"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Today at 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Today at 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Today at 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Today at 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Today at 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Today at 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Yesterday at 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Yesterday at 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Yesterday at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Yesterday at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Yesterday at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Yesterday at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Fri May 29, 2015 9:02 pm

வள்ளுவர் வழியில் வாழ்வு !


நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !


நூல் விமர்சனம் கவிஞர் இரா. இரவி !


தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.  

ரூ. 40.



*****

      நூல் ஆசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல்  கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர்.   ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள்.  மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார்.  கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார்.  பாராட்டுகள்.


      “திருக்குறள் ஓர் ஆழ்கடல்.  அள்ளக் குறையாத அமிழ்தம்.  தெள்ளத் தெளிந்த நீரோடை.  இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை.  திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.


      நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.



[size=13]      அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
      இருக்கா இயன்றது அறம்.

  
                       திருக்குறள் 35


[/size]
இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.


      அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது.  அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.


      சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள்.  அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.


      அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


      மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,
[size]


      அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
      போன்றுங்கால் பொன்றாத் துணை

                        திருக்குறள் 30


[/size]
இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும்.  அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும்.  ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.


      திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,
[size]


      அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
      பண்பும் பயனும் அது.  

                                 திருக்குறள் 45


[/size]
      ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.


      இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.


      அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.
[size]


      அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
      என்னுடைய ரேனும் இலர் 

                        திருக்குறள் 430


[/size]
      அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
      வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.


      இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ! 1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243.


            திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.


      திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.


      30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார்.  பதச் சோறாக ஒன்று.


      பொறாமை பொல்லாதது!


      தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.
[size]


      அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
      தீயுழி உய்த்து விடும்

                                   திருக்குறள் 168


[/size]
      பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.


      ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.


      கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று.  இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.             



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



















































eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum