"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெட்ரோல் குரங்கு!
by அ.இராமநாதன் Today at 5:34 pm

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by அ.இராமநாதன் Today at 2:16 pm

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by அ.இராமநாதன் Today at 2:15 pm

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 2:13 pm

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by அ.இராமநாதன் Today at 2:10 pm

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Today at 2:09 pm

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’ சிவா டைரக்டு செய்கிறார்
by அ.இராமநாதன் Today at 11:58 am

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:21 am

» குரு உட்சத்துல இருக்காரு
by அ.இராமநாதன் Today at 10:18 am

» 30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
by அ.இராமநாதன் Today at 10:10 am

» 30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
by அ.இராமநாதன் Today at 10:09 am

» ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:57 pm

» என் ATM ஊர்ல இல்ல...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:54 pm

» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 21, 2017 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Nov 21, 2017 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sun Oct 05, 2014 9:19 pm

பாக்கெட்டில் உறங்கும் நதி !

நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அகநி வெளியீடு ,எண் 3.பாடசாலை வீதி ,அம்மையப்பட்டு ,வந்தவாசி .604408. பேச  94443 60421. விலை ரூபாய் 25.

இனிய நண்பர்  மு .முருகேஷ் அவர்களிடம் அறிமுகம்  ஆனவர்கள் மட்டுமன்றி அறிமுகம்  இல்லாத யார் கேட்டாலும் கூட ஹைக்கூ நூல் என்றால் உடன் அணிந்துரை தந்துவிடுவார் .அந்த அளவிற்கு ஹைக்கூ மீது பற்றும் ,பாசமும் உள்ளவர் .இந்த நூல் மு .முருகேஷ் அவர்களின் பதிப்பகமான அகநி வெளியீடாக வந்து இருப்பதால் அவரது அணிந்துரை கூடுதல் கம்பீரமாக உள்ளது.  கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின்  அணிந்துரையும் மிக நன்று .

நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்கள் சமுதாயத்தை உற்று நோக்கி சமுதாய அவலங்களைச் சாடி ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய கொடூரமான தமிழினப் படுகொலையை யாராலும் மறக்க முடியாது .மன்னிக்கவும் முடியாது. அதனை நினைவூட்டுக் ஹைக்கூ ஒன்று .

முளைத்து நின்றன 
புதைக்கப்பட்ட எலும்புகள் 
ஈழத்து மண் !

உணவகங்களிலும் , விருந்துகளிலும் , இல்லங்களிலும் பரிமாறும் உணவுகளை ருசித்து உண்கிறோம் ஆனால் அதில் உள்ள சமையல் செய்தவர்களின் உழைப்பை நாம் உணருவதில்லை அதனை நன்கு   உணர்த்தும் ஹைக்கூ நன்று .

அடுப்பங்கரையில் 
இரத்தம் சுண்டியது 
சமையல் தொழிலாளி !

வழி மேல் விழி வைத்து காத்து இருப்பதை படித்து இருக்கிறோம் இவர் சற்று வித்தியாசமாக காட்சிப் படுத்தி உள்ளார் பாருங்கள் .

கடலுக்கு சென்ற கணவன் 
கலங்கரை விளக்காய் 
மீனவச்சி கண்கள் ! 

இன்று தமிழக மீனவர்கள் அனைவரின் மனைவியும் வழி மேல் விழி வைத்தே காத்து இருக்கின்றனர் .காரணம் இலங்கை சிங்கள இனவெறி பிடித்த இராணுவம்  மீனவர்களை தாக்குவது ,சிறைபிடிப்பது, படகுகளைக்   கைப்பற்றுவது   தினமும் செய்து கொண்டே இருக்கிறது. தட்டிக் ஏகேட்க்க நாதி இல்லை .மத்தியில் ஆட்சி மாறியபோதும் கடலில்  காட்சி மாறவில்லை .சென்ற மீனவன் மீனோடு திரும்புவது அதிசியமாகி விட்டது .

அன்று காந்தி ,காமராசர் ,கக்கன் ,அண்ணா போன்ற நேர்மையானவர்கள் அரசியலில் இருந்தார்கள் இன்று அரசியலில் நேர்மை கேள்விக்குறியானது .ஊழல் மலிந்து விட்டது .எங்கும் எதிலும்  ஊழல் என்றானது .ஊழல் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்று நிருபித்து வருகின்றனர் .எள்ளல் சுவையுடன் உள்ளல் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

ஒலிம்பிக்கில் 
முதலிடம் பெறும் இந்தியா 
ஊழல் போட்டி !

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமிதம் கொண்டோம் அன்று .ஆனால் இன்று  மக்களாட்சியே கேலிக் கூத்தாகி வருகின்றது .வாக்களிக்க பணம் வழங்கும் அவலம் .பணம் தந்து வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலை .சின்ன மீன் போட்டு பெரிய மீன் எடுக்கும் வேலை செய்கின்றனர் .தேர்தல் அவலம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

ஐந்தாண்டுகளில் 
கட்சிகள் செய்தது 
ஓட்டுக்கு ரூ 500.

பெரியார் பிறந்த மண்ணில் இன்று மூடநம்பிக்கைகள் பெருகி விட்டது வேதனை தருகின்றது .பேய்ப்படம் எடுத்து பணம் சேர்க்கும் அவல நிலை சிலருக்கு .போட்டிப் போட்டு பேய்ப்படம் எடுக்கின்றனர். இராசிபலன் பார்ப்பது ,சாமியார்களை நம்புவது ஏமாறுவது தொடர்கதையாகின்றது . மூடநம்பிக்கை சாடி வடித்த ஹைக்கூ நன்று. சிந்திக்க வைக்கும் .

குழந்தை வரம் வேண்டி 
மரத்தில் தொட்டில் 
பெருங்காற்றில் விழுந்த மரம் !

ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பதும் மூட நம்பிக்கைதான். ஆங்கில வழி படித்து விட்டு சுயமாக சிந்திக்கத்  தெரியாதவர்கள் உண்டு. ஆனால் தாய் மொழியான தமிழ் வழி பயின்று உச்சம் தொட்டவர்கள் பலர் .

அறிவல்ல ஆங்கிலம் 
மொழி 
அவ்வளவே !

குலத்தொழில் விடுத்து அனைவரும் கல்வி கற்க வேண்டும் .பதவிகள் பெற வேண்டும் ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் .என்பதே மனித நேய ஆர்வலர்களின் விருப்பம். குலத்தொழில் ஒழிக்க உரக்கக் குரல் தந்துள்ளார் .

பறையடித்த தாத்தா 
பறையடித்த அப்பா 
திருப்பி அடிக்க நான் !

அடித்தால்தானே திருப்பி அடிக்க வேண்டும் .யாரும் யாரையும் அடித்தல் கூடாது .வன்முறை நன்முறை அன்று .

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக யார் எப்படி அழிந்தால் என்ன என்று நினைப்பது மனிதநேயமன்று .அணு உலை என்பது ஆபத்து என்று வளர்ந்த நாடுகள் மூடி வருகின்றனர் .ஆனால் நம் நாட்டில் மேலும் மேலும் அணு உலைகள் திறந்து வருகின்றனர் . 

அடிவயிற்றில் 
அணுக்கழிவுகள் 
தலைமுறை சமாதி ! 

படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வுகள் உண்டாக்கும் ஹைக்கூ கவிதைகள் நிரம்ப உள்ளன பாராட்டுக்கள் .குறைந்த விலையில் மிக நேர்த்தியாக பதிப்பித்த அகநி வெளியீட்டுக்கும் பாராட்டுக்கள் . 

நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் அடுத்து எழுதும் ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் கலப்பின்றி எழுதுங்கள் .இந்த நூலில் பல ஹைக்கூ கவிதைகளில் ஆங்கிலச் சொல் உள்ளன .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 16, 2014 3:36 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Oct 16, 2014 3:49 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பாக்கெட்டில் உறங்கும் நதி ! நூல் ஆசிரியர் கவிஞர் சிறுவை அமலன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum