"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Today at 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Today at 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Today at 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Today at 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Today at 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Today at 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Today at 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Today at 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Today at 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Today at 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Today at 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Today at 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Today at 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Today at 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Today at 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:26 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 pm

» மற்றுமோர் ..(கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " உரை; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 2:18 pm

» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

கலாமின் கனவுத் தோட்டம் ! நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Oct 29, 2015 8:38 pm

கலாமின் கனவுத் தோட்டம் !
நூல்ஆசிரியர் : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் !
நூல் விமர்சனம்
: கவிஞர் இரா. இரவி !
*****
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட்
41-b,சிட்கோ இண்டஸ்டிரியல்  எஸ்டேட் ,
அம்பத்தூர் ,சென்னை .600 098  .
பேச 26241288.
பக்கம் 77 விலை 70 ரூபாய்
       நூலாசிரியர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்கள் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர்.  முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள், பாக்யா வார இதழில் பயணச்சுவடுகள் தொடரில் குறிப்பிட்ட வைர வரிகள் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
       “சந்திரன் போல மாணவர்களை வழிநடத்தும் மேன்மையான தமிழாசிரியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தமிழின் எதிர்காலம் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது

       ஆம், உண்மை. இனிய நண்பர் கவிஞர் ஞா. சந்திரன் சராசரி தமிழாசிரியர் அல்ல, சாதனை தமிழாசிரியர்.  கலாமின் கனவுத் தோட்டம், கலாம் பற்றிய சுருக்க வரலாறு, வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தும் ஆவணப்படுத்தி உள்ளார்.  இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

       புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது.  நூலின் வடிவமைப்பு அச்சு, தரமான தாள்கள் என சிறப்பாக வந்துள்ளது, பாராட்டுக்கள்.

       மாமனிதர் கலாம் பற்றிய நூலை அவருக்கே காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம்.  இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரண்மாக அமைந்து உள்ளது.  கலாம் பற்றிய கவிதை மிக நன்று.
       பெயர் அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.  பிறப்பு 15-10-1931 என்று தொடங்கி அவர் பெற்ற விருதுகள், எழுதிய நூல்கள், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்.

       பணத்தேவைக்காக, தான் ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விற்க முனைந்தார்.  ஆனால், பழைய புத்தகக்கடைக்காரரோ, புத்தகத்தை அடகாக வைத்துக் கொள்கிறேன்.  பணம் வந்ததும் தந்து மீட்டுக் கொள்ளச் சொல்லி உதவியதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

       மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள், அக்கினிச் சிறகுகள் நூலில் குறிப்பிட்ட தகவல்களில் முக்கியமான தகவல்களை சுருக்கமாக வழங்கி உள்ளார்.

       விமானத்தில் பயணிக்கும் போது சாதாரண வகுப்பே போதும், உயர்வகுப்பு வேண்டாம், அது கட்டணம் கூடுதல் என்பதற்காக மறுத்தவர் கலாம் என்ற தகவலும் நூலில் உள்ளது.

       மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில் சொகுசு நாற்காலி வேண்டாம், சாதாரண நாற்காலி போதும் என்று சொல்லி அமர்ந்த நிகழ்வும் உள்ளது.  குழந்தைகளை நேசித்த விதம், மனதில் தன்னம்பிக்கையோடு செயல்பட்ட குணம், ஊழல் இல்லாத இந்தியா வேண்டும் என்று விரும்பிய எண்ணம், பாதுகாப்பு வீரரின் மீது காட்டிய மனிதநேயம், மாமனிதர் கலாம் அவர்களின் கல்விக்காக சகோதரி, தன் நகை கொடுத்து உதவினார், பின்னர் அடகிலிருந்த நகையை மீட்டுத் தந்த நிகழ்வு அக்கினிச் சிறகுகளில் நூலில் உள்ள பல தகவல்களும் அவரது மறைவிற்கு பின் செய்தித்தாளில் வந்த செய்திகளையும் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்.

       மாமனிதர் அப்துல் கலாம் பற்றி மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், தன்னம்பிக்கை பெற விரும்பும் மாணவர்களுக்கும் பயன் தரும் நூல்.

       கலாமின் அம்மா, கலாம் கேட்க, கேட்க சப்பாத்தி தந்து விட்டு, அவர் பசியோடு உறங்கியதை அண்ணன் எடுத்து இயம்ப, பின்னர் அறிந்து, தாயின் பாசம் கண்டு கலாம் கண்கலங்கி நெகிழ்ந்த நிகழ்வு நூலில் உள்ளது.

       அக்னிச் சிறகுகள் நூலில் உள்ள பல செய்திகள் இந்த நூலில் உள்ளது. அக்னிச் சிறகுகள் படிக்காதவர்களுக்கு புதிய தகவலாக அமையும், படித்தவர்களுக்கு திரும்ப அசை போட உதவும்.
       அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சிறுசிறு துணுக்குகளாக வழங்கி உள்ளார்.  படித்ததும் மனதில் அப்படியே பதிந்து விடுகின்றது.

       மனிதர்களில் மாணிக்கமாக விளங்கிய மாமனிதர்.  குழந்தை உள்ளம் படைத்த பெரிய மனிதர். வள்ளுவரின் வாக்குப் போல வாழ்வாங்கு வாழ்ந்த  மனிதர்.  “தோன்றின் புகழோடு தோன்றுக... குறளுக்கு இலக்கணமானவர்.  எளிமை, இனிமை, நேர்மை என்பதை வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரலாறு படைத்துள்ள கலாம் அவர்களீன் பிம்பத்தை மேலும் உயர்த்தும் விதமாக அவரின் புகழ் பரப்பும் விதமாக படித்ததை, கேட்டதை, அறிந்ததை, பார்த்ததை, நூலாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.

       பறவையைக் கண்டான், விமானம் படைத்தான் என்ற கவியரசு கண்ணதாசன் வைர வரிகளுக்கு ஏற்ப பறவை பறப்பதை கண்ணுற்ற கலாம் அவர்கள் விஞ்ஞானியாக உருவெடுத்த விதம் நூலில் உள்ளது.

       எடை குறைவான செயற்கைக் கால்கள் வடிவமைத்து அதனை அணிந்து போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் எளிதாக நடந்து வருவதைக் கண்டு மகிழ்ந்தவர் கலாம் என்ற தகவலும் நூலில் உள்ளது.

       பதவி ஏற்பு விழா காண வந்த உறவினர்களின் செலவை அரசு ஏற்க முன்வந்த போதும் தன் சொந்த பணத்தை செலவழித்த நிகழ்வு நூலில் உள்ளது.

       கலாம் வியந்த கதை, திருப்பதியில் விதிகளை மதித்து பதிவேடு கொண்டு வரச்சொல்லி கையொப்பம் இட்டது.  இப்படி பல நிகழ்வுகள் உள்ளன.

       அவருடைய சிந்தனை, பொன்மொழி நூலின் இறுதியில் உள்ளது.  இனிய நண்பர் கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களும் நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் மாமனிதர் கலாம் அவர்கள், மதுரைக்கு வந்திருந்த போது, அரவிந்த் கண் மருத்துவமனை இல்லத்தில் தங்கி இருந்த போது நேரடியாக சந்தித்து பேசி மகிழ்ந்தோம்.  அவர் மீதான அன்பின் காரணமாக அவர் பற்றிய செய்திகளை உற்று நோக்கி தொகுத்து நூலாக்கி உள்ளார். 

இந்த நூல் அடுத்தடுத்த பதிப்புகள் வரும் என உறுதி கூறலாம்.  அடுத்த பதிப்பில் அட்டைப்படத்தை மாற்றுங்கள்.  மாமனிதர் கலாம் படங்கள் இணையத்தில் நிறைய உள்ளன.  கன்னத்தில் கை வைத்து சோகமாக இருப்பது போல உள்ளது. உற்சாகமான படமாக மாற்றி விடுங்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum