"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:15 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:41 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Yesterday at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Yesterday at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Yesterday at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Sat Mar 07, 2015 12:27 am

அமிழ்தினும் இனிது!
நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் 
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்,
சென்னை – 600 017.  பேச : 044 42070663  விலை : ரூ. 80
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
*****
      நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களின் அமிழ்தினும் இனிது நூல் பெயர் பொருத்தம் மிக நன்று.  அமிழ்தினும் இனிய கவிதைகளை குழந்தைப் பாடல்களை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  தமிழன்னைக்கு அணி செய்யும் விதமாக படைத்துள்ளார்.  தமிழே அறியாமல் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகின்றன.  தமிழ்மொழி பற்றியும் பண்பாடு பற்றியும் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க உதவிடும் நூல்.  ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.  மிக எளிமையாகவும், இனிமையாகவும் பாடல்களை செதுக்கி உள்ளார்கள்.  படித்ததும் குழந்தைகள் மனதில் பதியும்படியாக செதுக்க உள்ளார்கள்.
      முதல் கவிதை புதிய ஆத்திசூடி படித்தால் போதும் வாழ்க்கையில் கடைபிடித்தால் வாழ்க்கை சிறக்கும். 
      புதிய ஆத்திச்சூடி!
      அனுதினம் பள்ளி செல்
      ஆசு நீக்கு
      இனிக்கப் பேசு
      ஈதல் சிறப்பு
      உள்ளம் தூய்மை செய்
      ஊக்கம் கொடு
      எண்ணித் துணிக
      ஏணி போல உதவு
      ஐயம் போக்கு
      ஒற்றுமையே உயர்வு
      ஓதுதல் விலக்கேல்
      ஒளவை வழி செல்.
      குழந்தகளுக்கு அறிவு புகட்டும் விதமாகவும், சொற்களையும் அதற்குரியனவற்றையும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் பாடல் புனைந்து உள்ளார்கள்.
      எறும்பைப் போல ...
      கரும்பைப் போல நீயும் / இனித்திட வேணும் பாப்பா
      எறும்பைப் போல நீயும் / உழைத்திட வேணும் பாப்பா
      மானைப் போல நீயும் / துள்ளிட வேணும் பாப்பா
      தேனைப் போல நீயும் / சுவைத்திட வேணும் பாப்பா
      இன்றைய குழந்தைகள் பள்ளி செல்கின்றனர்.  பள்ளி முடிந்து வந்து விளையாடுவதற்கு நேரமே இல்லை.  தனிப்பயிற்சி வகுப்பிற்கு அனுப்பி விடுகின்றனர்.  இரவாகி விடுகின்றது.  உறங்கி விடுகின்றனர்.  வெளிஉலகமே தெரியாத கிணற்றுத் தவளையாகவே வளர்ந்து வருகின்றனர்.  அவர்களுக்கு விளையாடுக என்று அறிவுறுத்தும் விதமாக வடித்த பாடல் மிக நன்று.
      முன்னின்று விளையாட்டை நடத்து!
      மாலையில் விளையாடு தம்பி – நீ / மகிழ்வாக ஓடியாடு தம்பி!
      வேளையில் பள்ளி செல் தம்பி – உனக்கு / வெறும் படிப்பு போதாது தம்பி     காலையில் கடமைகள் தம்பி – நீ / கனிவாகச் செய்திடுவாய் தம்பி
      வாழைபோல நன்மைகள் தம்பி – நீ / வளமாக செய்திடுவாய் தம்பி.!
      மகாகவி பாரதியார் பற்றி குழந்தைகளுக்கு அறிவிக்கும் விதமாக வடித்த பாடல் ஒன்று மிக நன்று.
      பாரதியாரின் கதை கேளு!
      எட்டையபுரத்தில் பிறந்தவர் / எளிமை வாழ்வில் சிறந்தவர்
      எட்டாவளர்ச்சி கவிதையில் 
      ஏழு வயதில் பாடினார்.
      குழந்தைப்பாடல் இசைத்தவர் / குயிலின் பாட்டில் மகிழ்ந்தவர்
      பழகும் பொருளை எல்லாமே / பாட்டில் கொண்டு வந்தவர்.
      பாரதியாரின் இயல்பையும், பாடிய வரிகளையும் கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் புலவர் இராம. வேத நாயகம்.
      அறிவியல் அறிவும் குழந்தைகளுக்கு அவசியம் தேவை.  எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று யோசிக்க வைக்க உதவுவது அறிவியல்.  எனவே அறிவியல் குறித்தும் பாடியது சிறப்பு.
      அறிவியலைப் படி!
      அறிவியலைப் படி தம்பி – நீ / ஆற்றலையே பெறு தம்பி!
      கருவிகளைப் பயன்படுத்தி – நீ / காரியங்கள் செய் தம்பி!
      ஏவுகணை பார் தம்பி – நல் / ஏற்றம் தரும் தம்பி!
      பாய்ந்து வரும் அணுகுண்டு / நம் பாரதத்தில் உண்டு தம்பி!
      அறுவடைத் திருநாள் உழைப்பைப் போற்றும் திருநாள் இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர் திருநாள் பொங்கல் பற்றிய பாடல் நன்று.
      பொங்கல் நல்ல பொங்கலாம்!
      பொங்கல் நல்ல பொங்கலாம் / புதுமையான பொங்கலாம்!
      எங்கும் உள்ள தமிழரும் / ஏற்றிப் போற்றும் பொங்கலாம்!
      புதிய பானை வைத்தே தான் / புதிய அரிசி போடுவர்!
      விதமாய் மஞ்சள் சேர்த்தே தான் / வெற்றி கீதம் பாடுவர்!
      ஒரு நூலகம் திறக்கும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்று பொன்மொழி உண்டு.  ஊடகங்களின் வருகையின் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து நூலகத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.  குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கத்தை பெற்றோர்கள் பழக்கி விட வேண்டும்.  நூலகம் பற்றிய கவிதை நன்று.
      நூலகமே வழிகாட்டி!
      நூலகமே வழிகாட்டி – நல்ல
      நூல்களே
      நூலகமே மதியூட்டி – நல்ல
      நூல்களே கைகாட்டி.
      மரபுக்கவிதையின் தனிச்சிறப்பு என்னவென்றால் எதுகை, மோனை, இயைபுடன் ஓசை நயத்துடன் படித்தால் மனதில் பதிந்து விடும்.  மரபுக் கவிதை விரும்பிகளுக்கு நல்விருந்தாக உள்ளது நூல்.  தமிழுக்கு அமுதென்று பேர் என்றார் புரட்சிக்கவிஞர் நூலாசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்கள்.  அமிழ்தினும் இனிது எம் தமிழ் என்று பறைசாற்றி உள்ளார்.
      நாளந்தா பல்கலைக்கழகம் என்பது ‘நாளும் தா’ என்ற தமிழ்சொல்லில் இருந்து வந்தது.  காளி கோட்டம் என்ற தமிழ்ச்சொல்லே கல்கத்தா என்றாகி தற்போது கொல்கத்தா ஆனது.  பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லே பாட்னா ஆனது.  இப்படி பல தகவல் அடங்கிய ஆங்கில ஒளிக்காட்சி கண்டேன்.  தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து நிற்போம் என்று சொல்லத் தோன்றியது.  இந்த நூல் படித்து முடித்த போதும் அந்த உணர்வே தோன்றியது.
      குழந்தைப்பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு தமிழ்மொழி அறிவையும் பொது அறிவையும் வளர்த்து உள்ளார்.
      மிதிவண்டி!
      மிதிவண்டி நல்ல மிதிவண்டி /   மிதமாய்ச் செல்லும் மிதிவண்டி
      புதுவண்டி நல்ல புதுவண்டி / போகும் விரைந்தே புதுவண்டி
      சிறுவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / சிறுமிகளும் நன்றாய் ஓட்டிடலாம்
      பெரியவர்கள் எல்லாம் ஓட்டிடலாம் / புதுமையான மிதி வண்டி.
      இந்தப் பாடல் படிக்கும் குழந்தைகளுக்கு மிதிவண்டி பற்றிய அறிவு மனதில் பதிந்து விடும்.  மிதிவண்டியை மறக்க மாட்டார்கள்.
      நூலாசிரியர் கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
*****



-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

Re: அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:22 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:23 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum