"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உயர் இரத்த அழுத்தமும் சீறுநீரக வியாதியும்-அறிமுகம் Blood pressure and Kidney - Introduction

Go down

உயர் இரத்த அழுத்தமும் சீறுநீரக வியாதியும்-அறிமுகம் Blood pressure and Kidney - Introduction

Post by RAJABTHEEN on Wed Dec 22, 2010 2:56 am

சிறுநீரக வியாதியும் உயர் இரத்த அழுத்தமும்

நாம் அனைவரும் அவரவரது இரத்த அழுத்தத்தின் அளவைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம் முக்கியமான உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றிற்கு செல்லும் இரத்தக் குழாய்களைப் பாதித்தால் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். ஆனால் தற்போது உயர் அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரக வியாதி உள்ளவர்கள் அனைவரும் தங்கள் இரத்த அழுத்தத்தையும் பரிசோதிக்க வேண்டும். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.


1.பலவகை சிறுநீரக பாதிப்புகளில் உயர் இரத்த அழுத்தம் வரலாம். சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கு 70 – 100% வரை உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
2. உயர் இரத்த அழுத்தம் பாதித்த சிறுநீரகங்களை மேலும் பாதித்து வேகமாக செயலிழக்கச் செய்யும்.
3. சிறுநீரக செயலிழப்பும் உயர் இரத்த அழுத்தமும் உள்ளவர்கள் மாரடைப்பு, மூளை இரத்தக்குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளவர்கள்.
உயர் இரத்த அழுத்தத்தால் என்ன ஆபத்து ?

உயர் இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தால் ஒழிய உடலிற்கு எந்த தொந்திரவையும் தருவதில்லை. இருப்பதே தெரியாது. ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாரடைப்பு, மூளை இரத்த குழாய் பாதிப்பு (வாத நோய்), சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) போன்ற இரத்தக்குழாய்களைப் பாதிக்கும் நோய்களுக்கு பல மடங்கு அதிகமாக உள்ளாகின்றனர். அதிலும் இந்தியர்களுக்கு மற்ற இனத்தவர்களை விட அதிக வாயப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தின் காரணம் என்ன?

90% உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு காரணம் ஏதும் தெரிவதில்லை. மீதமுள்ள10% பேரில் பெருபாலானவர்களுக்கு சிறுநீரகங்களில் ஏதேனும் பாதிப்போ அல்லது சிறுநீரகங்களில் தமனிகளில் சுருக்கமோ (அடைப்போ) இருக்க வாய்ப்புள்ளது. சுமார் 1% பேருக்கு அபூர்வமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவைகளும் சிறுநீரகங்கள் மூலமே உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகின்றன. சிறு வயதிலேயே (40 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் வந்தவர்கள், மிக அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக உள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறுநீரக பாதிப்பு மூல காரணமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அனைவரும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

சில எளிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. லேசான உயர இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த மாற்றங்களே கூட போதுமானதாக இருக்கலாம் மேலும் இந்த மாற்றங்கள் இரத்த அழுத்த மருந்துகளின் எண்ணிக்கையையும், அளவையும் குறைக்க உதவும்.

1. உணவில் உப்பு- நம் பாரம்பரிய உணவுகளில் அவ்வளவு உப்பு கிடையாது. ஆனால் மாறி வரும் கலாட்சார சூழலில் நாம், முக்கியமாக இளைய தலைமுறையினர், அதிக அளவு மேற்கத்திய உணவுவகைகளை எடுத்துக்கொள்கிறோம். உப்பு அதிகமுள்ள துரித உணவுகளை (fast food) பீட்சா போன்ற இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நம்மையறியாமலே அதிக உப்பு உடலிற்குள் சென்று விடுகின்றன. இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் உணவை சமைக்கும் போதே உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

2. அதிக எடை – உடல் குண்டாக இருப்பவர்கள் எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தமும் குறையும்.

3. உடற்பயிற்சி – தினமும் அரை மணி நேரப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இரத்த அழுத்தம் குறைவது மட்டுமின்றி உடல் பல வகைகளில் ஆரோக்யம் பெறும்.

4. புகையிலையை தவிர்த்தல் - புகை பிடிப்பது மட்டுமல்லாமல், முக்குப் பொடி, பான்பராக் போன்ற பல வழிகளிலும் புகையிலையை உபயோகித்தல் நம் இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் எலாஸ்டிக் தன்மையை பாழ்படுத்தி விடுகின்றன. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது மட்டுமின்றி, இரத்தக் குழாய்கள் அடைத்து கொள்வதால் மாரமைப்பு, வாத நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைத்தல், அதிகக் கொழுப்பைக் குறைத்தல், உடல் எடையைக் குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், புகை பிடித்தலைக் கைவிடுதல் ஆகிய ஆரோக்கியமான மாற்றங்கள் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி அதனால் வரும் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.

எனக்கு மாத்திரைகள் தேவைப்பட்டால்

உங்கள் உயர் இரத்த அழுத்தம் கடுமையானதாக இருந்தால் மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டி வரும். கடந்த 20 வருடங்களில் உயர் இரத்த அழுத்த மருத்துவத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது 8 குழுமங்களைச் சேர்ந்த மருத்துகள் கிடைக்கின்றன இன்னும் பல நவீன வகை மருந்துகளும் வரப்போகின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது மற்ற பாதிப்புகள், வயது ஆகியவற்றைக் கணித்து இரத்த அழுத்த மருந்துகளை அவரது மருத்துவர் முடிவு செய்வார்.

இரத்த அழுத்தம் எவ்வளவிற்கு இருக்க வேண்டும்.

தற்போது உள்ள கோட்பாடுகளின்படி இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்றே சொல்லபடுகின்றது. அதிலும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். இதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மருந்துகள் தேவைப்படலாம். சிறுநீரக செயலிழப்பு உள்ள சிலருக்கு 4 - 6 மருந்துகள் கூட தேவைப்படலாம். சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களின் இரத்த அழுத்தம் 130 / 80க்குள் இருக்க வேண்டும். அதிலும் அதிக புரத ஒழுக்கு (protein in urine) உள்ளவர்களுக்கு 120 / 75க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஒருவரின் வயது, மருந்துகள் ஒத்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சில சமயம் இவை தளர்த்தப்படலாம்.

இரத்த அழுத்த மருந்துகள் ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?

தற்போதுள்ள பல வகை நவீன இரத்த அழுத்த மருந்துகள் பாதுகாப்பானவை. எந்த ஒரு தனி நபருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இரத்த அழுத்த மருந்துகளை தேர்ந்தெடுப்பது இப்போது எளிது. சில சமயம் மருந்துகளால் வரும் சிறிய தொந்திரவுகளை அதனால் கிடைக்கும் பெரிய நன்மைகளை கருதி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது தான் நல்லது. எதுவானாலும் மருந்துகளால் ஏதேனும் தொந்திரவு உள்ளதாக தோன்றினால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

இரத்த அழுத்த மருந்துகளை பின்னாளில் நிறுத்த முடியுமா?

பொதுவாக இரத்த மருந்துகள் ஆயுட்காலம் வரை எடுக்க வேண்டியவை. ஆனால் காலாப்போக்கில் பல விஷயங்கள் பின்னாளில் மாறலாம். உங்கள் மருந்துகளைக் குறைக்கவோ, கூட்டவோ அல்லது மாற்றவோ வேண்டி வரலாம்.

சிறுநீரக செயலிழப்பு உள்ள சிலருக்கு அது படிப்படியே அதிகரித்து கடைசியில் டயாலிசிஸ் சிகிச்கை தொடங்க வேண்டி வரலாம். அப்போது சிலருக்கு இரத்த அழுத்தம் நன்கு குறைத்து இரத்த அழுத்த மருந்துகளையே நிறுத்த வேண்டி வருவதுண்டு. ஆனால் இந்த டயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்கவே நாம் இவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதை நினைவில் வைத்திருந்து ஆரம்பத்திலிருந்தே உயர் இரத்த

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 96
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum