"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் கண்ட இலங்கை

View previous topic View next topic Go down

நான் கண்ட இலங்கை

Post by karumalaithamizhazhan on Thu Mar 31, 2016 2:39 pm

நான் கண்ட  இலங்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
ஈழமெனும்   தலைப்பினிலே   இலங்கை  நாட்டில்
          இயங்குகின்ற   தடாகமெனும்  கலைவட்   டத்தார்
வேழமெனும்  சுவைதமிழில்   கவிதைப்  போட்டி
          வைத்துலகோர்  கலந்துகொள்ள   அழைத்தி   ருந்தார்
ஆழமான  கருத்துடனே   கவிதை  யாத்தே
அனுப்பியதில்   முதல்வதாகத்   தேர்வு   பெற்று
சூழபுகழ்   கவியருவி   விருது   வாங்க
          சுடர்மனையாள்   துணையுடனே    இலங்கை   சென்றேன் !
 
விருதுதனைப்  பெறுவதற்கு   முன்பு   ஈழ
          விடுதலைக்காய்ப்   போர்புரிந்த   புலிகள்   தம்மின்
திருவடிகள்   பட்டயிடம்   காண்ப   தற்கே
          திருவான   யாழ்ப்பாண   நகர்க்குச்  சென்றேன்
அருநூல்கள்   குவிந்திருந்த   நூல  கத்தை
          அனல்தீயால்   எரித்திட்ட   சுவடு   மாறி
பெருமையுடன்   நிமிர்ந்துநிற்கும்   அழகு   கண்டு
          பெருமிதமாய்   நூல்களினைத்   தொட்டுப்  பார்த்தேன் !
 
புவிவியந்து   பார்த்தவனின்   அடிகள்   தாங்கி
          புலித்தலைவன்   பிரபாவைச்   சுமந்த   மண்ணாம்
நவில்தோறும்   நவில்தோறும்   நாவில்  சூட்டை
          நன்கேற்றி   மறவுணர்வை  ஏற்றும்   மண்ணாம்
செவிகளிலே   இன்னுமவர்   முழக்கம்  கேட்டுச்
          செயலூக்கம்   பெற்றிருக்கும்   சிவந்த   மண்ணாம்
குவித்திரண்டு   கைகளிலே   வவுனியா   மண்ணைக்
          கும்பிட்டு   நெற்றியிலே   திலக   மிட்டேன் !  (1)
 
 
உலகத்தை   அண்ணாந்து   பார்க்க  வைத்தே
          உயர்தமிழன்   வீரத்தைக்   கண்முன்  காட்டிக்
குலம்காக்கப்   போர்புரிந்த   யானை  யிறவு
          குலைநடுங்கச்  சிங்களரை  அஞ்சச்  செய்து
புலம்மீட்கப்   போர்புரிந்த   சாவகச்  சேரி
          புறம்காட்டா   கிளிநொச்சி  முல்லைத்   தீவை
வலம்வந்து   வலம்வந்து   மண்ணைத்   தொட்டு
          வணங்கிவீர   வணக்கத்தைச்   செலுத்தி   நின்றேன் !
 
பெண்களொடு   ஆண்களுமே   பயிற்சி   பெற்ற
          பெருவன்னிக்   காட்டிற்குள்   கால்ப   தித்தேன்
கண்போன்ற   கடல்புலிகள்   பயிற்சி  பெற்ற
          கவின்நீச்சல்   குளம்தன்னைத்  தொட்டுப்   பார்த்தேன்
உண்ணாமல்   உறங்காமல்   ஈழம்   காண
          உயிர்த்தியாகம்   புரிந்திட்ட   புலிகள்  தம்மின்
எண்ணத்தைச்   சுமந்தங்கே   வீசும்  காற்றை
          என்னுள்ளே   இழுத்தந்த   உணர்வைப்  பெற்றேன் !
 
வீடுநிலம்   முழுவதையும்   பறித்துக்  கொண்டு
          விடுதலைக்குத்   துணைநின்ற   தமிழர்   தம்மை
ஆடுமாட்டை   அடைத்துவைத்த   பட்டி  போன்றே
          ஆண்பெண்கள்   குழந்தைகளை   அடைத்து   வைத்த
ஏடுகளில்   படித்திட்ட   முள்ளி   வாய்க்கால்
          எழுத்தினிலே   தரவியலா   துயர   மண்ணைக்
கேடுகெட்ட   தமிழகத்துத்    தமிழ   னாகக்
          கேள்விகணை   துளைத்திடவே   பார்த்து   நின்றேன் !
 
 
--- 2 ----
 
வகைவகையாய்த்   துப்பாக்கி   ரவைகள்   குண்டு
          வான்துளைத்த   ஏவுகணை   டாங்கி   என்றே
பகையான   சிங்களர்கள்   நடுந  டுங்க
          பாய்ந்திட்ட   வானூர்தி  !   கடலுக்   குள்ளே
திகைக்கவைத்த   நீர்மூழ்கிப்   படகு   என்றே
          தீரமுடன்   போர்புரிந்த   செய்தி   யெல்லாம்
மிகையன்று   வரலாற்றின்   உண்மை   யென்று
          மீட்டுவைத்த   கருவிகளைச்   சான்றாய்க்   கண்டேன் !
 
விதவையரே   நிறைந்திருக்கும்    முல்லைத்   தீவின்
          வீடுகளின்   ஆண்களெல்லாம்   இராணு   வத்தின்
மதயானைத்    தாக்குதலில்   களப்பலி   யாக
          மகன்களெல்லாம்   கொத்துகுண்டால்   எரிந்து   போக
நிதநிதமும்   செத்துசெத்து   இராணு  வத்தின்
          நீள்கண்ணில்    பட்டிடாமல்   பெண்பிள்   ளையை
விதவைத்தாய்   காக்கின்றாள்   பொத்தி   பொத்தி
          வீதிகளில்   காப்பில்லா    அவலத்   தாலே !
 
உண்மைகளை    எழுதுதற்கோ   உரிமை   யில்லை
          உரியவாழ்வு   இன்னுமங்கே   கிடைக்க  வில்லை
கண்ணீரும்   சோகமுமே   நிறைந்தி   ருக்கும்
          காட்சிகள்தாம்   என்கண்ணில்   பட்ட   தங்கே
புண்ணன்று    மறைவதற்கு   வடுக்க  ளாக
          பூத்தநீறு   நெருப்பாக   உள்ளா   ரின்றும்
எண்ணமெல்லாம்   ஈழமென்றே   உயிரை   ஈந்த
          ஏந்தல்தாள்  படைக்கின்றேன்   பெற்ற   விருதை !
 
 
---- 3  ----
avatar
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 66
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum