"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Go down

கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Post by eraeravi on Wed Mar 11, 2015 9:44 pm

[ltr]கவியமுதம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர்  ப .திருமலை
thirugeetha@gmail.com



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in


வாசிப்போரை வசீகரிக்கும் கவியமுதம்

கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய "கவியமுதம்" கவிதை நூலை வாசித்து முடித்தபோது சமூக யாத்திரை மேற்கொண்ட உணர்வு. நிகழ்கால நிஜங்களின் நிதர்சனத்தைக் காணமுடிந்தது.
 
நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் - தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி (ஒரு நத்தையால் மூன்றாண்டுகள் தூங்கமுடியும். என்னவளே நீ என்னோடு இருந்தால் என்னாலும் முடியும்), பெண்ணின் பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூகச் சித்திரிப்பு (வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் வால்முளைக்காத குரங்கு வர உள்ளது) உணர்ச்சி ஊர்வலம் (படிவங்கள் நிறைவு செய்யும்போது பார்த்தால் நிரந்தரமுகவரி கேள்விக்கு நெஞ்சு  வலிக்கும்) என்ற தலைப்புகளின் கீழ் தோழர் இரா. இரவி வடித்திருக்கும் கவிதைகள் வாசித்தவுடன் மனதை வருடவும் செய்கிறது. நெகிழவும் வைக்கிறது. நம்பிக்கையையும் தருகிறது. காதல் உணர்வை சுவாசிக்கவும் வைக்கிறது, 

கவிதையென்பது  ஒலிநயம்  அமைந்த சொற்களின்  கட்டுக்கோப்பு. அஃது  இன்பத்தை உண்மையுடன்  இணைப்பது, அறிவுக்குத்  துணையாக  கற்பனையைக் கொண்டிருப்பது  என்பது  ஜான்ஸன்  என்பாரின்  கூற்று. ''இசை  தழுவிய  எண்ணமே  கவிதை''.என்று கார்லைல்  என்பார் வரையறுக்கின்றார். ''மனிதச் சொற்களால்  அடைய  முடிந்த  மகிழ்வூட்டவல்லதும்  செம்மை  நிறைந்த கூற்றே  கவிதையாகும்'' இது  மாத்யூ அர்னால்டு  கவிதைக்குக்  கூறும்  இலக்கணம். இவையனைத்தும் தோழர் இரா. இரவி அவர்களின் கவிதைகளில் காணமுடிகிறது.

ஹைகூ திலகமாக திகழும் இவர் இன்றைக்கு நீண்ட கவிதைகள் மூலம் சமூகத்தைப் பார்த்திருக்கிறார். ஹைகூ எப்படி இருக்க வேண்டும்? ஹைகூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்,

"சமீபத்திலே மார்டன் ரிவ்யூ என்ற கல்கத்தா பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வது என்னவென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக்கவிதை சிறந்தது. காரணமென்ன?"

"ஜப்பானிய கவிதையில் வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய், இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி." என்கிறார். தோழர் இரா. இரவி அவர்கள் இயற்கையுடனும் சமூகத்துடனும் ஒன்றிய கவி. அதனால்தான் அவரிடமிருந்து வந்திருக்கிறது கவியமுதம்.

வாசிக்கவும், சமூகத்தின் முகத்தை அறியவும் உதவும் கண்ணாடி இந்த கவிதை நூல். வாசிக்க வாய்ப்பளித்த கவிஞர் இரவி அவர்களுக்கு வாழ்த்துகள். வாசியுங்கள் நீங்களும் உணர்வீர்கள். 
 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr]

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 17, 2015 2:22 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Post by eraeravi on Tue Mar 17, 2015 10:14 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2206
Points : 5054
Join date : 18/06/2010

Back to top Go down

Re: கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum