காணிப்பு மூலம் பெருமளவு தடுக்க / தவிர்க்க முடியும். இப்பகுதியில் 1 முதல் 4ஆம் நிலை வரை உள்ள சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஒருவருக்கு எந்த காரணத்தால் சிறுநீரக செயலிழப்பு வந்தது என்பதைப் பொறுத்து சிகிச்சைகள் சற்றே வேறுபடலாம்.

ஆரோக்யமான சிறுநீரகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன?

1.தினமும் உடலில் உண்டாகும் நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுப்புக்களை வடிகட்டி சிறுநீரில் பிரித்து அனுப்பி இரத்தத்தை சுத்தம் செய்கின்றன.
2.நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் உப்புக்களையும் நீரையும் வெளியேற்றுகின்றன.
3.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன.
4.நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை எலும்பு மஜ்ஜையில் இருந்து உற்பத்தி செய்ய தூண்டும் எரித்ரோபாயிட்டின் (சுருக்கமாக எபோ) (Erythropoitin-EPO for short) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. சிறுநீரக செயலிழப்பில் இதன் குறைவால் இரத்த சோகை ஏற்படுகின்றது.
5. கால்சிட்ரியால் (Calcitriol) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து அதன் மூலம் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் ஆகிய சத்துக்கள் சீராக இருக்கும்படி பார்த்துக் கொண்டு எலும்புகளை ஆரோக்யமாக வைக்கின்றன.


6. இரத்தத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை மிகாமல் நடுமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றன.

2 முதல் 4ஆம் நிலையில் உள்ள சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகின்றது?

சில சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு அது எந்த காரணத்தினால் வந்தது என்பதைக் கண்டறிந்து அதற்குறிய பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படும். அது மட்டுமின்றி அடைப்படைக் காரணம் எதுவானாலும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு கீழ்கண்ட பொதுவான சிகிச்சைகள் தேவைப்படும்.

உப்பு நீரும் குறைந்த உணவு முறைகள்

இவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவையும் திரவங்களின் அளவையும் மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டி வரும். சிலருக்கு சிறுநீரை அதிக அளவு வெளியேற்றும் நீர் மாத்திரைகளும் (உதா. லாசிக்ஸ் - Lasix) எடுத்துக் கொள்ள வேண்டி வரும். இதற்கு காரணம் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு அவர்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் உப்பும், நீரும் முழுவதுமாக வெளியேறாமல் உடலில் உப்பு நீர் கோர்த்து கை, கால், வயிறு வீக்கம், நுரையீரல்களில் நீர் கோர்ப்பதால் மூச்சுத் திணறல் ஆகியன ஏற்படலாம். உங்கள் சிறுநீரக மருத்துவர் உங்களுக்குகந்த ஒரு சரியான எடை அளவுக் குறியீட்டைக் குறித்துக் கொடுத்திருப்பார். அந்த எடைக்கு மேல் கூடாமல் நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் திரவங்களின் அளவை (காபி, டீ, மோர் போன்ற பானங்கள் உட்பட) பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் குறிப்பிட்ட சில வகை சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறுநீரின் அளவு குறைவதில்லை. நீர் கோர்ப்பு வருவதில்லை. இரத்த அழுத்தமும் குறைவாக இருக்கும். இவர்கள் உணவில் உப்பும் நீரும் குறைக்க வேண்டியதில்லை. இரத்த அழுத்தம் குறைவாக உள்ள சிலர் அதிக உப்புக் கூட எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் பெரும்பாலானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும் இருக்கும். அதை நன்கு கட்டுப்படுத்தி வைக்க 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி வைப்பது சிறுநீரக செயலிழப்பு. மேலும் அதிகமாகாமல் தடுப்பதில் முக்கியமான சிகிச்சையாகும். அதுமட்டுமின்றி உடலின் மற்ற முக்கிய உறுப்புக்களான இதயம், மூளை ஆகியவற்றையும் அது பாதுகாக்கின்றது. பல வகை இரத்த அழுத்த மருந்துகள் உள்ளன. தனிப்பட்ட ஒரு நோயாளிக்கு பொருந்தும் மருந்துகளை அவரது சிறுநீரக மருத்துவர் பரிந்துரைப்பார். என்றாலும் இவற்றில் - ப்ரில் மற்றும் - டான் என்று முடியும் பெயர் கொண்ட குழுமத்தைச் சேர்ந்த இரத்த அழுத்த மருந்துகள் சிறுநீரகங்களைப் பாதுகாப்பதில் சிறந்தவை. ஆனால் இவற்றை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதிப்பில் உயர் இரத்த அழுத்த சிகிச்சை பற்றி அதற்குறிய பகுதியில் விளக்கமாக காணலாம்.

இரத்த சோகை - அனீமியா (Anemia)

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு அதிலும் முன்னேறிய 3-4ஆம் நிலையில் உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்களுக்கும் இரத்த சோகை (இரத்தத்தில் சிவப்பணுக்களின் குறைவு) கண்டிப்பாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் பிரதான காரணம் எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டச் செய்யும் எரித்ரோபாயிட்டின் (Erythropoietin) என்ற ஹார்மோன் சத்தின் குறைவே ஆகும். பல சமயங்களில் இரத்த சோகையின் ஆரம்பக் கட்டங்களில் இரும்புச் சத்து மாத்திரைகள், விட்டமின் மாத்திரைகள் சிலருக்கு பலனளிக்கலாம்.

சிலருக்கு இரும்புச் சத்தை ஊசியாக செலுத்தினால் மட்டுமே பலனளிக்கும். இந்த சிகிச்சைகளால் இரத்த சோகை சரியாகாவிட்டால் எரித்ரோபாயிட்டின் சத்தை ஊசியாக செலுத்தினால் சிறுநீரக செயலிழப்பு நோயாளியின் உடலில் இரத்த தானாகவே ஊறும். தோலுக்கு அடியில் வாரம் 1-3 முறை இந்த எரித்ரோபாயிட்டின் ஊசியை இன்சுலின் ஊசி போல நோயாளிகள் வீட்டிலிருந்தே போடக் கூட பழகிக் கொள்ளலாம்.

சிறுநீரக செயலிழப்பில் இரத்த சோகை பற்றிய மேலும் விபரங்களை அதற்குரிய பகுதியில் காண்க.

சிறுநீரக செயலிழப்பில் எலும்புகள் பாதிப்பு

நீண்ட காலம் 3 ஆம் நிலைக்கு மேல் சிறுநீரக செயலிழப்பு இருந்தவர்களுக்கு அவர்களின் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்படலாம். இதனால் எலும்புகள், தசைகளில் வலி, குடைச்சல், சில சமயம் எலும்பு முறிவு ஆகியன ஏற்படலாம். சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் தங்கள் எலும்புகளை பாதிப்பிற்கு உள்ளாமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது. பொதுவாக சிறுநீரக செயலிழப்பில் இரத்தத்தில் கால்சியம் குறைவாகவும், பாஸ்பேட் சத்து அதிகமாகவும் இருக்கும். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகும் கால்சிட்ரியால் (Calcitriol) என்ற ஹார்மோன் குறைவு, பாராதார்மோன் (Paratharmone) என்ற ஹார்மோன் சத்து அதிகமாக உற்பத்தியாகுதல், உணவில் குறைபாடு என்று இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு நீங்கள் கீழ்கண்ட மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

1. கால்சிட்ரியால், ஆல்பா கால்சிடால் என்ற விட்டமின் D யின் தூண்டப்பட்ட வடிவங்கள். சிறுநீரக செயலிழப்பின் இதன் உற்பத்தி குறைவாக இருக்கும்.

2. கால்சியம் சத்து மாத்திரைகள் - இந்தியாவில் பெரும்பாலான சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது. இவர்களுக்கு கால்சியம் சத்து மாத்திரைகளாக கொடுக்க வேண்டி வரலாம்.

3. பாஸ்பேட் சத்துக் கட்டுப்பாட்டு மருந்துகள் - உதாரணம் கால்சியம் அசிடேட், லாந்தானம், செவாலெமெர் போன்ற மருந்துகள், இவற்றை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உணவிலுள்ள பாஸ்பேட் சத்தை குடலிருந்து கிரகிக்காமல் தடுக்க வல்லவை. மேலும் உணவிலும் பாஸ்பேட் சத்தின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டி வரும்.

நீங்கள் உண்ணும் உணவில் பாஸ்பேட் சத்தை எவ்வாறு குறைப்பது என்று அதற்குரிய பகுதியில் காண்க.

உணவு முறை மாற்றங்கள்

உங்கள் சிறுநீரக செயலிழப்பின் தீவிரத்தைப் பொறுத்து நீர், சோடியம் (சாதாரண மேஜை உப்பு), பொட்டாசியம், பாஸ்பேட், கொலஸ்டிரால், புரதம் ஆகிய சத்துக்கள் வரையறுக்கப்பட்ட ஒரு உணவுத் திட்டத்தை உங்கள் சிறுநீரக மருத்துவர் வகுத்துக் கொடுத்திருப்பார். ஒவ்வொருவருக்கும் உணவு முறைகள் மாறும். மேலும் காலம் செல்லச் செல்ல சிறுநீரக செயலிழப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும் உங்கள் உணவு முறையில் மாற்றங்கள் செய்யப்படும். உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் அதே சமயம் சரியான ஊட்டச் சத்தை எடுத்துக் கொள்ளாமல் உடல் நலிந்து விடவும் கூடாது. இதற்கு சிறுநீரக வியாதிகளில் அனுபவம் பெற்ற உணவியல் நிபுணர் / சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.

சிறுநீரக வியாதியில் உணவு மாற்றங்களைப் பற்றி மேலும் தெளிவாக அதற்குரிய பகுதிகளில் காணலாம்.

இரத்தத்தில் அமிலத் தன்மை

3-4ஆம் நிலையிலுள்ள சில சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் பழுதுபட்ட சிறுநீரகங்களால் இரத்தத்தில் அமிலத் தன்மையை அதிகப்படுத்தும் சில கழிவுப்புக்களை சமன் செய்ய முடிவதில்லை. இத்தகையவர்களுக்கு சோடியம்-பை-கார்பனேட் எனப்படும் காரச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இவர்கள் முடிந்த வரை அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளுதல்

சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு இதய நோய் (மாரடைப்பு), மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) போன்றவை வர மற்றவர்களை விட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் புகைப்பிடிப்பதை கை விடுதல், தினசரி உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆரோக்யமான உணவு முறை ஆகியவற்றையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். தவிர மாரடைப்பு வரும் வாய்ப்பை குறைக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளையும், இரத்தத்தில் கொலஸ்டிராலை குறைக்க உதவும் மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்

நீங்கள் சிறுநீரக செயலிழப்பின் 3-4 ஆம் நிலையை அடைந்த பின்னர் ஒவ்வொரு முறை சிறுநீரக மருத்துவரைக் காணச் செல்லும் போதும் கீழ்கண்டவற்றை பரிசோதித்து மதிப்பிட்டு சமன் செய்வார்.

• உடலில் நீர் கோர்ப்புத் தன்மை
• இரத்தத்தில் பல்வித உப்புக்களின் அளவு
• இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
• உணவு முறைகள் மற்றும் உங்கள் ஊட்டச் சத்து சரியாக உள்ளதா
• இரத்த சோகை
• எலும்புகளுக்கான கால்சியம் பாஸ்பேட் முதலான பரிசோதனைகள்
• இதய நோய், இரத்தக்குழாய் நோய்களை தடுக்கும் முறைகள்

நீங்கள் சிறுநீரக செயலிழப்பின் 3-4ஆம் நிலையை அடைந்த பின்னர் ஒவ்வொரு முறை சிறுநீரக மருத்துவரைக் காணச் செல்லும் போதும் கீழ்கண்டவற்றை பரிசோதித்து மதிப்பிட்டு சமன் செய்வார்.

• உடலில் நீர் கோர்ப்புத் தன்மை
• இரத்தத்தில் பல்வித உப்புக்களின் அளவு
• இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
• உணவு முறைகள் மற்றும் உங்கள் ஊட்டச்சத்து சரியாக உள்ளதா
• இரத்த சோகை
• எலும்புகளுக்கான கால்சியம் பாஸ்பேட் முதலான பரிசோதனைகள்
• இதய நோய், இரத்தக்குழாய் நோய்களை தடுக்கும் முறைகள்

இது தவிர என் பங்கிற்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும் உள்ளதா?

• புகைப் பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதைக் கண்டிப்பாக கை விடவும்.
• வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். முக்கியமாக நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் மருந்துக் கடைக்குச் சென்று மருத்துவரின் சீட்டு இல்லாமல் எந்த மருந்தை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலைமை உள்ளது. இதில் NSAID என்ற குழுமத்தை சேர்ந்த ப்ரூபென், வோவிரான், னைஸ் போன்ற வலி நிவாரண மாத்திரைகள் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மேலும் அதிகமாக பாதிக்கும் தன்மை உள்ளவை. சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் சிறுநீரக மருத்துவரின் அனுமதியின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
• பொதுவாக ஆரோக்யமான உணவு முறையையும் உங்களுக்கென்று வகுக்கப்பட்ட சிறப்பு உணவுத் திட்டத்தையும் தவறாமல் பின்பற்றவும்.
• தினந்தோறும் உங்கள் உடல்நிலையைப் பொறுத்து தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
• உங்கள் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டின் குறியீடுகளைப் பற்றி அறிந்திருங்கள். உங்கள் இரத்த அழுத்தத்தை அடிக்கடி பார்த்து மருத்துவரைக் கலந்து தேவையான மாற்றங்களைச் செய்து நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum