"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 9:19 pm

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by கவிப்புயல் இனியவன் Today at 2:25 pm

» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» அடடே – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» அடடடா – ஒரு கதை
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» அப்படியா – ஒரு பக்கதை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» படித்ததில் பிடித்த பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 12:21 pm

» குரங்கு – சிறுகதை
by அ.இராமநாதன் Today at 12:19 pm

» எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:08 pm

» தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:07 pm

» விடுகதைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
by eraeravi Yesterday at 9:17 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by arony Yesterday at 12:50 am

» பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்
by arony Yesterday at 12:48 am

» புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 11:48 pm

» பாம்பனில் 2ம் எண் கூண்டு
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 8:48 pm

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Wed Jan 18, 2017 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

» அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:07 pm

» ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:04 pm

» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:03 pm

» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 9:54 pm

» கவிஞர் இரா .இரவியின் படைப்புகளிலிருந்து ....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 11:11 pm

» மோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ! நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !
by eraeravi Mon Jan 16, 2017 10:53 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Jan 16, 2017 9:52 pm

» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:19 pm

» கடையடைப்பு : போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:17 pm

» நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:16 pm

» எல்லையில்லாத இன்பத்திலே-நாம் இணைந்தோம் இந்த நாளே
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:15 pm

» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:14 pm

» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:13 pm

» திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:03 pm

» ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:02 pm

» கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 9:00 pm

» அத்திரி முனிவரின் மனைவி....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:57 pm

» சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:56 pm

» திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:54 pm

» .பிரளயவெள்ளத்தில் அமிர்த கும்பத்தை வீழ்த்தியவர்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:52 pm

» முருகன் தலங்களில் மலையில்லாத மலைக்கோயில்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:39 pm

» திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:36 pm

» வால்மீகியின் இயற்பெயர்.....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 8:35 pm

» சூரியவழிபாட்டால் உண்டாகும் நற்பலன்....
by அ.இராமநாதன் Mon Jan 16, 2017 7:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

View previous topic View next topic Go down

சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi on Thu Oct 06, 2016 12:33 pm

சங்க இலக்கிய சால்பு !
நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராசர் நகர், 
சென்னை 600 017.      216 பக்கங்கள்   விலை ரூ.140.

******

     சங்க இலக்கியம் எனும் பலாப்பழத்தை பதமாக உரித்து இனிக்கும் பலாச்சுளையாக இலக்கிய விருந்து வைத்துள்ள நூலாசிரியர் முனைவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு முதல் பாராட்டு. நூலை தரமாகவும் மிக நேர்த்தியாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு அடுத்த பாராட்டு. தமிழ்த்தேனீ இரா. மோகன் - வானதி பதிப்பகம் வெற்றி கூட்டணியில் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்து இலக்கிய உலகில் புதுமை செய்து வருகின்றன.  தமிழன்னைக்கு அழகு சேர்த்து வருகின்றன. நூலிலிருந்து சிறுதுளிகள்.


                நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்     
                அல்லது செய்தல் ஓம்புமின்                                                              (195)
உலகில் மனிதராய்ப் பிறந்த யாவரும் தம் நெஞ்சிலும் நினைவிலும் கல்வெட்டுப் போலப் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பின்பற்றத் தக்க பொன்னான அறிவுரை இது! "


அறநெறி கருத்துக்களின் தங்கச்சுரங்கம் சங்க இலக்கியம் அந்த தங்கங்களை வெட்டி எடுத்து அழகிய அணிகலன்களாக வழங்கி உள்ளார்.  நூலில் 35 கட்டுரைகள் உள்ளன. எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என மூன்றும் முத்தாய்ப்பு. பிறருக்கு கெடுதல் செய்து கிடப்பதே என் பணி என்று இருக்கும் தீயோருக்கு அறிவுரை சொல்லும் அரிய கருத்துகள் நூலில் உள்ளன.


      வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்வியல் நல்மந்திரங்கள் நூலில் உள்ளன.  நல்லது எண்ணி, நல்லது பேசி, நல்லது செய்து நல்லவராய் நலமாக வாழ வாழ்வியல் யுத்திகள் சங்க இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் தேர்ந்தெடுத்த சில பாடல்களை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த விதம் சிறப்பு.  எல்லோருக்கும் சங்க இலக்கியம் சென்று அடைய உதவிடும் நல்ல நூல். தலைவனை இடித்துக் கூறும் பொழுது கூட, சொல் நாகரீகத்தினைப் பேணியவள் தோழி. சண்டை போடும்போது கூட நாகரீகமான சொற்களையே பயன்படுத்த வேண்டுமேன்ற கருத்தை சங்க இலக்கியம் வலியுறுத்தி உள்ளது. இன்றைய அரசியல்வாதிகளுக்காக அன்றே கூறியது என்று தான் கூற வேண்டும்.
      ஐவகை நிலங்களின் திணைப்பாட்டுகள் அனைத்தும் இலக்கிய விருந்து. நோய் தீர்க்கும் மருந்து. இன்பம் பயக்கும் இனிய கருத்துச்  சுரங்கம்.


      நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் சங்க இலக்கியம் படிப்பதோடு நின்று விடுவதில்லை. சமகால இலக்கியங்களும் வாராந்திர இதழ்களும் அனைத்தும் வாசிப்பவர்.


“ஆனந்தவிகடன் 27.04.2016 இதழில் கவிஞர் அ. நிலாதரன்,  நெய்தல் நிலத்தலைவி ! என்னும் தலைப்பில் படைத்துள்ள ஓர் உணர்ச்சிமிகு கவிதை இதோ,
[ltr]


  கடலுக்குப் போன தலைவன்! 
                இன்னும் வீடு திரும்பவில்லை 
                கரைமீனாகத் தவிக்கும்! 
                தலைவியின் இதயத்தில் வெடிக்கிறது. 
                நிமிடத்திற்கு! 72 துப்பாக்கிகுண்டுகள்!



[/ltr]
நவீன இலக்கியத்தையும் சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு விளக்கும் நுட்பத்திற்கு, திட்பத்திற்கு, திறமைக்கு பாராட்டுகள்.


      வெள்ளிவீதியாரின் நற்றிணைப்பாடல் விளக்கம் மிக நன்று. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலைமையை மிக நுட்பமாக பாடலில் வடித்த ஆற்றலை நன்கு விளக்கி உள்ளார்.


      இயந்திரமயமான உலகில் இன்றைய மனிதர்களுக்கு மனிதாபிமானம் என்பது மறந்து  வருகின்றனர். ஆனால் அன்றைக்கு தமிழர்கள் எவ்வளவு மனிதநேயத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை விளக்கிடும் நல்ல நூல் இது.


      “தலைவன் சிற்றுயிர்களான வண்டுகளின் இன்பத்திற்கும் இடையூறு செய்யாமல் காத்திட எண்ணும் இரக்கமும் அருளும் உடையவன்”.


      சங்க இலக்கியத்தில் உள்ள உவமைகள், வர்ணனைகள், கருத்துகள், ஒப்பீடுகள், குறியீடுகள் என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து எளிமைப்படுத்தி, இனிமை தடவி வழங்கி உள்ளார்கள். 


படிப்பதற்கு சுவையான மிக நல்ல நடை. தெளிந்த நீரோடை போன்று செல்லும் நடை. நூலை எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் வைக்க முடியும்.  அந்த அளவிற்கு விறுவிறுப்பாக உள்ளது.
      "பெண்களை காதலித்து விட்டு ஏமாற்றும் கயவர்கள் இன்று மட்டுமல்ல சங்க காலத்திலும் இருந்து இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது. “கடுவன் மன்னனாரின் அக நானூற்றுப் பாடலால்”. ஒன்று மட்டும் உறுதியாகின்றது. காதலிப்பது போல் நடித்து ஓர் இளம் பெண்ணின் பெண்மை நலத்தினை அனுபவித்துவிட்டு பின்னர் அவனை அறிவேன் என்று அறம் பிறழ்ந்து வாதிடும் கயவர்கள் இன்று மட்டும் அல்ல, அன்றும் இருந்திருக்கிறார்கள்”.
      நல்ல பல தீர்ப்புகள் வழங்கி வருபவர் நீதிபதி எஸ்.விமலா அவர்கள். எனது நூலிற்கு மதிப்புரை நல்கியவர்கள். அவரது அருமையான  தீர்ப்பை மேற்கோள்காட்டி பொன்முடியால் பாடிய புகழ்பெற்ற கடமைப் பாடல் கட்டுரையை வடித்து உள்ளார்கள்.
      நீதிபதி எஸ். விமலா அவர்கள் வழங்கிய தீர்ப்பு “பிள்ளைகளிடம் பராமரிப்புச் செலவு கேட்டு தாய் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்தது துருதிருஷ்டமானது. பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்க வேண்டியது சட்டரீதியான, அடிப்படை உரிமையாகும்.  இயற்கை தார்மீகம் மற்றும் மனித உரிமையும் ஆகும். இந்த உரிமைகளைப் பிள்ளைகள் வழங்க மறுக்க முடியாது. தர்மப்படி பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். அந்த கடமையில் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில் தாயின் கடமைகளைக் கூறும் மனுதாரர் அவரது கடமையை நினைத்துப் பார்க்கவில்லை.


 “சங்கச் சான்றோர் பொன்முடியாரே விமலா அம்மையாரின் வடிவில் நீதிமன்றம் வந்து அருளும் அன்பும் அறமும் ஒருங்கே கொண்ட தீர்ப்பினை வழங்கி இருப்பரோ என்று நினைக்கத் தூண்டுவது”.


இந்த வழக்கை ஒரு தாயிற்காகத் தொடுத்தவர் என் இனிய நண்பர்  வழக்கறிஞர் கு .சாமிதுரை அவர்கள்.


      தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ். விமலா அவர்கள் கூட இத்தீர்ப்பை மறந்து இருப்பார்கள். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் செய்தித்தாளில் படித்ததை நினைவில் வைத்து இருந்து மறக்காமல் சங்க இலக்கிய பாடலோடு ஒப்பிட்டு எழுதிய கட்டுரை மிக நன்று.  


      குறுகத்தறித்த முல்லைப்பாட்டு கட்டுரை மிக நன்று. அதில் முடிவுரை முத்தாய்ப்பு."ஒப்பூதனாரின் புலமைத்திறம் போற்றத்-தக்கதாகும். இது போன்ற கட்டுக்கோப்பும் கலை நுட்பமும் பொருந்திய ஒரு புனைவினை உலக இலக்கியக் களஞ்சியத்துள் வேறு எம்மொழியிலும் காண்பது என்பது அரிதினும் அரிதே எனலாம்."
      உண்மைதான் சங்க இலக்கிய நூல் மேன்மையை நன்கு உணர்த்தி உள்ளார். ஆங்கிலேயர்கள் நூறு ஆண்டு ஆன இலக்கியத்தை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.  நாமோ ஆயிரமாண்டு இலக்கியங்களை அறியாமல் இருப்பது முறையோசங்க இலக்கியத்தின் அருமை பெருமை உணர்த்திடும் இந்த நூல் வாங்கிப்படியுங்கள்.
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
[size][ltr]

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
[/ltr][/size]

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum