"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிதாய் பிறந்தோம்

Go down

புதிதாய் பிறந்தோம்

Post by karumalaithamizhazhan on Tue Jan 05, 2016 12:22 pm

இன்று   புதிதாய்   பிறந்தோம்
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
பூத்திருக்கும்   பூஞ்செடிகள் !   பச்சைப்   பட்டைப்
            போர்த்திருக்கும்   மலைச்சாரல் !   வானை   முட்டக்
காத்திருக்கும்   பசும்மரங்கள் !   அடர்ந்த   காடு
            கவின்கொஞ்சும்    தோப்புகளும்   சோலை   சேர்ந்து
கூத்திசைக்கும்   இயற்கைவளம்   மாசே   யின்றிக்
            குவிந்திருக்கும்   புதுவுலகைப்   படைப்ப   தற்கே
ஏத்தியிங்கு   பிறந்திட்டோம்   புதிதாய்   என்றே
            எல்லோரும்   இணைந்திடுவோம்   வாரீர்  இன்று !
 
சாதிகளின்   பிரிவுயின்றி   உயர்வு   தாழ்வு
            சண்டையின்றிச்   சாத்திரத்தின்   பேத   மின்றி
ஆதிக்க   மதங்களின்றி   வணங்கு   கின்ற
            ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து  மின்றி
வாதித்து   வருத்தத்தை   வளர்ப்போ   ரின்றி
            வளரன்பே   நிறைந்திருக்கும்   உலகம்   தன்னைச்
சாதிக்கப்    பிறந்திட்டோம்   புதிதாய்   என்று
            சரித்திரத்தைப்   படைத்திடுவோம்   வாரீர்  இன்று !
 
பலமொழிகள்   பேசினாலும்   அறிவு   என்னும்
            பாலத்தால்   ஒருங்கிணைத்துக்   கணினி   மூலம்
பலரிடத்தும்    பலமொழியில்    பேச   தற்குப்
படிசமைத்து     மொழிச்சண்டை    ஏது   மின்றி
இலக்கியங்கள்   மொழிமாற்றம்    செய்து   தம்தம்
                                    இலக்கியமாய்ப்    போற்றுகின்ற    பொதுமை   நெஞ்சில்
                        கலந்தபுது   உலகத்தைப்   படைப்ப  தற்கே
                                    கரம்கோர்ப்போம்   புதிதாகப்    பிறந்தோ   மென்றே ! 
 
                                    
 உயர்சக்தி   அணுக்குண்டை   அழிவிற்    கின்றி
            உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைத்தே
உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை
            உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாம்   என்றும்
அயல்நாட்டை    அச்சுறுத்தும்    இராணு   வத்தின்
            அணிவகுப்பு    போர்க்கருவி   ஏது   மில்லா
நயவுலகைப்   புதிதாகப்   படைப்ப   தற்கே
            நாம்பிறந்தோம்   எனஇணைவோம்    வாரீர்   இன்று !  
 
 
நாடுகளுக்    கிடையெந்த   எல்லை   யின்றி
            நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யின்றி
வாடுகின்றார்   ஒருநாட்டு   மக்க   ளென்றால்
            வளநாடு    கரங்கொடுத்துக்   காத்து   நின்று
பாடுபட்ட   பலனெல்லாம்    அனைவ   ருக்கும்
            பகிர்ந்தளிக்கும்    பொதுவுடைமை   உலகு   தன்னைப்
பீடுடனே    புதிதாகப்    படைப்ப   தற்குப்
            பிறந்திட்டோம்    எனஇணைவோம்  வாரீர்  இன்று !


(தினமணி  நாளிதழின்  கவிதை மணியில்  4-1-2016இல் வெளிவந்த கவிதை)

 
 
                                     
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum