"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Today at 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Today at 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Today at 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Today at 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Today at 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Today at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Today at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Today at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Today at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Today at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Today at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Yesterday at 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Yesterday at 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

View previous topic View next topic Go down

நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Post by eraeravi on Sun Mar 01, 2015 5:57 pm

நூலின் பெயர்:கவியமுதம் !

நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !

மதிப்புரை:
பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810  .  24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in


கோபுர வாயில்:

      வெற்றிக்கான இலக்குகள் பதினான்கு; புத்தபெருமானிடம் கேட்கப்பட்ட வினாக்கள் பதினான்கு; ஈரேழு லோகங்கள் பதினான்கு ;நல்லாட்சிக்கானப் பண்புகள் பதினான்கு;இதிகாசமாம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் பாடங்கற்றுக்கொண்ட ஆண்டுகள் பதினான்கு;இடைச்சொல்லில் இடம்பெறும் பொருட்கள் பதினான்கு;கவிஞர் இரவி அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையும்  பதினான்கு .ஆம்..அவரது பதினான்காவது நூலான  கவியமுதம் இலக்கிய வாசகர்களுக்கெனப் பாங்காய்ப் பகிர்ந்து பந்தியில்  பரிமாறப்பட்டிருக்கின்றது.

பகுப்பும் தொகுப்பும்:

      ஆதவன் ஒன்று;அகம்புறம் இரண்டு;திருக்குறள் பகுப்பு மூன்று;திசைகள் நான்கு;புலன்கள் ஐந்து;திருமுருகன் வதனம் ஆறு;மகளிர் பருவம் ஏழு;கவியமுதம் என்னும் இரா.இரவியின் நூற்பகுப்பு எட்டு! இந்நூலில் பகுத்தறிவுப் பகலவன் முதல் நெம்புகோல் நெல்சன் மண்டேலா வரை, வார்த்தை சித்தர் வாலி முதல் இயற்கை சித்தர் நம்மாழ்வார் வரை,தில்லையாடி வள்ளியம்மை முதல் அழ.வள்ளியப்பா வரை,ஆற்றல் நாயகன் அண்ணா முதல் நீதி நாயகன் சந்துரு வரை,கர்மவீரர் காமராசர் முதல் தனக்குத் தானே கவிதாஞ்சலி எழுதிச் சென்ற கண்ணதாசன் வரை,தெய்வகுரலோன் டி.எம்.எஸ்.முதல் செய்திச் சிகரம் சிவந்தியார் வரை -என மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்ற சான்றோர்கள் அனைவரையும் புதுக்கவிதை வடிவில் 'பூமராங்க்'-போல் வாசிப்போர் மனதில் புகவைக்கின்றார் கவிஞர் இரவி.

பாற்கடலா?நூற்கடலா?

      திருப்பாற்கடலைக் கடைந்தால் மட்டுமே அமிழ்தத்தில் பங்கு உண்டு என்பது புராணச் செய்தி!கவி இரவியின் இந்த நூற்கடலை வாசகர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு கடையவேண்டாம்!இஷ்டப்பட்டு வாசித்தாலே போதும்!கவியமுதம் தானாக கரத்தில் கிட்டும்!ஆம்!எட்டுவிதமானத் தலைப்புக்களில் இதுவரை அறிவுக்கு எட்டாதச் செய்திகளை இலக்கிய இலக்கண நயத்துடன் இரட்டைவட தங்கச்ச் சங்கிலியாக தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கவி இரவி!

பாட்டியலா?பட்டியலா?

     தமிழின் அருமை, மாமதுரையின் பெருமை,தமிழனின் பெருந்தன்மை,வாசிப்பின் மேன்மை -என அத்தனையையும் எடுத்துக் கூற  முடியாமல் கவிஞர் இரவி பரிதவித்துப்போகும் அளவிற்கு பட்டியல் நீண்டாலும் கவித்துவம் நிறைந்திருப்பதால் வாசிப்போர் மனதில் அத்தனையும்  ஆழப்பதிகின்றது என்பதே உண்மை !

 உதாரணத்திற்கு ஒன்றிரண்டு இதோ!

                     காந்தியை  அரையாடை மனிதராக்கியது மதுரை!
                       காந்தியின் இறுதியாடை இருக்குமிடமும் மதுரை!
                       ஜல் ஜல் நாட்டிய ஒலி கேட்கும் மதுரை!
                       ஜில் ஜில் ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரை!"(ப.134)

அகமா?புறமா?

       கவியமுதம் நூலை வாசிக்கும் பொழுது ஒருபுறம் நம்பிக்கை கதவு திறக்கின்றது!மறுபுறமோ நாயகி வீட்டு ஜன்னல் மூடுகின்றது!கவிஞர் பல வேளைகளில் சமூக மோசநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.சிலவேளைகளில் பாசவலையில் சிக்கித்தவிக்கவும் செய்கின்றார்.இதோ நம்பிக்கை நட்சத்திரமாக,

              தோல்விக்கு தோல்விகொடு நீ!
               ஓய்வுக்கு ஓய்வுகொடு நீ!(ப.16)

அதீத  அன்பிற்கு சான்றாக,

               கிழித்த கோட்டைத்    தாண்டுவதில்லை!    நீ
                 அழித்தக் கோட்டை  நான் போடுவதே இல்லை!(ப.98)

கவிதையா?காவியமா?

           கவி இரவியின் இந்நூலில் கழைக்கூத்தாடி கவிதையின் கருவாகின்றான்.அகவிழியுடையோர் கல்நெஞ்சத்தையும் கரையவைக்கும் உருவமாய் ஆகின்றனர்.வாடகைவீடு குறித்த வாட்டமான கவிதை நம்மைக்கேட்காமலேயே நம் இதயத்திற்குள் புகுந்துவிடுகின்றது!கவிதைகளில் அஃறிணை உயிர்கூட அறிவுரை கூறவருகின்றது!ஆம்!மயில் நம் மனக்கவலை தீர்க்கின்றது!விதைகள் பயணிக்க ,விருட்சமோ உயிர்பெற்று, நம்மை நோக்கி  உன்னத வினாவை  எழுப்புகின்றது!தற்கால சமூக இழிநிலையால் இரா.இரவியின் கவியோட்டத்தில் மணி கூட ஒலிக்க மறுக்கின்றது!

சர்க்கரைப்பொங்கல் கூட கசக்கின்றது!புத்தகம் காமதேனுவைக் காண  பூவுலகு தாண்டி சொர்க்கலோகம் செல்கின்றது!மலைகள் வாசிக்கும் நம்முடன் மனம்விட்டுப் பேசுகின்றன!வாழ்த்துமொழிகள் ஒரு பக்கம் என்றால் ,சமுதாயத்தின் தாழ்நிலையைச் சாடி வசவுமொழிகள் மறுபக்கம் என கவியமுதம் புத்தகம் நகருகின்றது!பக்கத்திற்குப் பக்கம் பகுத்தறிவு இந்நூலில் பறைசாற்றப்படுகின்றது!மொத்தத்தில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் நமக்குத் தேவையானப் பொருட்கள் கைசேர்வதுபோல் பலதரப்பட்ட செய்திகளும் அறிவுரைகளும் இந்நூலின்வழி   வாசகர் மனத்தைச் சென்றடைகின்றன என்று கூறினால் அது  மிகையான ஒன்றல்ல!
சாட்டையடி கவிதை:

               "சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
                  சரிநிகர்சமானமாய் வாழவேண்டும் பெண்ணே!(ப.106)

முரண் நயம்:

               "பெரியார்!அவர் ஒருவர்மட்டுமே பெரியார்!
                  பெரியார்முன் மற்ற அனைவருமே சிறியார்!(ப.54)

கண்ணீரைப்பொழியவைக்கும் வரிகள்!(விழியிழந்தோர்)

               கண்ணாமூச்சி விளையாடி கால்தவறி விழுவீர்கள்!
               காலமெல்லாம் எங்களுக்கோ கண்ணாமூச்சி 
               விளையாட்டானது!(ப.156)

மனதார....

     காலத்தோடு கைகோர்த்துச் சென்று கவிதை பல படைத்துவரும் இரா.இரவி அவர்கள் இலக்கியவானில் மென்மேலும் ஒளிர்விட்டு பிரகாசிக்க என் போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

                     "இதுவரை இந்நூலை வாசிக்காதோர் ரூ.100 அளித்து வாங்கிப்படியுங்கள்!

                         இந்நூலை வாங்கி வாசித்தோர் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள்!
     
  



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

-- 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2142
Points : 4862
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 03, 2015 9:25 pm

வாழ்த்தும் பாராட்டும்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:29 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:22 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2142
Points : 4862
Join date : 18/06/2010

Back to top Go down

Re: நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum