"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



போனதெங்கே மனிதநேயம்

Go down

போனதெங்கே மனிதநேயம்

Post by karumalaithamizhazhan on Fri Oct 24, 2014 6:14 am

போனதெங்கே   மனிதநேயம்
 பாவலர்  கருமலைத்தமிழாழன்
ஈரமண்ணாய்   மனம்கசிந்து   வீட்டுப்   பக்கம்
            இருப்போரின்   துயரினிலும்   பங்கு   கொண்டு
வேரடியாய்   அன்புதனில்   கிளைய   ணைத்து
            வெறுப்பின்றிக்   கூட்டமாக   ஒன்றி   ணைந்து
தூரத்தே   அடிபட்டு   வீழ்ந்த   வர்க்கும்
            துடிதுடித்தே   ஓடிப்போய்   உதவி   செய்தும்
பாரத்தைப்   பிறருக்காய்ச்   சுமந்து   நின்ற
            பரிவென்னும்   மனிதநேயம்   போன   தெங்கே !
சேற்றினிலே   களையெடுக்கும்   கரங்க   ளாலே
            சேர்ந்தணைத்துக்   கபடுகளைக்   களைந்தெ   ரிந்து
நாற்றுகளை   நட்டுவயல்   வளர்த்தல்   போல
            நகையாலே   வஞ்சமின்றி    வளர்ந்த   நட்பால்
வேற்றுமைகள்   இல்லாத   குடும்ப   மாக
            வேறுவேறு   சாதியரும்    நெஞ்ச   மொன்றி
போற்றுகின்ற    சோதரராய்ப்   பிணைந்தி   ருந்த
            போலியற்ற    மனிதநேயம்    போன   தெங்கே !
 
காடுகளாய்   நம்முன்னோர்   வளர்த்து    வைத்த
            கவின்மிகுந்த    மரங்களினை    வெட்டி   வெட்டி
கோடுகளாய்   மண்ணுடலைப்   பிளக்க   வைத்துக்
            கொட்டிவந்த    மழைவளத்தை   அழித்த   தைப்போல்
வாடுகின்ற    பயிர்கண்டு    வாட்டம்    கொண்ட
            வள்ளலாரின்   மனிதநேயம்   அழித்து   விட்டோம்
பாடுபட்டு   யாதுமஊர்   என்ற   பண்பைப்
            பாதுகாத்துத்   தந்ததனைத்    தொலைத்து   விட்டோம் !
 
பக்கத்தில்   குடியிருப்போர்   முகத்தைக்   கூட
            பார்க்காமல்   வாழுகின்ற   வகையைக்   கற்றோம்
துக்கத்தில்   துடிப்போரின்   குரலைக்    கேட்டும்
            துடிக்காமல்   இயல்பாக   நடக்கக்   கற்றோம்
நக்கலாகப்   பிறர்துயரில்    வாடக்    கண்டும்
            நகைத்தவரை   ஏளனமாய்ப்    பழிக்கக்   கற்றோம்
வக்கிரமே   எண்ணமாகி   அடுத்தி   ருப்போர்
வயிறதனில்    அடிப்பதையே   தொழிலாய்க்    கற்றோம் !
 
பிறர்வாழப்   பொறுக்காத   மனத்தைப்   பெற்றோம்
            பிறர்நெஞ்சைப்   புண்ணாக்கும்   கலையில்   தேர்ந்தோம்
பிறர்போற்றப்   பொதுநலத்தை   மேடை   மீது
            பிசிரின்றிப்   பேசிநிதம்   கள்ள   ராகப்
பிறர்பொருளை   அபகரிக்கும்   தன்ன   லத்தால்
            பிறர்காலை   வெட்டுவதில்   வல்ல   ரானோம்
சிரம்தாழ்த்தும்    பழிதனக்கே   நாணி   டாமல்
            சிறப்பாக   நடிக்கின்ற   நடிக   ரானோம் !
 
சாதிகளின்    பெயராலே   சங்கம்   வைத்தோம்
            சாதிக்காய்த்   தலைவரினைத்   தேர்ந்தெ   டுத்தோம்
சாதிக்கும்   சக்தியெல்லாம்   ஊர்வ   லத்தில்
            சாதனையாய்ப்   பகையுணர்ச்சி   பெருக்கு   வித்தோம்
வாதிக்கும்   கருத்தெல்லாம்   வாயா   லன்றி
            வாள்தடிகள்   சங்கிலியால்   மோதிக்   கொண்டோம்
போதிக்கும்   அன்புவிட்டு   மதங்க   ளென்னும்
            போதையாலே   மதம்பிடித்தே   அலையு   கின்றோம் !
 
அறிவியலில்   உலகமெல்லாம்   அற்பு   தங்கள்
            அரங்கேற்றக்   கலவரங்கள்   அரங்க   மேற்றி
அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம்
            அணுப்பிளந்து   அடுத்தகோளில்   அவர்க   ளேற
வெறியாலே   உடன்பிறந்தோர்   உடல்பி   ளந்து
            வீதியெல்லாம்   குருதியாற்றில்   ஓடம்   விட்டோம்
நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும்
            நேர்த்திகடன்   கோயில்முன்   செய்யு   கின்றோம் !
 
வானத்தை   நாம்வில்லாய்   வளைக்க   வேண்டா
            வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்   போதும்
தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்   கொடுக்க   வேண்டா
            தேறுதலாய்   நம்கரங்கள்   கொடுத்தால்   போதும்
தானத்தில்   சிறந்ததெனும்   நிதானத்   தில்நாம்
            தமரென்றே   அனைவரையும்    அணைத்தால்   போதும்
மானுடந்தான்   இங்குவாழும்   சமத்து   வத்தில்
            மணபதையே   அமைதிவீசும்   நேயத்   தாலே !
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Re: போனதெங்கே மனிதநேயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 24, 2014 9:51 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum