"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Yesterday at 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Yesterday at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாரதியாரும் பாரதிதாசனும்...

Go down

பாரதியாரும் பாரதிதாசனும்...

Post by அ.இராமநாதன் on Sat Apr 30, 2016 2:54 pm

ஏப்ரல் 29 - 2016
-இன்று பாரதிதாசன்
 125}ஆவது பிறந்தாள்
-

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வயலில் மறுமலர்ச்சி விதையைத் தூவியவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்தான். தமிழ்ப் பகைவர்களுக்கு இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இலங்கியவர்கள்.
-
 பாரதியார் காலம் விடுதலைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த காலம். பாரதிதாசன் காலம் சமுதாயச் சீர்திருத்தம் தழைத்தோங்கியிருந்த காலம். அதனால், பாரதி பாடாத புரட்சிக் கருத்துகளையெல்லாம் பாரதிதாசன் பாடினார். அதனால்தான் அவரைப் புரட்சிக் கவிஞரென்று அழைக்கிறோம்.
-
 அன்றைக்குப் பாரதியார் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதைத்தான் இன்றைக்குப் பாடல்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பாரதியார் இன்றைக்கிருந்தால் என்னைப்போல் ஏன் என்னைவிடவும் சிறப்பாக எழுதியிருப்பார் என்று 1961-ஆம் ஆண்டு வெளிவந்த குயில் ஏட்டில் பாரதிதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
-
 பாரதியார் புகழ் பரவக் காரணமாக இருந்தவர்கள் தேசியவாதிகள். பாரதிதாசன் புகழ்பரவக் காரணமாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
-
 1945-ஆம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட திராவிட இயக்க இளைஞர் மாநாடு பண்ருட்டிக்கு அருகில் உள்ள புதுப்பாளையம் என்ற ஊரில் நடைபெற்றது. அதற்கு அண்ணாவையும் பாரதிதாசனையும் அழைத்திருந்தார்கள். பாரதிதாசனால் போக முடியவில்லை. அதனால், அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து அவரிடத்தில் ஒரு கவிதையை எழுதிக் கொடுத்து என் சார்பில் படித்துவிட்டுவா என்று அனுப்பி வைத்தார்.
-
 அப்போது, அந்த மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன் படித்து அரங்கேற்றிய கவிதைதான் "பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது.. சிறுத்தையே வெளியில் வா' என்ற கவிதை. பாரதிதாசன் கவிதைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முன்பு நாவலரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமையை அக்கவிதை பெற்றது.
-
 1908-இல் பதினேழு வயதிலேயே புலவர் வகுப்பில் முதல் மாணக்கராகத் தேர்ச்சி பெற்றவர் பாரதிதாசன். 1909-இல் தான் பாரதியாரை அவர் சந்தித்திருக்கிறார், அதுவும் பாரதிதாசனின் உடற்பயிற்சி ஆசிரியர் வேணுநாயக்கர் திருமண விழாவில்.
-
 அப்போது, அங்கே இசை நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொருவரும் பாடினர். பாரதிதாசனும் இசையோடு பாடுவார். அப்போது, அவருக்குப்
பாரதிதாசன் என்ற பெயரில்லை. அதனால், "சுப்புரத்தினம் நீ ஒரு பாட்டுப் பாடு!' என்று வேணு நாயக்கர் கேட்டுக் கொண்டார். உடனே, பாரதியாரின் சுதேச கீதங்களிலிருந்து "வீர சுதந்திரம் வேண்டி நின்றார். பின்னர் வேறொன்றும் கொள்வாரோ' என்ற பாடலையும் "தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்' என்ற பாடலையும் பாடினார். அப்படிப் பாடிக்கொண்டிருந்த போது, எல்லோரும் ஒருவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
-
 "எல்லாரும் அவரையே பார்க்கிறார்களே, அவர் யாராக இருப்பார்? ஓவியர் ரவி வர்மா படத்தில் இருக்கிற பரமசிவனைப் போல் இருக்கிறாரே; நாம் கூட இரண்டொருமுறை வழியில் சந்தித்திருக்கிறோமே; யாராக இருக்கும்?' என்று எண்ணிக் கொண்டே பாடி முடித்தாராம் பாரதிதாசன்.
 உடனே வேணு நாயக்கர், சுப்புரத்தினம் நீ பாரதியாரைப் பார்த்திருக்கிறாயா என்று கேட்டிருக்கிறார். இல்லையென்று இவர் சொல்லியிருக்கிறார். இப்போது நீ பாடினாயே இந்தப் பாடலை எழுதிய சுப்பிரமணிய பாரதியார் இவர்தான் என்று அறிமுகப்படுத்தினார். அதுதான் பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் நடந்த முதல் சந்திப்பு.
-
 மறுநாள் முதல், பாரதியார் சென்னைக்குச் சென்ற 1918-ஆம் ஆண்டு வரையிலும் ஒன்பது ஆண்டுகள் உடனிருந்து பாரதியாருக்குப் பல வகையில் உறுதுணையாக இருந்தவர் பாரதிதாசன். பாரதியாரைவிட ஒன்பது வயது இளையவர் இவர்.
-
 பாரதி இல்லையென்றால் நமக்குப் பாரதிதாசன் கிடைத்திருக்க மாட்டார். சுப்புரத்தினம்தான் கிடைத்திருப்பார். இதைப் பாரதிதாசனே சொல்வார்.
-
 "பாரதி இல்லையென்றால் ஓய்வு பெற்ற தமிழாசிரியராகி எங்கேனும் கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவு செய்து கொண்டிருப்பேன். அதை மாற்றி சீர்திருத்தத் துறைப் பக்கம் என்னைத் திசை திருப்பியவர் பாரதியார்தான்' என்று பாரதிதாசன் சொல்லியிருக்கிறார்.
-
 பாரதியாரைச் சந்திக்கும்வரை பக்திப் பாடல்களும், தேசியப் பாடல்களும், கதர்ப் பாட்டுகளும்தான் எழுதி கொண்டிருந்தார். அவர் தொடர்பு கிடைத்த பிறகுதான் பகுத்தறிவுப் பாடல்களை எழுதினார். அதை,
 பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
 காடு முழுதும் கண்டபின் கடைசியாய்
 சுப்பிர மண்ய பாரதி தோன்றிஎன்
 பாட்டுக்குப் புதுமுறை புதுநடை
 காட்டினார் - என்பார்.
-
 அதே நேரத்தில், பக்தி இலக்கியங்களைப் படித்து தமிழ் எவ்வளவு வளமானது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பார்.
 கம்பனில் மிகுந்த ஈடுபாடுடையவர். ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் கம்பனின் பல பாடல்களை இடைச்செருகல் என்று ஒதுக்கிய போது, "இது கம்பன் பாடல் இல்லையென்று சொல்ல இந்தக் கொம்பன் யார்? பாற்கடல் என்று பிழையில்லாமல் எழுதவேண்டிய ஒரு சொல்லைப் பால்க் குடம் என்று பிழைபட எழுதி இப்படி எழுதினால்தான் இனிக்கிறது என்று சொல்லும் இவரெல்லாம் கம்பன் பாடலை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது?' என்று கேட்டார்.
-
 பாரதியார் முன்னிலையில் பாரதிதாசன் பாடிய முதல் கவிதை "எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி - எழுகடல் அவள் வண்ணமடா' என்ற கவிதைதான். இதை எழுதி வாங்கிய பாரதி "கவிதா மண்டலத்தைச் சார்ந்த புதுவை கனக. சுப்புரத்தினம் இயற்றியது' என்ற அடிக்குறிப்போடு சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார்.
-
 பத்திரிகையில் முதலில் வெளிவந்த பாரதிதாசன் கவிதை இதுதான். அதன்பின் அவருடைய கவிதைகளை ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளிவரச் செய்தவரும் பாரதியார்தான்.
-
 திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் டாக்டர் உ.வே.சா. எப்படிப் பக்தி வைத்திருந்தாரோ அதைப்போல் பாரதியாரிடம் பக்தி வைத்திருந்தவர் பாரதிதாசன்.
-
 பாரதிதாசனின் அழகின் சிரிப்புக்கு நிகராக இயற்கையைப் பாடிய கவிஞர்கள் எவருமிலர். வேட்ஸ்வொர்த், கீட்ஸ் இவர்கள் கவிதையைவிட அவரது அழகின் சிரிப்பு சிறந்தது என்று ஆங்கிலப் புலமையுள்ளவர்கள் பாராட்டி இருக்கிறார்கள். முதியோர் காதலைப் பாடிய முதல் கவிஞரும் அவர்தான். குடும்ப விளக்கில் அது ஒரு பகுதி.
-
 சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் தமிழ் மாணவர் மன்றத்தில் பேச அவரை அழைத்திருந்தோம்.
-
 அப்போதுதான் எனது தமிழாசிரியர் தட்சிணாமூர்த்திப் புலவர் பாரதிதாசனிடம் என்னை அறிமுகப்படுத்தி "இவன் எங்கள் மாணவன்; பெயர் முத்துலிங்கம். நன்றாகக் கவிதை எழுதுவான். யாப்பிலக்கணத்தை முறையாகக் கற்றுக்கொண்டு எல்லாவகைப் பாடல்களையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவன். சில கவிதைகளை எழுதியிருக்கிறான். உங்களிடம் காட்டி வாழ்த்துரை வாங்க விரும்புகிறான்' என்று சொல்லி நான் வைத்திருந்த கவிதை நோட்டுப் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். அரைமணி நேரம் அதைப் படித்துவிட்டு அப்போதே வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார் பாரதிதாசன்.
-
 அவர் வாழ்த்துரையுடன் 1961-இல் எனது முதல் கவிதைத் தொகுதியை "வெண்ணிலா' என்ற பெயரில் வெளியிட்டேன். அந்தப் பகுதியில் பாரதிதாசனின் முன்னுரையுடன் வெளிவந்த கவிதைத் தொகுதி என் கவிதைத் தொகுதிதான்.
-
 பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கிய இலக்கணத்தில் பயிற்சி உடையவர். ஒருமுறை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், சீனிவாசாச்சாரியார், பாரதியார் ஆகியோர் இருந்தபோது அங்கிருந்த பிரெஞ்சு மொழி இலக்கிய அன்பர்கள் பிரெஞ்சு மொழியில் உள்ளது போல் கவிதை நயங்கள் தமிழில் என்ன இருக்கிறது என்று ஏளனமாகப் பேசினார்கள். அதை மறுத்துச் சொல்லப் பாரதியாருக்கு ஒன்றும் தோன்றவில்லையாம்.
-
 சோர்வோடு திரும்பிய பாரதியார் மறுநாள் பாரதிதாசனிடம் நடந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறார். "அதைவிடச் சிறந்த நயங்கள் தமிழில் இருக்கின்றன' என்று சொல்லி சங்க இலக்கியங்களிலிருந்தும் இடைக்கால இலக்கியங்களிலிருந்தும் சில குறிப்புகளை எழுதிக்கொடுத்து பாரதியாரையும் அழைத்துக் கொண்டு பிரெஞ்சு மொழிதான் கவிதை நயங்கள் மிகுந்த மொழி என்று சொன்னவர்களிடம் வாதிடச் செய்து "தமிழ்தான் பிரெஞ்சை விடச் சிறந்தது' என்று ஏற்றுக்கொள்ள வைத்தவர் பாரதிதாசன்தான்.
-
 உலக மகாகவி என்று பாரதியின் தோளுக்குத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தியவர் பாரதிதாசன்தான். ஒரு கவிஞனை மற்றொரு கவிஞன் பாராட்டுவதற்குத் தயங்கக்கூடிய இந்தக் காலத்தில் பாரதியாருக்கு முதன்முதல் வாழ்த்துக் கவிதை பாடியவர் பாரதிதாசன்.
-
 பெண் விடுதலைக்காகவும் பெண்ணடிமைத்தனத்தையும் கண்டித்துப் பாரதியார் குரல்கொடுத்தவர் என்றாலும் விதவைப் பெண்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே கவிஞன் அந்த நாளில் பாரதிதாசன் ஒருவர்தான்.
-
 பாரதிக்கு ஒருதாசன் பாரதிதாசன் என்றால் பாரதிதாசனுக்கு ஒருதாசன் சுரதா. சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கம்தான் சுரதா என்பது எல்லாருக்கும் தெரியும்.
-
 பாரதியாருக்கு ஒரு குயில் பாட்டு என்றால் பாரதிதாசனுக்கு ஒரு சஞ்சீவி பர்வதத்தின் சாரல். பாரதியாருக்கு ஒரு பாஞ்சாலி சபதம் என்றால் பாரதிதாசனுக்குப் புரட்சிக்கவி அல்லது வீரத்தாய். பாரதிக்குக் கண்ணன் பாட்டு என்றால் பாரதிதாசனுக்குக் காதல் பாட்டுகள்.
-
கவிஞர் முத்துலிங்கம்
தினமணி
.

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26247
Points : 57295
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum