"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Today at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Today at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Today at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Today at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Today at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Today at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Today at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Today at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Today at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Today at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Today at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Today at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Today at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Yesterday at 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Yesterday at 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Yesterday at 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Yesterday at 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 4:44 am

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 4:33 am

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by அ.இராமநாதன் Yesterday at 4:30 am

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by அ.இராமநாதன் Yesterday at 4:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வீணை மத்தளமாகிறது

Go down

வீணை மத்தளமாகிறது

Post by karumalaithamizhazhan on Thu Oct 23, 2014 6:00 am

வீணை  மத்தளமாகிறது
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
கண்ணிற்குள்   வளர்ந்தமகள்   இமைப்பட்   டாலே
            கலங்கிடுவாள்   எனப்பூவாய்   வளர்ந்த   பெண்ணாள்
மண்ணிற்குள்   விழுந்தவிதை   மெல்ல   மெல்ல
            மண்பிளந்து   வளர்வதினைப்    பேணல்   போல
பண்ணிற்குச்    சேர்க்கின்ற  சுருதி    போல
            பக்குவமாய்   நாள்பார்த்து   வளர்ந்த   பூவாள்
தண்ணீர்க்குள்   வலையவரும்   மீனாய்   வீட்டில்
            தவழ்ந்துவரும்   தென்றலென   வளர்ந்த   கண்ணாள் !
 
நெஞ்சோடு   அணைத்தபடி   இறக்கைக்   குள்ளே
            நெகிழ்வோடு   கோழிகாக்கும்   குஞ்சு   போல
கிஞ்சித்தும்   தூசிவந்து   படியா   வாறு
            குளர்பதன    அறைக்குள்ளே   பேணு   கின்ற
விஞ்ஞான    அற்புதமாம்   கணினி   போல
            வீட்டிற்குள்   வாய்த்தநல்ல   விளக்காய்   வண்ண
மஞ்ஞையெனும்    அழகுப்பெட்    டகமாய்   அன்பு
            மலர்களிடை   மணமாக  வளர்ந்த    பெண்ணாள் !
 
வருங்காலக்   கனவுகளோ   கோடி   யாக
            வளர்த்துவைத்த   நெஞ்சினளாய்   வாழ்வை   யெண்ணிப்
பருவத்தில்   நிற்குமவள்   கருத்திற்   கேற்ப
            பல்வேறு   இடங்களிலே   பார்த்துப்   பார்த்துப்
பொருந்துகின்ற   குணம்பார்த்து   குடும்பம்   பார்த்துப்
            பொருளோடு   தகுதிதனை   ஆய்ந்த   பார்த்துத்
திருமணத்தை    இருமனங்கள்   கலப்ப   தற்குத்
            திருவாக  நடத்திவைத்து   மகிழ்ந்தார்   பெற்றோர் !
 
 
 
 
புதுமணத்தின்   நுகர்ச்சியிலே   பொழுதும்   நன்றாய்
            புத்தின்பத்   தேடலிலே    கழிந்து   செல்ல
மதுமயக்கம்   தெளிதல்போல்   மோக   வாசை
            மங்கிவர   மணவாளன்   குணமும்   மாறப்
புதுமனைவி   எனத்தலையில்   தூக்கி   வைத்துப்
            புகழ்மொழிகள்   பொழிந்தநாவில்   தேள்கொ   டுக்காய்
எதுசெயினும்   குற்றமெனக்    கொட்ட   லானான்
            எல்லாமும்   தாய்க்கயிற்றால்    ஆட   லானான் !
 
அன்பினிலே   வளர்ந்தமகள்     துன்பப்   பட்டால்
            அதைப்பார்க்க   முடியாமல்   கேட்ட   தெல்லாம்
முன்வந்து   தந்திடுவார்   என்ற   நோக்கில்
            முள்ளாகச்    சொற்களிலே   குத்தும்   அத்தை
தன்பங்காய்   மாமனாரும்   சாட்டை   வீச்சாய்
            தளிர்நெஞ்சைப்   புண்ணாக்கி  வீசுவார்   சொல்லை
புன்னகையை   இரவினிலே   சிந்திக்   காலை
            புன்செயலைப்   புரிகின்ற   கொடுமைக்   கணவன் !
 
கதிர்விழிக்கும்   முன்விழித்து   வாசல்   கூட்டிக்
            கலைமிளிரும்   கோலமிட்டே   அழகு   செய்து
முதியவர்க்கோ   இனிப்பில்லாப்   பாலைத்   தந்து
            முரண்நெஞ்சக்   கணவனுக்கோ   இனிப்பைச்   சேர்த்தும்
மதிக்காத   நாத்திக்கும்   மணக்கத்   தந்து
            மலையளவு   பாத்திரங்கள்   துலக்கி   வைத்தும்
சதிமனத்தார்    என்னசொல்வார்   என்ற   அச்சம்
            சதிராடும்   முகத்தோடு   வலைய   வந்தாள் !
 
 
 
 
 
 
 
உப்பில்லா   உணவுவகை   ஒருவ   ருக்கு
            உரப்பில்லா   புளிகுறைவு   ஒருவ    ருக்கு
உப்போடு   சுவையுணவு   மற்றோர்க்   கென்றே
            உணவுதனைப்   பலவகையாய்   செய்த   ளித்தும்
தப்புதனைக்   கண்டுரைக்கும்   குடும்பத்    தார்கள்
            தான்விரும்பும்   ஒருசுவையை   ஆக்கி   யுண்ண
ஒப்புதலும்   இல்லாமல்   அடிமை   யாக
            ஒப்புக்கே   மருமகளாய்    பணியா   ளானாள் !
 
ஏடுகற்ற   கல்விக்கும்    பயனு   மின்றி
            எந்தவொரு    நூல்படிக்க    நேர   மின்றி
வீடுகூட்ட    துணிதுவைக்க   வீட்டுக்   காரர்
            வினையாற்றச்     செல்வதற்குப்    பணிக   ளாற்றி
மாடுபோல   மாமிமாமன்    நோய்க   ளுக்கு
            மருந்தளித்துத்   தாதியெனத்    தொண்டு   செய்து
வாடுகின்ற    கிளியைப்போல்    இல்லக்   கூண்டில்
            வாயிருந்தும்   ஊமையெனக்    குமுற   லானாள் !
 
அலங்காரம்    செய்துபுறம்   கணவ   னோடு
            ஆசையோடு    உரையாடிச்   செல்வ   தற்கும்
கலகலென    பழகிவந்த   தோழி   மாரைக்
            கண்ணாலே    கண்டுநலம்   கேட்ப   தற்கும்
வலம்வந்த    பிறந்தவீட்டுச்   சுற்றத்   தாரின்
            வாழ்த்துகளை   நன்னாளில்    பெறுவ   தற்கும்
குலமகளாம்   பெயர்சூட்டி    இயலா   வாறு
            கூட்டிற்குள்    சிறகுவெட்டி   முடக்கி    வைத்தார் !
 
கோதையவள்   கற்பனையும்   கனவு   மெல்லாம்
            கோட்டைமணல்   போலவன்றோ    ஆன   தின்று
போதையாகும்   தட்சணையின்    கொடுமை   யாலே
            பொன்வீணை   மத்தளமாய்    ஆன   தன்றோ
காதைகளும்   கவிதைகளும்   உரிமை   பேசிக்
            கட்டுகள்தாம்    உடைந்ததென்று    முழங்கி   னாலும்
பேதையராய்த்     துணிவின்றி   உள்ள   மட்டும்
            பெண்ணுரிமை   என்பதெல்லாம்    வெற்றுப்   பேச்சே !
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Re: வீணை மத்தளமாகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 24, 2014 9:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum