"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறிமுகம்
by தியான் Today at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Today at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Today at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Today at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Today at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Today at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Today at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Today at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Today at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Today at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Tue Nov 03, 2015 10:23 am

நினைவெல்லாம் உன்னோடு
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை
 : கவிஞர் இரா. இரவி
*****
       ‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர்.  சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.

       இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.  நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன்.  அப்போதே அவரிடம் சொன்னேன்.  விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று.  என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.

       உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.

       முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார்.  வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.

       எனக்குப் பிடிக்கும்!

நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!

       நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
       அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!

       நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
       பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.



       பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள்.  இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.

       காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.  நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார்.  சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!

       தோல்வி!
       நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
       உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
       உன் பெயரைச் சொன்னதால்.



       அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார்.  கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.

       அரசியல்வாதி!
       நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்தது
       கடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
       நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.



       நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள்.  படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.

       நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை.  அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!

       மாண்டு போன மனிதநேயம்!
       மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
       மண்ணில் புதைத்து விட்டோம்.

       அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
       ஒரு கோட்சே!

       இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
       தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!



       பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார்.  முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன.  பாராட்டுக்கள்.

       ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார்.  பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!.  பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன்.  எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன்.  அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.

       ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன.  சிந்திக்க வைக்கின்றன.  எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.

       சிகரெட் !
       பற்ற வைப்பதே
       விரைவில்
       பற்ற வைக்கத்தான்.



       விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.  புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும். 

       உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.

       திருக்குறள் !
       வார்த்தைப் பூக்களால்
       தொடுக்கப்பட்ட
       வாழ்க்கை மாலை!



            தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது,  நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!
      
       சினிமா!
       சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்
       அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
       ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
       ஏனோ நினைப்பதில்லை.



       இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று.  படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.

       புல்லாங்குழல்!
       உடம்பிலே பட்ட காயத்திற்கு
       உதடுகளால் ஒத்தடம்
       நன்றிக்கடனாய் / நாதம்!



       நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.
       நாய் / பேசியது / வாலால்!


       வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை.  அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.

       பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

       கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.

       நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது.  புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு.  இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது.  தொடர்ந்து எழுதுங்கள்.  வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல்.  படித்துப் பாருங்கள்.  என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.
--

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum