"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:33 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Yesterday at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Yesterday at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Yesterday at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:42 am

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:41 am

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:39 am

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:36 am

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:35 am

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:30 am

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:29 am

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:28 am

» வெற்றி மொழி: சைமன் சினக்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:15 am

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:00 am

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:59 am

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இஃதோர் கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

View previous topic View next topic Go down

இஃதோர் கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

Post by eraeravi on Thu Sep 03, 2015 8:36 pm

இஃதோர்
கன்னிப்பெண் விழி
நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன், gowthamrajk3@gmail.com 87548 67116.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
செரி சாலை, சேலம் – 636 007.  பேச : 98429 74697
விலை : ரூ. 55

*****
       நூல் ஆசிரியர் கவிஞர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் அவர்கள் பொறியாளர். இவருக்கு முதல் நூல்.  அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ர.ஷே.தா. வஹிதா பானு பாவலர் எழு ஞாயிறு ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன. இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை நன்று.

       கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும்.  நூலாசிரியர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் விதிவிலக்கு அல்ல.  நூலில் காதல் கவிதைகள் பல உள்ளன.  28 தலைப்புகளில் புதுக்கவிதைகள் எழுதி உள்ளார். 

       இரு கவிதை !

       என் கையில் கவிதைப் புத்தகம்
       முன்னால் அவள்
       ஒரே நேரத்தில்
       இரு கவிதைகளை
       எப்படி வாசிப்பது ...?



       பெண்களுக்கு கவிதை பிடிக்கும்.  பெண்ணையே கவிதை என்கிறார்.  வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்.  எள்ளல் சுவையுடன் இனிக்கும் கவிதை நன்று.

       மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய காவியக் கவிஞர் வாலி மறைவிற்கு வடித்த கவிதை நன்று.

       என் வாலிபனே ...!

       (காவியக் கவிஞர் வாலி அவர்களின் இறப்பில் வலித்தது)
       வாலிப கவிஞனே!
       இம்மண்ணை விடுத்த வலி
       நெஞ்சி முள்ளாய் நெஞ்சம் தைக்கின்றது...
       ஈவிறக்கம் இல்லா வானமே ...
       எம் மறவனை ஆட்கொண்டு தான்
       உன் பசி தீர்க்கின்றாயோ...!



       நூலாசிரியர் கவிஞர் என்ற முறையில் மற்றொரு மூத்த கவிஞர் வாலி மரணத்திற்காக மனம் வலித்தது கவிதை வடித்த பாங்கு நன்று.

       தொடக்க நிலையில் காதல் கவிதை வரும்.  அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் வடிக்க முன்வர வேண்டும்.

       நீ நடக்கையில் நான் தெருக்கோலம் !


       ஒரு கார்காலப் பறவையாய் நான்
       மீசை அரும்பியதை
       காதல் அரும்பியதைக் கொண்டு
       கணிக்கும் சாமான்யன்
       எதிர்வீட்டு ஈர விழிகளில்
       என் வீட்டு ஜாடி பூத்தது
       தார்ச்சாலை தகவல் பெட்டியாய்
       உன் வாசம் அஞ்சல் சேர்த்தது
       உன் வீட்டு நாய்க்குட்டியும்
       நானும் தோழர்கள்
       எப்பொழுதும் உன் பின்னாலேயே
       இருவரும் சுற்றுவதால்...



       காதலியின் பின்னால் காதலன் சுற்றுவது அன்று தொட்டு இன்று வரை மாறாத வழக்கம், பழக்கம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

       பார்வை !

       என் கண்களின்
       இமைகளுக்குள்
       ஒரே சுமை
       அவளைப் பார்த்து பார்த்து
       தேக்கி வைத்த காதல்.



       காதல் என்பது கண்கள் வழி தொடங்கி மூளையில் பதிவாகி எண்ணத்தில் வெளிப்படுவது.  காதலின் முன்னுரை என்பது கண்களால் தான் எழுதப்படுகிறது.

       கண்ணாடி !

       ஆணழகுப் பெட்டகத்தில்
       நானழகு என்றென்னை
       மார் தட்ட வைத்த
       கன்னிப்பெண் விழிகள் !



       மீனவர்கள் துன்பம் கண்டு உணர்ந்து எழுதிய கவிதை நன்று. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று திரும்பி வருவது உறுதி இல்லை.  அண்டை நாடு என்கிறோம் இலங்கை.  ஆனால் அண்டை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட இப்படி நடந்து கொள்வது இல்லை.  நட்பு நாடு என்று சொல்லப்படும் இலங்கை, நாள்தோரும் தமிழக மீனவர்களைச் சுடுவது, தாக்குவது, வலைகளை அறுப்பது என்ற கொடூரத்தை நடத்திக் கொண்டே இருக்கின்றது.  தட்டிக் கேட்க நாதி இல்லை.  இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இக்கவிதை. 

       தண்ணீர் தேசத்து தாகம்!

சூரியன் எழுகையில்
சுள்ளென முகம் நனைக்கும்
கதவெங்கள் வீடு…
அதை தாண்டி அனுப்பிய கணவன்
கால் பதிக்கும்
நாழிகை தொட்டு
காரிகைகள் கண்ணீர் சொட்டும்
பாடெங்கள் பாடு.

அண்டை நாட்டுச் சிறை
எங்கள் ஆஸ்தான வாசற்படி   
தாய் மண்ணிலிருந்தும்

கேட்க நாதியில்லா
அநாதை

எங்கள் பெயர்!


வாள் முனையை விட பேனா முனைக்கு ஆற்றல் அதிகம்.  பல ஆதிக்கங்கள் அகற்றிய வரலாறு பேனா முனைக்கு உண்டு.  பேனா பற்றி வடித்த கவிதை நன்று.

ஒவ்வொரு பேனாவிற்கும்
அநியாயங்களைக் கேட்க

ஆசைகளைத் தீர்க்க
       ஆயிரம் எழுத்துக்கள் எழுத

ஆயிரம் எழுத்த்துக்கள் எழுத
       சீமைத்துரை தேவையில்லை.
       நீ வா …! பேனாக்கள் காத்திருக்கின்றன…!
       உனக்கென மரங்கள்
       தாள்கள் தூவுகின்றன…
       எழுதவா எண்ணங்கள் இல்லை…
       கேட்கவா சமுதாயம் இல்லை…?
       பல்லாயிரம் முகத்திரைகள்
       கிழித்தெறியப்பட காத்திருக்கின்றன.
       பல லட்ச் தாய்மார்களின்
       கண்ணீரில் மையெடு!



வித்தியாசமான கவிதைகள் உள்ளன.
சமுதாய விழிப்புணர்வு வேண்டும், அநீதிக்கு எதிராக படைப்பாளிகளின் சிந்தனை வரவேண்டுமென்ற ஆசை நன்று.
நூலின் கடைசிக்கவிதை நன்று.

முதல் தடம் !


பதித்திருக்கிறேன்
      முட்கள் இல்லாமல்

பார்த்து பார்த்து
      இனி போகும் தடமெங்கும்

ஓர் தடாகம்
      பதித்து விட வேண்டுமென்ற

வாஞ்சையுடன் !


முதல் தடம் முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது.  பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.  வாழ்த்துக்கள்.  தரமாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்பித்த வாசகன் பதிப்பகத்திற்கு
பாராட்டுகள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum