"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சிறுநீரில் இரத்தமாக போகுதல் – ( Blood in Urine )

Go down

சிறுநீரில் இரத்தமாக போகுதல் – ( Blood in Urine )

Post by RAJABTHEEN on Wed Dec 22, 2010 3:01 am
சிறுநீரில் இரத்தமாக போகுதல்
(Hematuria-Blood in Urine)

சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன?

பல காரணங்களால் சிறுநீரில் இரத்த சிவப்பு அணுக்கள் கலந்து வருவதை
சிறுநீரில் இரத்தம் அல்லது ஹெமச்சூரியா (Heamaturia) என்று ஆங்கிலத்தில்
சொல்கின்றோம். பெரும்பாலும் இது கண்ணுக்கு தெரியாத அளவு சிறுநீர்ப் பரிசோதனையில்
உருப்பெருக்கியிலோ அல்லது டிப்ஸ்டிக்ஸ் (Dipstix) எனப்படும் பரிசோதனையில் மட்டுமே
கண்டுபிடிக்கப்படும். சில சமயம் சிறுநீரில் அதிக இரத்தம் போகும் போது சிறுநீர்
சிவப்பாகவோ அல்லது பழுப்பு (பாலில்லாத டீ) கலரிலோ
போகலாம்.

சிறுநீரில் இரத்தம் போவதன் காரணங்கள் என்னென்ன?

பொதுவாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் (Red Blood Cells) வெளியே
வருவதில்லை. இவை சிறுநீரகங்களின் வடிகட்டியில் தடுக்கப்பட்டு விடுகின்றன.
சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்து
வேண்டுமானாலும் வரலாம்.

கீழ்கண்டவை சில காரணங்கள்

சிறுநீரகங்களின் வடிகட்டிகளில் அழற்சி (சிறுநீரக
நுண்தமனி அழற்சி Glomerulonephritis)
சிறுநீரகங்களில் நீர்க் கட்டிகள் (Cysts in
Kidney)
சிறுநீரகங்களில் சாதாரண கட்டிகள், புற்று நோய்க் கட்டிகள் (Benign and
Cancerous tumours in Kidney)
சிறுநீரகங்களில் கற்கள் (Kidney
Stones)
சிறுநீரகங்களில் கிருமித் தாக்கம் (Kidney
Infections)
சிறுநீரகங்களைப் பாதிக்கும் சில பரம்பரை வியாதிகள் (Inherited
disorders of Kidney)
உள்சிறுநீர்க் குழாய்களில் கற்கள், கட்டிகள், கிருமி
பாதிப்புகள்
(Stones, tumours, infections of Ureters)
சிறுநீர்ப்பையில்
கற்கள், கட்டிகள், கிருமித் தாக்கம் (Stones, tumours, infections of Bladder)

ப்ராஸ்டேட் சுரப்பியில் கட்டி, கிருமி, கல் (Swelling, Infection and stone in
Prostate Gland)
அபூர்வமாக இரத்த உறைவில் குறைபாட்டு நோய்களாலும், இரத்த உறைவை
தடுக்கும் சில மருந்துகளாலும் (உதாரணம்-சில இதய நோய்களுக்கு தரப்படும் வார்பாரின்-
Warfarin) வரலாம்.

சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் இருப்பதாக
கண்டுபிடிக்கப்பட்டால் அது எப்போதும் ஆபத்தானதா?

சிறுநீரில் இரத்தம் கீழ்கண்ட சமயங்களில் மட்டும் அவ்வளவு
முக்கியமானதில்லை.

-பெண்கள் மாத விடாய் சமயத்தில் செய்யப்பட்ட சிறுநீர்ப்
பரிசோதனை
-சிறுநீரில் கிருமித் தாக்கத்தின் போது செய்யப்பட்ட சிறுநீர்ப்
பரிசோதனை
-நன்கு தெரிந்த சிறுநீரை சிவப்பாக்குகின்ற சில மருந்துகளை எடுக்கும்
போது (உதாரணம்-ரிபாம்பிசின்- Rifampicin)
-அதீத உடற்பயிற்சியின் போது மட்டும்
வருகின்றது.

இதை அறிந்து கொள்ள என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?

சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்ட
பின்னர் சிலருக்கு கீழ்கண்ட பரிசோதனைகள் தேவைப்படும்.
இரத்தத்தில் முழு
அணுக்களின் சோதனை.

சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை அறிய உதவும் யூரியா,
கிரியேட்டினின் போன்ற பரிசோதனைகள்.

சிறுநீரில் புரதம் மற்றும் கிருமி உள்ளதா என்பதை அறிய
உதவும் பரிசோதனைகள்(Urine Culture)

சிறுநீரகங்களில் கட்டிகள், கற்கள் உள்ளதா என்பதை அறிய
உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கான்

சில சமயம் சிறுநீரகப்பை சிறுநீர்க் குழாய்களை
உள்ளிருந்து பார்க்க உதவும் சிறுநீரக உள்நோக்கி கருவி பரிசோதனை (சிஸ்டோஸ்கோபி-
Cystoscopy)

இவைகளும் தனிப்பட்ட நோயாளியின் உடல்நிலையை அனுசரித்து
தேவைக்கு தகுந்தபடி செய்யப்படும். இவைகளில் எல்லாம் காரணத்தைக் கண்டுபிடிக்க
முடியாவிட்டால் சிலருக்கு சிறுநீரக சதைக் துணுக்கு பரிசோதனை (கிட்னி பயாப்ஸி-
Kidney Biopsy) தேவைப்படும். அதிலும் சிறுநீரில் புரதம், சிறுநீரக செயலிழப்பு,
சிறுநீரக உயர் இரத்த அழுத்தம் ஆகியன உள்ளவர்களுக்கு முக்கியமாக தேவைப்படலாம்.

பார்க்க-சிறுநீரக சதை துணுக்கு பரிசோதனை

சிறுநீரில் இரத்த சிவப்பணுக்களுக்கு என்ன சிகிச்சை
தேவைப்படும்?

சிறுநீரில் இரத்தம் என்பதற்கு என்று தனியாக சிகிச்சை
தேவையில்லை. ஆனால் அது எதனால் வந்தது என்று அறிந்து மூல காரணத்தை சரியாக சிகிச்சை
செய்ய வேண்டும்.

சிறுநீரில் இரத்தத்திற்கு காரணம் எதுவும் கண்டு
பிடிக்காவிட்டால் என்ன செய்வது?

சில சமயம் எல்லா பரிசோதனைகளுக்கு பின்பும் சிலருக்கு
சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இவர்களுக்கு
தனிப்பட்ட சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆனால் சில மாதங்களுக்கு மாதா மாதம்
சிறுநீர்ப் பரிசோதனை, இரத்த அழுத்தம் அவ்வப்போது சிறுநீரக செயல்திறன் பரிசோதனைகள்
சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் செய்து பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
இது பின்னாளில் தெரிய வரும் சில ஆபத்தான சிறுநீரக வியாதிகள் இல்லை என்பதை உறுதி
செய்து கொள்ளத்தான்.

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum