"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Today at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Today at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Today at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Today at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Today at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Today at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Today at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Today at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்

Go down

மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்

Post by karumalaithamizhazhan on Tue Oct 21, 2014 6:33 am

மொழிவளர்ந்தால்   நாம்   வளர்வோம்
        பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
மொழிகளிலே   முதன்மைமொழி   தமிழே   என்று
            மொழிவதிலே    பெருமையுற்றுத்    தாழ்ந்து   விட்டோம்
மொழிகளுக்குள்   இலக்கணத்தில்    உயர்ந்த    தென்று
            மொழிந்துபுதுக்   கூறிணைக்க   மறந்து   விட்டோம்
மொழிகளிலே   முப்பிரிவைக்   கொண்ட   தென்று
            மொழிந்தபடி   அறிவியலை   விட்டு  விட்டோம்
மொழிகளுக்குள்   அமுதென்றே   மயங்கி   மாற்றம்
            மொழிக்குள்ளே    செய்யாமல்   வீழ்ந்து   விட்டோம் !
 
தமிழ்பற்று   எனவாயால்   பேசிப்   பேசித்
            தமிழ்மொழியை   வாய்மொழியாய்   மாற்றி   விட்டோம்
தமிழகத்து   வீதியெல்லாம்   ஆங்கி   லத்தைத்
            தாலாட்டும்   தொட்டில்கள்   தொங்க   விட்டுத்
தமிழ்பயிற்றும்   பள்ளிகளை   மூடி   விட்டுத்
            தமிழ்வளர்ப்போம்   எனமேடை   முழங்கு   கின்றோம்
தமிழினிலே   பேசுதற்கும்   நாணம்   கொண்டு
            தமிழரெல்லாம்    தமிங்கிலராய்   மாறிப்   போனோம் !
 
அம்மாவே   தன்குழந்தை   மம்மி   யென்று
            அழைப்பதிலே   சுகம்கண்டு   பிணமா   கின்றாள்
இம்மென்னும்   மெய்யெழுத்தை   முதலில்   வைத்தே
            இயல்பில்லா   பெயர்களினைச்   சூட்டு   கின்றோம்
நம்பொருளை   நாம்விற்கும்   கடைக   ளுக்கும்
            நற்றமிழில்   பெயர்வைக்கத்   தயங்கு   கின்றோம்
நம்மொழியால்   எதுவொன்றும்   ஆகா   தென்றே
            நம்பிக்கை   கொள்ளாமல்   தாழ்த்து   கின்றோம் !
 
காலையிலே   எழுந்தவுடன்   பல்து  லக்கக்
            கனிவாகப்   பிரஷ்பண்ணி !  தண்ணீ   ராலே
கோலமுகம்   கழுவுதற்கே   பேஸ்வாஷ்   பண்ணி
            குடிப்பதற்குத்   தேநீரை  டீயாய்ப்   பண்ணி
வேலைக்குச்   செலும்முன்னே   மகம்ம   ழிக்க
            ஷேவ்பண்ணி   டிரஸ்பண்ணி  டிபனைப்  பண்ணி
மாலையிலும்   காலையிலும்   வாக்கைப்   பண்ணி
            மணித்தமிழைப்   பண்ணிமொழி   செய்தோம்  பேச்சில் !
-       1 -
 
வானியலைக்   கணித்தனால்   கணியன்  என்றோம்
            வளியறிந்து   கலம்செலுத்திக்   கடல்க   டந்தோம்
வானத்தில்   பறக்கின்ற   பொறிய   மைத்து
            வளர்ந்திருந்தோம்   அறிவியலில்   அன்றே   யென்று
பேணியதை   வளர்க்காமல்   பேசு   கின்றோம்
            பெருமைகளைச்   சான்றுகளாய்   எடுத்துக்   காட்டி
நானிலத்தில்  நம்முன்னோர்   பெற்றி   ருந்த
            நல்லறிவை   எடுத்துரைக்க   என்ன  செய்தோம் !
 
அணுப்பிளந்தோம்   எனஅவ்வை   சொன்ன   சொல்லை
            அழகாகச்    சொல்லுகின்றோம்1  கல்வி  தன்னில்
அணுக்கருத்தைக்   கற்பதற்குத்   தமிழி  லின்று
            அருநூல்கள்   இல்லையென்று   தள்ளு  கின்றோம்
முணுமுணுக்கும்   சித்தர்தம்   பாட   லெல்லாம்
            முறையான   மருத்துவத்தை   உரைத்த   போதும்
மனுப்போட்டுத்    தமிழினிலே   முடியா   தென்று
            மண்டியிட்டுக்   கோழையெனச்   சூம்பு   கின்றோம் !
 
கரிகாலன்   கல்லணையும்   தஞ்சை   மண்ணில்
            கட்டிவைத்த   கோபுரமும்   வல்ல  வர்நாம்
பொறியியலில்   எனக்காட்சி   தந்த   போதும்
            பொறுப்பின்றிப்   பிறமொழியே   சிறப்பென்   கின்றோம்
அறிவுதனை   வளர்பதுவும்   சுயமாய்ச்   சிந்தை
            அளிப்பதுவும்   அன்னைமொழி   கல்வி   யென்றே
அறிந்திருந்தும்   நம்காலை  நாமே   வெட்டி
            அடுத்தவர்தோள்   பற்றிநடை   பயிலு   கின்றோம் !
 
செந்தமிழே   ஆட்சிமொழி !   கல்விக்   கெல்லாம்
            செழுந்தமிழே   பயிற்றுமொழி !  வேலைக்   வாய்ப்பு
செந்தமிழில்  பயன்றோர்க்கே   என்னும்    ஆணை
            செப்பமுடன்  செயலினிலே   செய்ய  வேண்டும் !
செந்தமிழர்   தமிழரென்னும்   உணர்வு   பெற்றுச்
            செம்மொழியாய்   உலகமெல்லாம்   உயர்த்த   வேண்டும் !
செந்தமிழை   இல்லத்தில்   தெருவில்   பேச்சில்
            செழுமையுற   நாம்வளர்த்தால்   வளர்வோம்   நாமே !
 
-       2 -
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Re: மொழிவளர்ந்தால் நாம் வளர்வோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 24, 2014 9:44 pm

அருமை பாராட்டுக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum