"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:42 am

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:41 am

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:39 am

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:36 am

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:35 am

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:30 am

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:29 am

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:28 am

» வெற்றி மொழி: சைமன் சினக்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:15 am

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:00 am

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:59 am

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:55 am

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 10:17 pm

» நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... ரான்ஹாசன்
by ranhasan Mon Mar 20, 2017 8:40 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 6:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 17, 2017 8:39 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 17, 2017 8:07 pm

» வீட்டுக்குறிப்புகள்!!!
by nivetha Wed Mar 15, 2017 6:14 pm

» கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவியயை உண்ணச் சொல்லுவார்கள் ஏன் தெரியுமா?
by nivetha Wed Mar 15, 2017 6:11 pm

» அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 1:10 pm

» சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 1:02 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Wed Mar 15, 2017 12:36 pm

» பதன்கோட் விமான தள பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டமா?
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 7:47 am

» மும்பையில் இருந்து சென்னை வந்த 750 டன் ராட்சத எந்திரம்
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 7:47 am

» கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை ! நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Mar 13, 2017 11:31 pm

» தலைவர் தூங்கி ரொம்ப வருஷமாச்சு...!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 6:13 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 3:59 pm

» எனக்கு வாய்த்த அடிமைகள்....!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 11:50 am

» பீர் பாட்டில் ஷேப்புல பானை....!!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 11:01 am

» பெண் வேடத்தில் நகர்வலம் போனது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 10:56 am

» எதைப் பார்த்தாலும் ரவுண்டு ரவுண்டா தெரியுது...!!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 10:34 am

» இது ஸ்பீடு போஸ்ட்டாம்....!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 10:30 am

» தெளிஞ்ச பிறகு கேளுங்கள், சொல்றேன்...!!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 10:28 am

» படிச்ச வீட்டு வேலைக்காரி...!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 10:26 am

» கோவாவிலும் பாஜக ஆட்சி! முதல்வராகிறார் மனோகர் பாரிக்கர்
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 7:48 am

» பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 7:46 am

» வீழும் மலரும் அழகே...
by அ.இராமநாதன் Sun Mar 12, 2017 11:16 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Fri Jan 30, 2015 9:51 am

அவசர அவசரமாய் ...

நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001.
விலை : ரூ. 50. 
vijayapathippagam2007@gmail.com


*****

       இனிய நண்பர் கவிஞர் பொன் விகரம் அவர்கள் மாமனிதர் தமிழ்க்கூத்தான் அறிவு பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட வார்ப்பு.  திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் என்னோடு கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிக்கும் அன்பர்.  நூல் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்தி பிரமிப்பில் ஆழ்த்துபவர்.


       அவசர அவசரமாய் என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.  நூல் முழுவதும் தலைப்பு குறித்தே ஆழ்ந்து சிந்தித்து புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.  வாழ்த்துரைகள், அணிந்துரை, அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.
       இயந்திரமயமான இந்த உலகத்தில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர்.  எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்றாகி விட்டது.  பொறுமை என்பதின் பொருள் புரிவதில்லை பலருக்கு.  முடிவு என்பது யோசித்து எடுக்க வேண்டும் எனபதை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதிய கவிதை நன்று.



       அமெரிக்காவின்
       அவசர முடிவு
       ஹிரோசிமா, நாகசாகி.



       அரசு திட்டப் பணங்கள் ஐஸ் கட்டி கைமாறுவது போலவே இருக்கின்றன.  முழுமையாக திட்டத்திற்கு சென்று அடைவதில்லை.  முன்பெல்லாம் சாலைகள் சரலை கற்கள் கொட்டி தார் ஊற்றி தரமாக போட்டார்கள். ஆனால் இன்று ஒதுக்கப்படும் நிதியில் சில பகுதி அரசியல்வாதிகளுக்கு சென்று விடுவதால் சாலையை தரமின்றி போட்டு வருகின்றனர்.  அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.
[size]


 அடுத்த 
 நாளே 
 பல்லைக் காட்டுது 
 அவசரமாய் 

 போட்ட 
 தார்சாலை.


[/size]
       காலையில் பணம் கடன் கொடுத்து மாலையில் வட்டி வாங்கும் கொடூரம் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது.  வட்டி கட்ட முடியாமல் தற்கொலை மரணங்கல் நாளும் அரங்கேறி வருகின்றது.  அதனை உணர்த்திடும் கவிதை.
[size]


 உயிரை 
 எடுக்குது 
 அவசரத்துக்கு 
 வாங்கிய 
 ரன்னு வட்டி.


[/size]
       குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் போல, சிலர் தவறான வழியில் விரைவாக பணம் ஈட்டி விட்டு பின் சிறைபட்டு அல்லல்படும் அவலங்களும் நாட்டில் நடந்து வருகின்றது. 
[size]


 அவசர அவசரமாய் 
 பணம் சேர்த்தான்
 ஆற அமர 

 உட்கார்ந்து 
 வருத்தப்படுகிறான்
 சிறைச்சாலையில்.



[/size]
       கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பொன்மொழி உண்டு.  இன்று மதுக்கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாகி விட்டது.  மதுக்கடை இல்லாத பட்டிதொட்டி எல்லாம் மதுக்கடைகள் பெருகி விட்டன.
[size]


சீக்கிரமாய் 
வரும் 
போதையில்
அவசரமாய் 

முடியுது 
ஆயுள்
[/size]
       குடிக்கு அடிமையாகி பலர் அற்ப ஆயுளில் மரணம் அடையும் சோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.


       தமிழகத்தில் நடிக்கும் நடிகர்கள், இரண்டு படம் வெற்றி பெற்று விட்டால் உடன் கட்சி தொடங்கி முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.  ஆனால் கண்ட கனவு நனவாகுமா? என்பதே கேள்விக்குறி.
[size]


 அவசரம் 
 நேற்று 
 அரம்பித்த 
 கட்சி
 இன்று 

 ஆட்சியை 
 பிடிக்க 
 அலையுது !


[/size]
       2016ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று 2016 பேர் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் சிரித்து வருகிறார்கள்.


       சாலை விபத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது.  வருடத்திற்கு வருடம் விபத்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது.  காரணம் பொறுமையின்மை, அவசரம்.
[size]


 சாலைகளில் 
 அவசரம்
 வேகமாய் கூடுது 

 விபத்துக்களின் 
 எண்ணிக்கை !


[/size]
       பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பொன்மொழி உண்டு.  இன்று அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.  அதனையும் இன்று பொருட்படுத்துவதில்லை. அவசரத்தில், பதற்றத்தில் பல தவறுகள் நடந்து வருகின்றன.  ஆனால் இயற்கை எந்த அவசரமுமின்றி நிதானமாக அதன் பணியினை செவ்வன செய்து வருகின்றன என்ற உண்மையை கவிதையில் வடித்த விதம் நன்று.
[size]


 பூமி 
 அவசரமில்லாமல் 
 சுத்துது 
 பூக்கள் 
 அவசரமில்லாமல்
 மலருது 

 நிலவும், சூரியனும் 
 வழக்கம் போல உதிக்குது 

 கோடான கோடி 

 வருடமாய் அவை அப்படியே ! 
 இருக்குது  அவசரமில்லாமல்  மனிதனின் 
 ஆறாம் அறிவுக்கு மட்டும் எத்தனை அவசரம் 
 எத்தனை அவதாரம் !


[/size]
       அவசரம் என்ற ஒரு கருப்பொருளைக் கொண்டே மிக அழகாக சிந்தித்து கவிதைகள் வடித்த இனிய நண்பர் கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
[size]


 அவசரம் 
 மண்ணை 
 மலடியாக்கி விட்டு
 விதைகளுக்கு 

 வயாகரா குடுக்குது !


[/size]
       உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வந்த அவசர முடிவுகள் மண்ணை மலடியாக்கிய உண்மையை கவிதையில் வடித்தது சிறப்பு.  பாராட்டுகள்.  தொய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2070
Points : 4646
Join date : 18/06/2010

Back to top Go down

Re: அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 03, 2015 9:27 pm

அவசரம்... 24 மணி நேரம்  கூட ஒருவனுக்குப் போதவில்லை என்கின்றான்... என்ன செய்ய...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 34
Location : வேலூர்

Back to top Go down

Re: அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:29 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:22 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2070
Points : 4646
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum