"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 9:54 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Tue Jan 17, 2017 9:04 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

» சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:52 pm

» மது ஒழிப்பு - (கவிதைகள் - தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:06 pm

» அமுத மொழிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:49 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:43 pm

» காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 4:40 pm

» பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:21 pm

» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:19 pm

» ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:12 pm

» மும்பையில் புதிய நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் விரைவில் கடற்படையில் சேர்ப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:10 pm

» ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தியவருக்கு ரூ.1,000 பரிசு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:08 pm

» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:07 pm

» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:05 pm

» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:04 pm

» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:03 pm

» பெங்களூரில் 3 மாதங்களுக்குள் இலவச வைபை வசதி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:02 pm

» ரூ.144.. 6 மாதம்.. 40,000 ஹாட்ஸ்பாட்.. பிஎஸ்என்எல் அதிரடி!!
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 12:01 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனசெல்லாம் நீ !நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

மனசெல்லாம் நீ !நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Thu Sep 08, 2016 9:52 pm

மனசெல்லாம் நீ !
நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !
 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
 
வானம் வெளியீடு, A49 லட்சுமி சுந்தரம் என்கிளேவ்,
சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை 625016.
64 பக்கங்கள் விலை ரூ.90.
******
       நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் ஹலோ எப்.எம். பண்பலை வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர். ‘டைரிஎன்ற நிகழ்ச்சியின் மூலம் மதுரை வானொலி நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருபவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். எனது கவிதைகளையும் அவரது குரலில் வாசித்து பெருமை சேர்த்தவர். அவரது முந்தைய நூல், பொது அறிவு தொடர்பான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க காதல் கவிதை நூல்.

       நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் அவரது கணவர் M. காளீஸ்வரன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்  .
" நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லர்.பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமணம்.பதினெட்டு ஆண்டுகளாகக் கட்டுக் குலையாமல் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் துணிந்து எதிர்கொண்டு இல்லற வாழ்வை வெற்றியாக்கி உள்ளதில் அதிகப் பங்கு எனது கணவருக்கே.அதனாலேயே அவருக்கு இந்த நூல் சமர்ப்பணம்."
.  பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்களும் மணமுறிவில்  முடிவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆனால் நூலாசிரியர் , பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். திருமணமாகி பதினெட்டு வருடங்கள் ஆன போதும் இன்றும் அவரது கணவரை தொடர்ந்து காதலித்து வருகிறார். அக்கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள்.
        நான் நேசிக்கும் கவிஞர் கவிதாசன் அவர்களின் அணிந்துரையும், இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அட்டை யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பாராட்டுகள். மதுரை புத்தகத் திருவிழாவில், உயிர்மை பதிப்பக அரங்கில் இந்நூல் வெளியிடப்பட்டது.  நூலாசிரியரின் அன்புக் கணவர், சகோதரர், அண்ணி என குடும்பத்தினர் பலரும் வந்து வாழ்த்திப் பாராட்டினார்கள்.  நானும் சென்று கலந்து கொண்டு நூல் வாங்கி வந்தேன்.
       சங்க காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்து உள்ளனர். இன்றைய காலத்தில் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். திருமணத்திற்கு பின் கவிதை எழுதி நூல் வெளியிடும் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. குடத்து விளக்காக உள்ள திறமைகளை குன்றத்து விளக்காக ஒளிர்த்திட வைப்பது நூல்களே. எனவே பல பெண் கவிஞர்கள் நூல் வெளியிட முன் வர வேண்டும்.

       நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
சண்டையிட்ட பொழுதுகளில் கூட
உன்னை வெறுக்க மனம் வரவில்லை
இருக்கமாகிக் கிடக்கிறாய் எப்போதும் நீ!



                காதலில் ஊடல் வரலாம் ஆனால் அது வெகுவிரைவில் கூடலாகி விட வேண்டும். வெறுக்கும் அளவிற்கு செல்லுதல் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.  காதல் திருமண வெற்றிக்கு மந்திரமாகக் கொள்ளும் வைர வரிகள். பாராட்டுகள்.

என் இதயத்தை திருடிய
குற்றத்திற்கு தண்டனையாக
ஆயிரம் முத்தங்கள் உனக்கு
அப்போதுதான் அந்தத் தவறை
மீண்டும் மீண்டும் செய்வாய் நீ !



காதலனுக்கு காதலி தரும் முத்தம், தண்டனை அல்ல பரிசு என்றே ஏற்றுக் கொள்வான். இந்த நூல் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. சங்க காலத்து அகப்பாடல்கள் போல தலைவி கூற்றாக கவிதைகள் உள்ளன. எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையான சொற்கள் மட்டுமே பயன்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள்.

இரவு நேரங்களில் !
உன் நினைவுகள் சுகம் தான்
இது இரவென்பதால் அல்ல
நினைவுகளில் நீ என்பதால் !



சொல் விளையாட்டு விளையாடி கவிதை படித்து வாசகர்களின் உள்ளம் தொட்டு உள்ளார். அவரவர் துணை பற்றிய நினைவுகளை வரவழைத்து வெற்றி பெற்றுள்ளார்.
 
உனது தொலைதூரப் பயணங்களில்
உன்னோடு பயணிக்கிறது
என் உள் மனசு !

பணி காரணமாக, சுழ்நிலை காரணமாக, தலைவி தலைவனை பிரிய நேர்ந்தால், பிரிய மனமின்றி பிரிந்தாலும் தலைவியின் மனம் தலைவனுடனே பயணிக்கும் என்ற சங்ககாலக் காட்சியை நினைவுபடுத்தி விடுகின்றது கவிதை.
காதல் கவிதை ஆண் எழுதினாலும் சரி பெண் எழுதினாலும் சரி ,அதில் நிலவு என்ற கருப்பொருள் வந்தே தீரும். நூலாசிரியர் கவிதாயினி செல்வகீதாவும் விதி விலக்கின்றி நிலவையும் குறிப்பிட்டுள்ளார்
 .
உனதன்பில் நான் மயங்கிய நேரங்களிலும்
எனதன்பில் நீ மயங்கிய நேரங்களிலும்
வேடிக்கை பார்த்த நிலா
தன்னை மறந்து மயங்கியே நின்றது !



மனைவி கவலையோடு இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவன்தான் சமுதாயத்தில் பெருகி உள்ளனர். ஆனால் நூலாசிரியரின் அன்புக் கணவர், மனைவி கவலையுறும் நேரங்களில் மிக அன்பாக, ஆதரவாக, இருந்து ஆறுதல் தந்த நிகழ்வை ஆண்மை, தாய்மை என்று ,இறுதி எழுத்து ஒன்றிவரும் இயைபுச் சுவையுடன் மிக இயல்பாக எழுதி உள்ளார். பாராட்டுகள்.
 
நான் கவலையுறும் போதெல்லாம்
என் கரம் கோர்த்து !

என் சிரம் கோதும்
உன்னில் நான் காண்பது!

ஆண்மை மட்டுமல்ல
அதையும் தாண்டிய தாய்மை!



வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல மிகப்பிரபலமானவர்களும், திறமையானவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் வெளி உலகில் எவ்வளவோ நல்ல பெயர் எடுத்தாலும் கட்டிய மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. நூல் ஆசிரியர்
கவிதாயினியிடம் நல்லபெயர் எடுத்துள்ள அவரது கணவர் திரு. M. காளீஸ்வரனுக்கு பாராட்டுகள்.
பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமணம் . 18 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் இன்றும் என்றும் காதலிக்கும் இணையராக உள்ளனர் என்பதற்கு சான்று இந்தக் கவிதை.
காதல் செய்து! காதல் செய்து!
கோடிமுறை களித்திருந்தாலும்
            தேடித்தேடி அலைந்து

 இன்னும் விழித்தே
           இருக்கிறது மனசு!

மீண்டும் உன்னைக் காதல் செய்யவே!


புத்தகத்திருவிழாவில் வெளியிட்ட புத்தகம் இது. அதில் புத்தகம் பற்றி மிக உயர்வாக பதிவு  செய்துள்ள கவிதை. இதோ!
வாங்கிப்படித்து! படித்து ரசித்து!
            ரசித்துச் சுவைத்த விலை மதிப்பற்ற
           புத்தகம் நீ! பொக்கிஷம் நீ!

நூலாசிரியர் கவிதாயினி செல்வ கீதா அவர்களுக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அதனை உணர்ந்து எழுதிய கவிதை நன்று.
எனது கன்னக்குழியில் !
எல்லாம் நிறைந்து கிடைக்கும்
           உன் நினைவு முத்தங்களை!

வைத்து பல்லாங்குழி ஆடுகிறேன்.
            எல்லாமுமாய் நீ இருக்கும்

 நிறைவோடு !
மனைவி கவிதை நூல் வெளியிட உள்ளார். அதுவும் காதல் கவிதை நூல் என்றால், எதற்கு உனக்கு இந்த வேண்டாத வெட்டி வேலை என்று திட்டும்  சராசரி கணவனாக இல்லாமல், வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை விட கூடுதலாக மகிழ்வோடு நின்று வரவேற்ற திரு. M. காளீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்.  பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இணையருக்கு வாழ்த்துகள்


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.

http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi


http://www.eegarai.net/sta/eraeravi


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2047
Points : 4577
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum