"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Today at 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 4:18 pm

» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 18, 2017 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

View previous topic View next topic Go down

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Fri Jul 25, 2014 10:02 pm

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2
நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26.  அலைபேசி : 98410 42949,  விலை : ரூ. 150.  பக்கம் : 208
*****
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது.  கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  இப்படித்தான் பல இணையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  வெகு சிலர் மட்டுமே இரண்டு பேரும் இலக்கிய ஆர்வமுள்ள இணையர்களாக இருக்கிறார்கள்.  தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் என்ற இலக்கிய இணையர் வரிசையில் புதுகை மு. தருமராசன் அவர்களையும் பேராசிரியர் பானுமதி அவர்களையும் சேர்க்கலாம்.  புதுகைத்தென்றல் என்ற மாத இதழின் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் மனைவி என்பதற்காக வாய்ப்பு வழங்காமல் எழுத்தின் வலிமை கண்டு உணர்ந்து புதுகைத் தென்றலில் தொடராக பிரசுரிக்க வாய்ப்பு வழங்கி அதனை தொகுத்து நூலாகவும் பதிப்பித்தவருக்கு பாராட்டுக்கள்.
பெண் குழந்தை பிறந்தால் பேதலிக்கும் அனைவரும், இந்த நூல் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். பெண்ணின் பெருமையை, ஆற்றலை, தியாகத்தை, உழைப்பை, புகழை, போராட்டகுணத்தை, துணிவை, வீரத்தை, இலட்சிய வேட்கையை, தாகத்தை உணர்த்தும் உன்னத நூல் இது.
16 கட்டுரைகளிலும் தொடக்கமாக சதுரத்திற்குள் சிறு குறிப்பு உள்ளது.  அதனைப் படிக்கும் போதே முழுவதையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார்கள்.  சிறு சுருக்கமே அவர்கள் யார் என்ற பிம்பத்தை வாசகர்களுக்கு உணர்த்தி விடுகின்றன.
கவிக்குயில் சரோஜினி தேவி தொடங்கி இரமணி நல்லதம்பி வரை 16 வைர மங்கையரின் வரலாற்றை ஆய்வுக்கட்டுரை போல பதிவு செய்துள்ளார்கள்.
காந்தியடிகள் பாராட்டிய கவிக்குயில் சரோஜினிதேவி என்பது மட்டுமே அறிந்த எனக்கு அவர் பற்றிய சுருக்க வரலாறு படித்து வியந்து விட்டேன்.  நூலில் உள்ள வரலாற்றில் இருந்து சில வரிகள் இதோ! 
கவிக்குயில் சரோஜினிதேவி (1879-1949) இப்படி ஒவ்வொருவருக்கும் பிறப்பு, இறப்பு ஆண்டுகளை எழுதி இருப்பதிலிருந்தே வரலாற்றின் நுட்பத்தை உணர முடிகின்றது.  15வது கட்டுரையான மணலூர் மணியம்மாள் அவர்களின் பிறப்பு ஆண்டு விடுபட்டு உள்ளது.  அடுத்த பதிப்பில் சேர்த்து விடுங்கள்.
“கவிக்குயில் சரோசினி தேவி” கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறு குறிப்பு :
“பாரத கோகிலம் என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர்.  இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர்.  தொண்டாற்றியவர்.  வெளிநாடுகளில் இந்திய சுதந்திரத்திற்காக வாதாடியவர்.  இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி, உப்பு அறப்போர் வீராங்கனை.  சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்”.
திருமணத்திற்குப் பின்னர் சரோஜினி ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்தார். ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்குச் சென்றார்.  தாஜ்மகால் விடுதியில் தங்கிப் பல கவிதைகள் எழுதினார்.  மக்கள் இவரை ‘கவியரசி’, ‘கவிக்குயில்’ என்று போற்றினர்.
இன்றும் பல பெண் கவிஞர்கள் திருமணமானதும் கவிதை எழுதுவதையே விட்டு விடுகின்றனர். கவிக்குயில் சரோஜினிதேவி  போல திருமணமான பின்னும் கவிதை எழுதிட வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                          
வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
பதக்கம் வேண்டாம் :  அதில் பஞ்சாப் இராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகளை விளக்கினார். அக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம், தமக்களித்த ‘கெய்சரிஹிந்த் என்ற பதக்கத்தை அணிந்து கொள்ள முடியாது என்று கூறி அதைத் திரும்ப அனுப்பி விட்டார்.  ‘இந்தப் பதக்கத்தை அணிந்து கொள்வது என் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு என்று தெரிவித்தார்.  இச்செய்கை நாட்டில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  அவரைப் போன்றே பலரும் பட்டம் பதவிகளைத் துறந்தனர்.  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நெஞ்சில் துணிவுடன், நேர்மை திறத்துடன் சரோஜினி தேவி விளங்கினார் என்ற வரலாறு படிக்கப் படிக்க பெண்ணின் பெருமையை மேலும் மேலும் உயர்த்துவதாக நூல் உள்ளது.  நூலாசிரியர் பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு கட்டுரை எழுதுவதற்கு அவர்கள் எவ்வளவு தேடுகிறார்கள்.  எவ்வளவு திரட்டுகிறார்கள் என எண்ணும் போது பிரமிப்பாக உள்ளது.  புள்ளி விபரங்களும் மிக நுட்பமாக வைர மங்கையரின் வரலாறு ஆய்வுக்கட்டுரை என சிறப்பாக வடித்து உள்ளார்கள்.     
சுதந்திரப் போராட்டம் என்பது எத்தனை பேரின் தியாகத்தால் குறிப்பாக பல பெண்களின் அளப்பரிய தியாகத்தால் வந்தது என்பதை நூல் நன்கு உணர்த்தி உள்ளது.  பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும்.
கடலூர் அஞ்சலையம்மாள் (1890-1961)
‘நீல் சிலை அகற்றும் போராட்டத்தின் போது அஞ்சலையம்மாளுக்கு கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  அவரது மகள் ஒன்பது வயதுச் சிறுமி அம்மாக்கண்ணு நான்கு ஆண்டுகள் சென்னையில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.  அஞ்சலை அம்மாளின் கணவர் முருகப்ப படையாட்சியும் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.  கர்ம வீரர் காமராசரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்ற செய்தியும், மேலும் காமராசர், காந்தியடிகளிடம் 1927ஆம் ஆண்டு ஆதரவு கேட்டார் என்ற செய்தியும் நூலில் உள்ளது.
இப்படி குடும்பம் குடும்பமாக சிறை சென்றனர். ஒரே அறையில் கழிவறையும் இருக்கும், வெளியே வர முடியாத கொடுமையான சிறை, தில்லையாடி வள்ளியம்மையும் இதுபோன்ற கொடுமை அனுபவித்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது.  கடுங்காவல் சிறை என்றால் மிகவும் கொடூரமானது.  இவ்வளவு கொடுமைகள் அனுபவித்து பெற்றுத் தந்த விடுதலையை நாம் மதிக்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல பெண்மணிகள் தியாகம் செய்துள்ளனர். 
இந்த நூலில் 16 வைர மங்கையரின் வீர வரலாறு நமக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது.  இன்றைய பெண்கள் அனைவரும் சிந்தனையை சிதைக்கும் தொலைக்காட்சிச் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரயம் செய்வதை விடுத்து இதுபோன்ற நூல்களை படித்து சிந்தையை சிறப்பாக்க முன் வர வேண்டும்.   
*****

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2115
Points : 4781
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum