"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி

Go down

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி

Post by eraeravi on Thu Jan 07, 2016 8:36 pm

ஹைக்கூ முதற்றே உலகு !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.

Dr. E.K. RAMASWAMY, M.A., Ph.D., (Retd.),
Prof. & Head,
Tamil Advance Research Centre,
Yadava College, Madurai – 625 014.
“Malaragam”
3/191, Kavimani Street, Bank Colony,
Narayanapuram, Madurai – 625 014.  Mob.: 98420 08954, Ph.: 0452 - 2680606
நூல் அரங்கம்
*****
       கவிஞர் இரா. இரவியின் “ஹைக்கூ முதற்றே உலகு” என்ற கவிதை நூல் 27-12-2015 அன்று வெளியிடப்பட்ட்து.  ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது போல ஹைக்கூ கவிதை இன்றியமையாத இலக்கிய வகைமையாகி விட்டது இன்று.  இந்த உண்மையைப் புத்தகத்தின் தலைப்பே காட்டுகின்றது.

       முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., “தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ஆகிய இரண்டு தமிழறிஞர்களின் அணிந்துரைகள் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

       இறையன்பு, தமது மதுரை வாழ்க்கை ‘ஹைக்கூ திலகம்’ இரவியுடன் இணைந்து பயணித்ததைப் பதிவு செய்துள்ளார்.  திருவள்ளுவரையும், சேக்சுபியரையும் ஒப்பாய்வு செய்த இறையன்புக்குத் தகவல்களைத் திரட்ட உதவியதோடு, தகவலாளிகளையும் இரவி அறிமுகம் செய்து வைத்த பாங்கினை நினைவுகூர்கின்றார்.  அரிய தகவல்களைத் தந்த இரவியினைப் ‘புலிப்பால் இரவி’ என்று பாராட்டுகின்றார் இறையன்பு.

       அல்லதை நீக்கி நல்லதைப் பாராட்டும் பண்பாளர் மோகன், இதனை இரவி படைத்துள்ள 15ஆவது நூல் என்று கணிக்கிடுகின்ரார்.  ‘விழிகளில்’, ‘உள்ளத்தில்’, ‘நெஞ்சத்தில்’ ‘மனதில்’ நிறைந்த ஹைக்கூவை இப்போது உலகெங்கும் நிறைந்திருக்கும் ஹைக்கூவாக்க் காட்டுகின்றார்.

       முடியாது என்று
       நினைக்கும் போது
       தொடங்கிடும் தோல்வி !



இவ்வாறு தன்னம்பிக்கையின் தேவையையும்,


இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம் !



              இவ்வாறு இயற்கை எழிலையும் சித்திரிக்கும் இரவியின் கவிதைப்-புனைதிறனைப் பாராட்டுகின்றார் மோகன்.

                    இரவியின், ‘என்னுரை’யில் அவர் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத ஏக்கத்தைப் பார்க்கிறோம்.  அதே சமயம் அவருடைய கவிதைப் படைப்புகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பதை அறிந்து அவர் பெருமிதம் கொள்வதையும் பார்க்கின்றோம்.  அவருடைய மூத்தமகன் பிரபாகரன், தியாகராசர் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு இரவியின் 10 ஹைக்கூகள் பாடமாக அமைந்துவிட்ட இன்ப அதிர்ச்சியை அசை போடுகின்றார்.

                    தகவல் தொடர்புகளிலும், கணினியிலும், சமூகவலைத் தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளையாடும் இரவிக்கு ஊற்றாக வருகின்றது ஹைக்கூ.  இவ்வாறு தங்கமூர்த்தி இரவியின் படைப்பாற்றலையும், தனித்திறனையும் நேர்த்தியாகப் பதிவு செய்தார்.

                    ஹைக்கூ வகைமைகளில் ஒன்று பழ்மொன்ரியு.  அது பழமொழியைப் புதுமொழியாக்கிக் கட்டமைப்பிலும், பொருண்மையிலும் புகமை ஏற்றுவது.  தமிழில் அதன் முன்னோடி ஈரோடு தமிழன்பன்.  அந்த வடிவம் இரவிக்குக் கைவந்த கலை, இதோ,

       வேண்டாம் மூட நம்பிக்கை
       சனிப்பிணம் கேட்காது
       துணைப் பிணம்!

              ஆள் பாதி
              ஆடை பாதி
              நடிகை !

       ஆடி மாதம்
       தேடி விதைக்கவில்லை
       பெய்யவில்லை மழை !

       மருமகள் உடைத்தால்
       பொன்குடம், தவறு
       பொன்குடம் உடையுமா?

மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கலாம்
ஆற்றிலும் மண் தான் !

       ஆசைப்படலாம் முடவன்
       கொம்புத்தேனுக்கு
       கடையில் கிடைக்கும்”.

       நிறைவாக !.
       ஹைக்கூ திலகம், இப்போது பழமொன்ரியாக வளர்ந்து விட்டார். துணிவுக்கும், புதுமைக்கும் காட்டாக விளங்கும் இரவி வாழ்க வளமுடன்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum