"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Yesterday at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Yesterday at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Nov 13, 2014 8:36 pm

இதயச் சிறகுகள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அருள் வெளியீடு, jeganraja2005@rediffmail.com,
அலைபேசி : 77086 83188, விலை : ரூ. 150

*****
      இதயச் சிறகுகள், நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  எண்ணச் சிறகுகளை விரித்து கவிதை வடித்துள்ளார் அருள்தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்கள். நூலினை அவரது தந்தை திரு. அ. அருள்ராஜ் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.  தான் ஒரு அருள்தந்தை என்ற வட்டம் தாண்டி மனிதநேயத்தோடு சிந்தித்து மகாகவி பாரதியார் போல ரௌத்திரம் பழகி புதுக்கவிதை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

      ஆயர் ஜீடு பால்ராஜ் அவர்கள் ஆசியுரை பேரருட்திரு. ஜோமிக்ஸ், அருள்திரு. முனைவர் ம. அருள் அம்புரோசு, அருட்திரு. ம. சார்லஸ், பணி. செபஸ்தியான், சகோ. முனைவர் புஷ்ப ரஞ்சிதம், தமிழாசிரியை அ. மார்கிரேட் மேரி ஆகியோரின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன.

      காதல் கவிதைகளை, கதையில் படித்தால் பாராட்டுவார்கள்.  திரைப்படத்தில் கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் சொந்த வீட்டில் காதல் அரும்பினால் எதிர்ப்பார்கள்.  இந்த மனநிலையை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.

      நிழலில் காதலுக்குக் கைதட்டி
      நிஜத்தில் காதலர்களைக் கைது செய்தால்
      எந்தன் உடலில் கவிதை வெப்பமடிக்கும்
      கல் கடவுளருக்கு படையல் அமைத்து
      கடவுள் உறையும் மனிதருக்கு
      பாடை அமைத்தால்
      என்னுள்
      கவிதை புயலடிக்கும்...
      கோவில் விழாவில்
      கோஷ்டி மோதல்
      உருண்டன தலைகள்
      சாமிச்சிலை கடத்தல்
      கோவிலுக்குக் காவல்
      இப்படிச் செய்திகளைப் பார்த்தால்
      எந்தன் கவிதை
      நாத்திகப்படும்.
      கேட்டேன், கேட்டேன் என்று முடியும் நீள்கவிதை ஒன்று மிக நன்று. திரைப்படப் பாடலை நினைவூட்டும் விதமாக உள்ளது. அதிலிருந்து பதச்சோறாக சில வரிகள்.

      பிறருக்கு உழைக்கும் வியர்வை கேட்டேன்
      பிறர் பாராட்டும் சாவைக் கேட்டேன்
      தமிழ் பேசும் நா கேட்டேன்
      தாய்ப்பால் அருந்தும் குழந்தை கேட்டேன்
      சாதிஅற்ற கட்சி கேட்டேன்
      விதியை வெல்லும் மதியைக் கேட்டேன்
      உள்ளம் உரசும் காதல் கேட்டேன்
      கள்ளம் இல்லா வாழ்வு கேட்டேன்.

      மனிதாபிமானமுள்ளவர்களால் ஈழத்தில் நடந்த கொடூரம் பற்றி கவிதை பாடாமல் இருக்க முடியாது. அருள் தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்களும் ஈழத்து சோகத்தை கவிதையில் வடித்துள்ளார்.  

      என்ன செய்யப் போகிறாய்? புத்தாண்டே?
      குறவுயிரும் குத்துயிருமா ஈழத்தில்
      குடிகுடியா எம்பொறுப்பு சாகையில்
      இழுத்துக்கட்டி சண்டியரா நிக்கிறவங்க
      இதயத்தை கொஞ்சந்தான் திறப்பியா?
      சிங்கள் இராணுவ கொலைவெறிக்கு
      சின்ன சின்ன வழியில் உதவிசெஞ்சு
      தமிழ்உறவின் தொப்புள்கொடி அறுப்பதற்கு
      தமிழ்நாட்டில் கத்திக்குச் சாணை பிடிப்பியா?

      கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதிகளை உருவாக்கி சண்டைகளுக்கு வித்திட்டு வரும் மூலகாரணியை சாடும் விதமாக வடித்த கவிதை ஒன்று.

      வெண்ணூல் தரித்த
      வியாபாரிகளே
      மனிதர்களுக்குள் ஏனடா வர்ணங்கள்?
      வர்ணங்களுக்குள்
      ஏனடா சாதிகள்?
      மண்ணுக்குள் புதைந்தாலும்
      நெருப்புக்கள் எரித்தாலும்
      மிஞ்சுவதென்ன
      சாதியா! சாம்பலா!

      அருள்தந்தையாக இருந்த போதும் மதங்கள் கடந்து உரக்க சிந்தித்து மானுட நேயத்துடன் கேள்விகள் பல கேட்டு கவிதைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

      என்னடா நியாயம்? வெளுத்துப் போச்சு சாயம்!
      நந்தனை கொளுத்தி
      வேகம் என்றவர்களே
      இன்னும் கொளுத்த
      நெருப்போடு நிற்பவர்களே
      பாதிக்கப்பட்டவன்
      வெடித்து எழுந்தால் – உன்
      அக்கினி குண்டங்களென்ன
      எரிமலைகளே கைகட்டும்!.

      எதிர்பாராது இருந்து நேரத்தில் வந்த சுனாமி சுருட்டி போட்டது.  பலரின் வாழ்வை முடித்து வைத்தது. சிலரின் வாழ்வை சேதப்படுத்தியது.  ஒரு சிலரை சோகப்படுத்தியது.  சுனாமி பற்றியும் கவிதை வடித்துள்ளார்.

      சுனாமி இயற்கை சீற்றமா? செயற்கை மாற்றமா?

      கடவுளே
      உனக்கு கண்ணில்லையா?
      கடலே
      உனக்கேன் அகோரப்பசி?
      அலையே
      நீயேன்
      பிணதின்னியானாய்?
      அன்னை பூமியே
      பெற்றெடுத்த
      வயிற்றுக்குள்
      வாரியெடுத்துக் கொண்டதேன்?

      ஊடகங்களின் பொய்யான விளம்பரங்களாலும், திரைப்படங்களின் கதை அமைப்பின் காரணமாக தொலைக்காட்சி தொடர்கதையமைப்பின் காரணமாக ஒருவனுக்க்கு ஒருத்தி என்ற உயர்ந்த நமது தமிழ்ப்பண்பாடு நாளுக்கு நாள் சிதைந்து வருவது கண்டு வருத்தப்பட்டு வடித்த கவிதை நன்று.

      கறைபடும் கலாச்சாரம்!

      கல்லூரியென்றால் பகடிவதை வேண்டும்
      பேருந்தென்றால் படிக்கட்டில் தொங்க வேண்டும்
      விரல்களிலிருந்து சிகரெட் பிடிக்க
      கொள்கையாகக் கொண்டுள்ள இளையோரிடத்தில்
      என்ன கலாச்சாரம்?

      நூலாசிரியர் கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்கள், அவருடைய கவிதை எந்த வகை கவிதை என்பதை, அவரது மொழியிலேயே காண்போம்.

      என் கவிகள்
      அறியாமை இருளகற்ற
      உரசிப் போடும்
      தீக்குச்சிகள்!
      தோல்வி கண்டு துவள் வேண்டாம்.  துணிவுடன் திரும்பவும் முயல வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.

      தோல்விகள்
      சிதைக்கும் பழிகளல்ல
      செதுக்கும் உளிகள் !

      தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதைகளும் நூலில் நிரம்ப உள்ளன. அவற்றில் ஒன்று காண்க!

      விழிப்பு !

      விருட்சங்கள் உறங்கும்
      விதைகள் நாம்
      விழித்துக் கொண்டால்
      வெற்றி விருதுகள்
      நம்மைத் தாங்கும்.

      கவிதையில் கணக்கு ஒன்று சொல்கிறார். இவர் சொல்லும் வாழ்க்கைக் கணக்கை கடைபிடித்தால் வாழ்க்கை இனிக்கும்.

      வாழ்க்கைக் கணக்கில் !

      நட்பைக் கூட்டி
      மகிழ்ச்சியைப் பெருக்கி
      அன்பை வகுத்து
      கவலையைக் கழித்தால்
      வாழ்க்கை வாழப்படும்.

      வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல உயரம் செல்ல வெற்றிப்-படிக்கட்டுகள் எவை என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

      வெற்றிப்படிகள்!
      துன்பங்களிலும்
      துவளாமலிருக்கும்
      துணிவு
      தோல்வியிலும்
      தோற்காமலிருக்கும்
      தோழமை
      முள்ளின்
      முனையிலும்
      முன்னேறும் முனைப்பு
      இதயச் சிறகுகள் கவிதை நூல் படிக்கும் வாசகர்களுக்கும் கற்பனைச் சிறகுகள் முளைக்கும் கவிதைகள் வடிப்பார்கள்.நூல் ஆசிரியர்  கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்களுக்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .இந்த நூலை புனித  மரியன்னை மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலத் திட்ட முகாமில் சிறப்புரையாற்றிய போது பரிசாக வழங்கிய இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுக்கு நன்றி.

--

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

Re: இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 17, 2014 12:37 pm

சியர்ஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Mon Nov 17, 2014 11:01 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum