"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என்று முடியும் இந்தக் கொடுமை

Go down

என்று முடியும் இந்தக் கொடுமை

Post by karumalaithamizhazhan on Tue Jun 30, 2015 9:08 pm

என்று  முடியும்  இந்தக்   கொடுமை
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
கயர்லாஞ்சி    மகாராட்டிர   மாநி   லத்தில்
          கயமைக்குக்   காட்டாக    நிற்கும்   ஓர்ஊர்
வயலினிலே    தனமுழைத்தே    அந்த   ஊரில்
          வாழ்ந்திட்ட   சுரேகாஓர்   தலித்துப்   பெண்ணாம்
உயர்தற்குக்    கல்விநல்ல    ஏணி   என்றே
          உணர்ந்ததனால்    ஓரளவு    கற்றி    ருந்தாள்
தயக்கத்தைத்    தகர்த்தெறிந்தே    கணவ   னோடு
          தன்சாதி    கீழ்மையினை    எதிர்த்து   நின்றாள் !
 
ஆதிக்க    சாதிவெறி    அரக்கர்   தம்மின்
          அடக்குமுறை     கொடுமைக்குப்    பதிலு   ரைக்க
சாதிமாறி     அம்பேத்கார்    சென்ற   தைப்போல்
          சார்ந்திட்டாள்    புத்தமத    அரவ    ணைப்பில்
வீதியிலே    குடிசையாக    இருந்த    தன்னின்
          வீட்டைக்கல்    வீடாக்க    முனைந்த    போது
மோதியுயர்    சாதியர்கள்    தடைகள்   செய்தே
          மொத்தமாக     வெளியேற்ற    முனைந்து    நின்றார் !
 
வீட்டிற்கு     மின்சாரம்    துண்டித்    தார்கள்
          வீட்டினிலே    வளர்த்துவந்த    ஆடு    மாட்டை
கேட்காமல்    பலர்சேர்ந்தே     தடுத்த   போதும்
          கேள்விமுறை     இல்லாமல்    ஓட்டிச்    சென்றார்
வீட்டோடு     விவசாயம்    செய்வ    தற்கும்
          விட்டிடாமல்    கால்வாய்நீர்    தடுத்து   நின்றே
கூட்டாக     வயலையுமே     பொதுப்பா     தைக்குக்
          குறிவைத்தே     வன்முறையால்    பறித்துக்    கொண்டார் !
 
எதிர்த்திட்ட    சுரேகாவின்     குடும்பந்    தன்னை
          எழுபதிற்கும்     மேற்பட்ட     கிராமத்     தார்கள்
குதித்துவந்து    குண்டுகட்டாய்த்     தூக்கி    வந்து
          குரூரமாக     தெருவினிலே    நிற்க    வைத்து
விதிதிட்டார்     அவள்மகனைத்     தங்கை     யோடு
          விலங்கைப்போல்    உறவுகொள்ள     துன்பு   றுத்தி
மிதித்திட்டார் !  மறுத்ததனால்    அவன்உயிர்   நிலையை
          மிருகம்போல்    நசுக்கியுயிர்    பறித்துக்    கொன்றார் !
 
இலங்கையிலே    தமிழர்க்கு    நடந்த   போன்றே
          இங்கேயும்    சுரேகாவை    பெற்றெ    டுத்த
குலமகளைப்    பகற்பொழுதில்    பல்லோர்    காணக்
          குதறிட்டார்    கூட்டாக     உறவு    கொண்டு
நலமாக    சுயமரியா    தையில்    வாழ
          நற்கனவு    கண்டவளைக்    குடும்பத்     தோடு
நிலம்மீது    பிணமாக     வீழ்த்தி   விட்டார்
          நின்றெரியும்    உயர்சாதி   வெறித்தீ    யாலே !
 
மதிகாண    சந்திராயன்    அனுப்பி    யென்ன
          மங்கல்யான்    செவ்வாய்க்கு    விடுத்து   மென்ன
விதிமாற்றி   வல்லரசாய்    இந்தி    யாவை
          வியக்கின்ற    படிஉயர்த்த     முயன்று   மென்ன
மதிதன்னில்    சாதியத்தை    நீக்கி    விட்டு
          மனந்தன்னில்    மனிதத்தை    பதிய    வைத்துப்
புதியமாற்றம்    சாதியற்ற   இந்தி   யாவாய்
          புலராத    வரையெந்த    புகழும்    வீணே !
 
( மகாராட்டிர  மாநிலத்திலுள்ள   கயர்லாஞ்சி  ஊரினிலே  நடந்த  நெஞ்சை  உருக்கும்  உண்மை நிகழ்ச்சி  )
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum