"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீங்கள் குடிகாரனா? கண்டுபிடிக்க 51 எளிய வழிகள்.
by அ.இராமநாதன் Today at 11:14 am

» வாய் விட்டு சிரிக்கலாம்...வாங்க
by அ.இராமநாதன் Today at 11:12 am

» மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
by அ.இராமநாதன் Today at 10:37 am

» 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
by அ.இராமநாதன் Today at 10:36 am

» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
by அ.இராமநாதன் Today at 10:35 am

» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
by அ.இராமநாதன் Today at 10:34 am

» ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
by அ.இராமநாதன் Today at 10:33 am

» டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
by அ.இராமநாதன் Today at 10:32 am

» 38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
by அ.இராமநாதன் Today at 10:31 am

» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
by அ.இராமநாதன் Today at 10:29 am

» தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
by அ.இராமநாதன் Today at 10:28 am

» ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 10:24 am

» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மது ! கவிஞர் இரா .இரவி !

Go down

மது ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Aug 06, 2015 12:29 am

மது !         கவிஞர் இரா .இரவி !

இரண்டு எழுத்து எதிரி 
ஆக்கிடும்  ஒரு மாதிரி 
மது ! 

உன்னை மறந்து 
உளறிட வைக்கும் 
மது ! 

இடமாற்றம் செய்யும் 
ஆறிலிருந்து ஐந்திற்கு 
மது ! 

மெல்லக் கொல்லும் விசம் 
மேனியைச்  சிதைக்கும் 
மது ! 

மதிப்பை இழப்பாய் 
மண்ணில் வீழ்வாய் 
மது !   

வருமானம் அழிக்கும் 
வேதனை விளைவிக்கும்  
மது ! 

உறவுகள் வெறுக்கும் 
உணர்வுகள் மங்கும் 
மது ! 

என்றாவது என்று தொடங்கி 
என்றும் என்றாகும் 
மது ! 

வாழ்நாளைக் குறைக்கும் 
வழியை மாற்றும் 
மது ! 

வன்முறைக்கு வித்திடும் 
நன் மறைக்குப்    பகைவன்
மது ! 

பாவங்கள் செய்வாய் 
சாபங்கள் பெறுவாய் 
மது !

ஒழுக்கம் சிதைக்கும் 
உயிரை உருக்கும் 
மது !

அரவத்தை விட விசம்  
கொடிய திரவம் 
மது !

வேலைக்குப்பின் என்று தொடங்கி 
வேலைக்குமுன் என்றாகும் 
மது !

திறமையை அளித்து 
தீமையைத் தரும் 
மது !

விளையாட்டாக ஆரம்பித்து 
வாழ்க்கையில் விளையாடும் 
மது !

இலவசம் என்று குடித்தால் 
தன்  வசம் ஆக்கிவிடும் 
மது !

ஊடகங்களில்  
கற்பிக்கப்படும்  தீங்கு 
மது !

நல்லவர்கள் தொடுவதில்லை 
தொட்டவர்களை விடுவதில்லை 
மது !

இன்பம் என்று தொடங்கி 
பெருந்துன்பத்தில் முடியும் 
மது !

துஷ்டனைக் கண்டால் 
தூர விலகு 
மது ! .


அதனை நீ குடிக்க
அது உன் உயிர் குடிக்கும்
மது !
இலவசமென்றாலும் வேண்டாம்
உனைக் கொல்லும் நஞ்சு
மது !
என்றைக்காவது என்றுத் தொடங்கி
என்றும் வேண்டும் என்றாகும்
மது !
நண்பனுக்காகக் குடிக்காதே
நண்பனைத் திருத்திடு
மது !
சிந்தனையைச் சிதைக்கும்
செயலினைத் தடுக்கும்
மது !
மதித்திட வாழ்ந்திடு
அவமதித்திட வாழாதே
மது !
இன்பத்தைக் கொண்டாட
துன்பம் எதற்கடா
மது !
சோகத்தை மறந்திட
மருந்தன்று
மது !
நன்மை ஏதுமில்லை
தீமை ஏராளம்
மது !
இழப்பு பணம் மட்டுமல்ல
மானமும்தான்
மது !
இல்லத்தரசிகளின்
முதல் எதிரி
மது !
திறமைகளை மறக்கடிக்கும்
ஆற்றலை அழித்துவிடும்
மது !
உடலுக்குக் கேடு மட்டுமல்ல
ஒழுக்கக் கேடு
மது !
வீழ்ந்தவர்கள் கோடி
வீழ்வது தெருக்கோடி
மது !
அடிமை ஆக்கும்
அடி மடியில் கை வைக்கும்
மது !
மனிதனை மிருகமாக்கும்
பகுத்தறிவை மழுங்கடிக்கும்
மது !
குற்றவாளியாக்கும்
கொலைகாரனாக்கும்
மது !
நிதானம் இழந்து
நிலத்தில் வீழ்த்தும்
மது !
வாய் மட்டுமல்ல
வாழ்க்கையும் நாறும்
மது !
உழைத்தப் பணத்தை
ஊதாரியாக்கும்
மது !
குடி குடியை மட்டுமல்ல
சமுதாயத்தையும் கெடுக்கும்
மது !
கேடியாக மாறுவாய்
ஜோடிஇன்றி வாடுவாய்
மது !
தொடவே தொடதே
தொட்டால் பற்றிக்கொள்ளும்
மது !
மட்டமாக்கும் உன்னை
மடையனாக்கும் உன்னை
மது !
கேளீக்கை என்று தொடங்கி
வாடிக்கையாகிவிடும்
மது !

கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
 
மது !  
உள்ளே போனதும்
உன்னை இழப்பாய்
மது ! 

இரண்டும் அழியும்
பணம் குணம்
மது !  

இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு
மது ! 

குடலை அரிக்கும்
உடலை வருத்தும்
மது !  

மனக்கட்டுப்பாடு
இருந்தால்மனம் நாடாது
மது ! 

மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது ! 

உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும்
மது !  

குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும்
மது !  

சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய்
மது ! 

மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !  


அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் - கவிஞர் இரா .இரவி

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்

தீண்டாதே என்றும் மது !  கவிஞர் இரா .இரவி !

அறிவை இழக்க வைக்கும் மது !
ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும்  மது ! 
     
ஆற்றலை அழிக்கும்  மது !
ஆண்மையை குறைக்கும் மது !

தடுக்காமலே விழ வைக்கும்  மது !
தள்ளாடி விழ வைக்கும்  மது !

தரத்தை போக்கிவிடும் மது !
தன்மானம் இழக்க வைக்கும் மது !

பணத்தைப் பறிக்கும்  மது !
பண்பாட்டைச் சிதைக்கும் மது !
 
கேட்டை விளைவிக்கும் மது !
கேடுகெட்ட செயல் செய்யும் மது !

மதியை மயக்கிடும் மது !
மானம் கெட வைக்கும் மது !

பாதையைத் தவறாக்கும் மது !
போதையால் மூடனாக்கும் மது !

குடும்பத்தைப் பிரிக்கும் மது !
குழந்தைகள் வெறுக்கும் மது !

சோகத்தில் ஆழ்த்தும்   மது !
சோம்பேறி ஆக்கும்  மது !

சினம் கூட்டிடும் மது !
சிந்தையை சீரழிக்கும் மது !

வாழ்நாளைக் குறைக்கும் மது !
வளங்களை அழிக்கும் மது !

வஞ்சியர் வெறுக்கும் மது !
வாஞ்சையை நீக்கும் மது !

குடலை அரிக்கும் மது !
கூனிக் குறுக வைக்கும் மது !

விவேகத்தை  வீணடிக்கும் மது !
வீரத்தை குறைக்கும் மது !

நண்பனை பகைவனாக்கும் மது !
நட்பை முறித்திடும் மது !

நல்லவனை கெட்டவனாக்கும் மது !
நல் வழி மாற்றிடும் மது !

நலத்திற்குக் கேடு மது !
நீதி தவறிட வைக்கும்  மது !

முன்னேற்றத்தின் தடை மது !
முயற்சியை முறிக்கும் மது !

சாதனையின் பகைவன் மது !
சாத்தானின் நண்பன் மது !

தீங்கினும்   தீங்கு மது !
தீண்டாதே என்றும் மது !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மது ! கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar on Tue Aug 11, 2015 9:00 pm

போதை  ஊட்டும் மதுவை  விலக்க, போதனையாய்,எச்சரிக்கையாய் நல்பாதை காட்ட உச்சரிக்கும்  மெய்வரிகள்  மிக மிக  அருமை .
avatar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 224
Join date : 30/03/2013
Age : 60
Location : Jeddah

Back to top Go down

Re: மது ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Tue Aug 11, 2015 9:55 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மது ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum