"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரிலாக்ஸ் - (நகைச்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:42 pm

» ஒரு பக்க கதைகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:09 pm

» அறிமுகம்
by தியான் Tue Jun 27, 2017 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Mon Jun 26, 2017 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

View previous topic View next topic Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

Post by அ.இராமநாதன் on Fri Feb 24, 2017 8:34 am


 • அன்பே பிரதானம்

 • பல்லவி

 • அன்பே பிரதானம் – சகோதர

 • அன்பே பிரதானம்


 • சரணங்கள்

 • 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,

 • இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே


 • 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,

 • கல கல வென்னும் – கைம்மணியாமே — அன்பே


 • 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,

 • அன்பிலையானால் – அதிற்பயனில்லை — அன்பே


 • 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,

 • பணிய அன்பில்லால் – பயனதில்லை — அன்பே


 • 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,

 • போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள — அன்பே


 • 6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,

 • பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா — அன்பே


 • 7. சினமடையாது – தீங்கு முன்னாது,

 • தினமழியாது – தீமை செய்யாது — அன்பே


 • 8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்,

 • மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் — அன்பே


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22776
Points : 48932
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

பாதம்

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:23 pm

பாதம் 


பாத பூஜை என்பார்கள்.  இறைமகனே தமது சீடர்களின் கால்களை கழுவுகிறார். என்பார்கள்.


இறைபட்டம் பெற்றவரே மனிதர்களின் கால்களை கழுகிறார்.


மனிதர்களையே தெய்வம் என்றால் எப்படி தவறு வரும்.


தெய்வம் என்ற பதவி பெரிதா, சிறியதா என்று தெரியவில்லை.
தெய்வம் என்பவரை யாரை சொல்லலாம் அந்த விஷயத்தில் போட்டியிருக்கு.
 
ஆனால் அதற்கும் மேலாக தெய்வம் நம்மை போற்றுகிறார்.
இறைவன் தன்னுடைய பாசத்தால் நம்மை போற்றுகிறார்.
இறைவன் தன்னுடைய அன்பினால் நம்மை போற்றுகிறார்.


மனிதர்களாகிய நாம் நம் குழந்தைகளை கொஞ்சம் உணவு ஊட்டிக்க கண்ணு என்று கெஞ்சுகிறோம். ஏன்?


நமக்கு அதிகாரம் இருக்கு. ஆனால் நாம் நம் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சு, கெஞ்சி குழந்தையிடம் பாசம் காட்டுகிறோம். 


நாமே இந்நன்னடத்தை கொள்ளும் பொழுது. இறைவன் நம் மேல். எப்படி.  அவர் பூவின் வாசனையிலும் மென்மையானவர்.  


அதனை புரிந்து கொள்ள பாத பூஜை அல்லது மனிதர்களின் கால்களை கழுவுவது.  


மனிதர்களின் கால்களை கழுவுவது என்றால் பெரியவர் தன்னை தாழ்த்துகிறாரா?


தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்த படுவான். 


என்ன not completed ஆ ஆம் பரிகாரம் not completed  
சில பாவங்களுக்கு இறைவனால் பரிகாரம் கண்டுபிடிக்க முடியவில்லையா?


அதற்கு தான் பரிகாரம் not completed  
இன்னும் பூரணம் படவில்லையா?


எந்த தூஷணம் மன்னிக்கப்படலாம், ஆவியானவருக்கு எதிரான பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. 


பாவத்தை வெல்ல முடியாத பரிசுத்தம் ஒன்றும் இல்லை என்பது திட்டவட்டம் 


பரிசுத்தம் வல்லமை உள்ளது. 


ஆவியானவருக்கு எதிராக எந்த பாவமும் செய்ய முடியாது என்பது திட்டவட்டம் ஆகவே தான் 


ஆவியானவருக்கு எதிரான பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. என்று சொல்லப்படுவதால்  நாம் பரிசுத்தம் கொள்வதில் அச்சம் வேண்டாம்.


அப்படி ஒரு நிலைமை யாருக்கும் வராது. 


பரிசுத்தம் பூரணப்படும். உலகை ஜெயிக்கும்.


பயப்படாதே , திகையாதே


மருத்துவம்


ஒரு மோசமான நோய் வந்தால் நாமாக மருந்து கடையில் மருந்து கொடுங்கன்னு கேட்டு 


மருந்து வாங்கி சாப்பிட கூடாது என்பார்கள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைபடி மருந்து உட்கொள்ள வேண்டும் என்பார்கள்.  


யார் உதவி கேட்டாலும், அவர் கேட்ட பொருளோ, உதவியோ நம்மால் செய்ய முடியும் என்றால் ஆகா அவர் கேட்டுட்டாரே என்று கொடுப்பது தவறாக கூட இருக்கலாம். 


இப்படி உதவி கேட்பது எதுபோல் என்றால் மருந்து கடையில் நாமாக மருந்து வாங்கி உண்பது போல். 


உதவி செய்பவர் மருத்துவரை போன்று பரிசிலித்து செய்யாமல் மருந்து கடையில் வியாபார நோக்கத்தில் சிகிச்சைக்கான மருந்து கொடுப்பது போல் தவறாக அமையலாம்.


பூமியின் பலனை வருத்தத்தோடே புசிக்கனும் என்பது நமக்கு தெரியுமா?


நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் செயல்படும் பொழுது இறைவனாகிய மருத்துவரை பரிசீலிக்கனும்.


நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இறைவனுக்கு பயந்து அந்நடவடிக்கையில் செயல்படனும். 


நம்முடைய பழக்க வழக்க எல்லா நடவடிக்கையிலும் நன்மைதான் என்று தீர்மானிக்க கூடாது.  ஒவ்வொரு நடவடிக்கையிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். 


ஒவ்வொரு நடவடிக்கையிலும் கிரெடிட் என்ற ஒன்று இருந்தால் டெபிட் என்ற ஒன்று கண்டிப்பாய் உண்டு. 


ஒரு நடவடிக்கையில் நன்மை என்ற ஒன்று இருந்தால் தீமை என்ற நடவடிக்கையும் ஒன்று உண்டு.


இறைவன் நன்மை, தீமை இன்னதென்று அறிவித்திருக்கிறார். 


கோதுமை உணவு நல்லது, பாதாம் பருப்பு நல்லது, படிக்க வைப்பது நல்லது, தொழில் செய்வது நல்லது, உடற்பயிற்சி நல்லது, ஆபரேஷன் 


நல்லது, ஞாயிற்று கிழமை ஆராதனை செய்வது நல்லது, வெள்ளிக்கிழமை துவா செய்வது நல்லது 


ஆடி அம்மாவசை விளக்கு போடுவது நல்லது. 


ஆனால் இத்தனை நடவடிக்கையிலும் தீமையும் உண்டு.


இறைவனின் சித்தம், விருப்பம் என்பதை அறிய மனசாட்சிக்கு பயந்து செயல்படனும். 


எனக்கு கல்யாணம் ஆகனும், ஆண் குழந்தை பிறக்கனும் இதுதான் நல்லது என்று தீர்மானிக்க முன் இறைவனுக்கு பயந்து அறிய முற்படனும்.


எல்லா தவறுக்கும் சரி செய்ய பரிகாரம் இருக்கலாம். 


எவ்வளவோ பெரிய மருத்தவர் நமக்கு பக்க பலம் இருக்கிறார் என்று கத்தியை காய்கறி வெட்ட பயன்படுத்தும் பொழுது அசால்ட்டா கையை கிழித்து அல்லது வெட்டி கொள்ளும்படி பயன்படுத்துவோமா.


ஆகவே எந்த நடவடிக்கையாக இருக்கட்டும் துணிகரமாய் செயல்படுவதிலே சிறிது கடவுள் பயம் இருக்க வேண்டும். கவனமாய் செயல்படவேண்டும் அதாவது விழிப்புடன் செயல்படனும்.   


சாப்பிடலாமா, விரதம் இருக்கலாமா, தூங்கலாமா, நடை பயிற்சி செய்யலாமா


வேகிறதை பார்க்கிலும் திருமணம் செய்யலாமே என்றா? எந்த ஒரு மனிதனும் உறுதியிட்டு சொல்ல முடியாததால் ஒவ்வொரு 


மனிதனிடமும் இறைவன் இருக்கிறார்.  இறைவனின் விருப்பம் அறிந்து செயல்படுவதுதான் நல்லது. 
இக்காலத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கனும் என்று மனிதன் சொன்னாலும் அந்நடவடிக்கையில் நல்லதும் உண்டு, தீமையும் உண்டு. 


ஆகவே நடுக்கத்துடனே, வருத்தத்துடனே பூமியின் பலனை புசிப்போம்.  


விதைக்க ஒரு காலம், அறுக்க ஒரு காலம்.   


எந்த காரியத்திலும் தேவ எச்சரிக்கை பார்க்கணும். நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமாய் செயல்படனும் பெண்ணை விரும்புவது, பொன்னை விரும்புவதும் 


நம்ம இஷ்டப்படி செய்யனும் என்றால் நாம ஒரு உலகை உருவாக்கி அதிலே நம் சுதந்திரத்தால் மனம் போன போக்கிலே செயல்படலாம். 


ஆகவே இந்த உலகம் தேவனுடையது பலமுறை அனுசரிக்க வேண்டியது.  பலரின் இணைப்பால் அல்லது உறவால் கவனிக்கப்படுகிறது இவ்வுலகம். 


துணிகரமான செயல் வேண்டாம்.
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

சொந்தம்

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:25 pm

சொந்தம் 
          இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள். இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொண்டவர்கள். இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 


          சிவபெருமானை வணங்கினால்,  அல்லாவை வணங்கினால் 


          என்றெல்லாம் சொல்வதை பார்த்திருப்போம். 


          சொந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கான கிரயம் உண்டு. 


           இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவருடைய கட்டளைகள் அல்லது  நிபந்தனைகள் கைக்கொள்ள வேண்டும் என்பர். 


           சிவபெருமானை, ஐயப்பனை  எப்படி வணங்கவேண்டும்.  அல்லாவை எப்படி வணங்க வேண்டும். 


          அது போல், சிவபெருமானை ஏற்றுக்கொள்ள, அல்லாவை ஏற்றுக்கொள்ள,


             இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொள்ள 


              அதுபோல், சுவாசத்திற்கான ரட்சகராக காற்றை சொந்தமாக ஏற்றுக்கொள்ள


               கோதுமை உணவை சத்தின் சொந்த ரட்சகராக கொள்ள 


               கோதுமை அழுகி போன நிலையில் நமக்கு சத்து சொந்தமாகாது.
                பூமியை சொந்தமாக ஏற்றுக்கொள்ள
                 வானத்தை சொந்தமான ரட்சகராக ஏற்றுக்கொள்ள


                  அன்பை சொந்தமான ரட்சகராக ஏற்றுக்கொள்ள


                  கோபத்தை சொந்தமில்லாததாக விலகி ஓட 


ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ள


                   ஒரு ஆணை கணவனாக ஏற்றுக்கொள்ள


                   தந்தையை ஏற்றுக்கொள்ள,  நண்பனாக ஏற்றுக்கொள்ள


                       ஏற்றுக்கொள்ள கைக்கொள்ள வேண்டிய கட்டளைகள், நிபந்தனைகள், விருப்பங்கள் நிறைவேற்றினால் அது சொந்தம்
பிரிவினை - மார்க்க பேதம்


             தன் மகனை விவசாய தொழிலாளியா விவசாயம் பார்க்கவும். 
தனக்கு பிறவாத ஏழையான திறமையான தலித் பயனை, டாக்டர் க்கு படிக்க வைப்பதும் பிரிவினை ஆகுமா?  


              பிரிவினை அல்லாத வசதி குறைந்தவர்கள் கூட, தன் மகனுக்கு சைக்கிள் மட்டுமே வாங்கி கொடுத்தும் முடமான ஒருவருக்கு ஊனமுற்றோருக்கான பைக் வாங்கி கொடுப்பதும் சாத்தியம் ஆகும். 


             இறைவனும் கூட நல்லாருக்கும், தீயோருக்கும் தமது சூரியனை உதிக்கப்பண்ணினார். 


              ஒருகூட்டம் இப்படி இருக்கலாம் வருமானவரிக்கு கணக்குகாட்டாமல் சொத்துக்களை மறைக்கலாம், பதுக்கி வைக்கலாம். 


              ஆனால் இன்னொரு கூட்டம் இப்படி இருக்க வேண்டும். செய்யும் பல உதவிகளில் சில உதவிகள் வெளிப்படையாக தெரியலாம், ஆனால் கணக்கு காட்டாத பல உதவிகள் நாம் செய்யனும் அப்படி செய்தவை அந்த இறைவனுக்கு அந்தரங்கமாக அமையட்டும். 


                 இறைவன் சில அற்புதங்களை செய்து அதை காட்டும் படியாகவும்.   பல அற்புதங்களை தான் நிகழ்த்தியவர்களிடம் அவர்களை ஒருவரிடமும் அறிவியாதே என்று


வறுமை 


              ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் விசாரிப்பேன்.


              ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டுவேன். 


              மனிதன் செய்யும் காரியங்களை எடுத்து அதனை விசாரித்து 


              அவனுடைய சந்ததியின் ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் நீதி 
              செய்வார். 


              நமக்கு மச்சுவீடு கட்டும் அளவிற்கு சொத்து, சுகம் இருந்தால் 
 
              அதை ஒரு ஏழையின் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு 


              நாம் சிறிய குடிசை வீட்டில் வசித்து எளிமையாய் வாழ்வதை 


             தேர்வு செய்வது நம் முன்னோரின் அநீதிக்காக நாம் நீதி செய்வது 
             நல்லதுதானே 


             ஆயிரம், ஆயிரம் தலைமுறையில் நம் முன்னோர்கள் செய்த 


             அநீதிக்காக நம்மை ஏழையாக்கி கொண்டு நாம் சம்பாதித்த      


             சொத்து, சுகங்களை ஏழை, எளியவருக்கு வழங்கலாமே.    


             வியாபார தந்திரங்கள், அறிவு, பாடும் திறமை மற்றும் நம் 
             பல்வேறு திறமைகளை கூனி, குறுகி உள்ளோருக்கு 
             திறமைகளை தந்து உதவலாமே


              நம் நீதியால், அநீதியை நன்மைக்கு ஏதுவாக சரிக்கட்டும் 
             செயல்களை மற்றவர்களுக்கு வழங்கலாமே


              நம்மை குறுக்கிக்கொண்டு, நம்முடைய நன்மை ஒரு ஏழைக்கு 
              அதுவும் பொழுது     


              அந்த ஏழை அவரை விட ஏழையான ஒருவவருக்கு  நன்மை 
              செய்ய நம்முடைய வாழ்க்கை பாடமாக அமையுமே


              இறைமகன் பேரரசரின் மகனாக பிறந்து உலகை ஜெயிக்க 
              வில்லை.    


              மாட்டு தொழுவத்தில் பிறந்தவர். 


              தனக்கு சொந்தமானதில் வந்தார். 


              சொந்தமானவர்களோ தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை.


              சிலுவை சுமந்து என் பின் செல்.
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

இம்சை அரசன்

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:27 pm

இம்சை அரசன் 
            சிலரை வதம் செய்வதும் பழி உணர்ச்சியால் வெறுப்பதும் எப்படி 
இருக்கிறது என்றால், கடவுள் நீடிய பொறுமையுள்ளவர் அவர் தன் நீடிய 


பொறுமையின் அளவோடு இருந்தும், நாம் குற்றப்படுத்தி தண்டித்து குற்றபடுத்தும் நபரை கடவுள் தண்டிக்காமல் இருந்து நாம் தண்டித்தால் 


நாம் இறைவனின் சாயலில் இல்லை.  
அவரை போல் நீடிய பொறுமை நம்மிடம் இல்லை.


அவர் அனுமதிக்காமல் (சித்தம்) நம்மை தொடுபவர் எவரும் இல்லை.   
ஆகவே நம்மை தொடுபவரை இறைவனின் நீடிய பொறுமை போல் நாம் அணுகவேண்டும். 


ஒரு சீடர் வாளால் காதை வெட்டினார் அதை இறைமகன் இது என் வழியல்ல என்றார்


ரத்த சாட்சியாய் பலர் இறந்தனர் அவர்கள் நீடிய பொறுமையாய் இருந்தார்கள். 


இறைவன் ஆயிரம் ஆயிரம் தலை முறை வரை விசாரிப்பார். 


நம் முன்னோர், பலரை கொலை செய்து கொலை பழியை செய்திருக்கலாம். 


கத்தியால் குத்தும் பொழுது இருதயத்தை கூட ஊடுருவும் படி நம் முன்னோர் கொலை செய்திருக்கலாம்.


அத்தனை தலைமுறை வரை இருந்த பழியை அவர் நீடிய பொறுமையாய் விசாரிக்கலாம். 


எப்படி விசாரித்திருப்பார்.


ஆம். இருதயத்திற்கான பைபாஸ் சர்ஜெரி தேவைப்படுவோருக்கு நாம் உதவி செய்யலாம். 


முன்னோர் ரத்த பழிக்காக ரத்த தானம் செய்யலாம்.


நம்மிடம் இரண்டு உறுப்புக்கள் இருந்தால் ஒரு உறுப்பை தானம் கொடுக்கலாம். 


இரண்டு உறுப்போடு நரகத்தில் விழுவதை விட ஒற்றை உறுப்போடு பரலோகத்தில் பிரவேசிக்கலாம். 


இருக்க வேண்டிய இரண்டு உறுப்புகள் இல்லாதவருக்கு, நம்மிடம் இருக்கும் இரண்டு உறுப்பில் ஒரு உறுப்பை தானம் செய்யலாம். 


நமக்கு மனம் இல்லை உதவி செய்ய, இரண்டு உறுப்பு இருந்தும் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று அன்பை செய்ய மறுதலிக்கிறோம்.  


ஒன்றை கொடுத்த்துவிட்டு மற்றொரு உறுப்போடு வாழ முடியாதா?


மாற்று திராணிகள் எப்படி செயல்படுகிறார்கள் ஒற்றை உறுப்போடும், ஒற்றை உறுப்பு பழுதோடும் இருந்து உலகில் வாழவில்லையா


இருக்க வேண்டிய இரண்டிரண்டு உறுப்புகளோடு பூமியில் பல கோடி ஆண்டுகள் வாழ போகிறோமா


பிறப்பு என்ற ஒன்றும் இறப்பு என்ற ஒன்றும் எல்லாருக்கும்தான்  உயிரோடு இருக்கும் கொஞ்சம் காலத்தில் எல்லா உறுப்புகளோடும் நம்மை அடக்கம் பண்ணினாள் பெருமையா?


மாற்று திறனாளிகளை பாருங்கள். 


ஒரு கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செய்யலாமே 


மாற்று திராணிகள் இறைவனுக்கு நெருங்கிய உறவு கிடையாது.


எல்லா உறுப்புகளும் உள்ளதால் எல்லா உறுப்புகளோடும் உள்ள நாம் தான் பாக்கியம் செய்தவர்கள் என்று எண்ணி அதனால் நாம் தான் இறைவனோடு நெருக்கம் உள்ளவர் என்று எண்ணுவது சரியா?


கடல் நீரில் உள்ள கழிவுகளை தன்னால் இயன்ற அளவு மீன்கள் அதை உண்டு கடல் நீரை சுத்தபடுத்துகிறது. 


அதுபோல் மண்ணின் மேல் உள்ள கழிவுகளை மண் இழுத்து கொண்டால் தானே காற்று சுத்தமாகும் 


காற்றை மாசுபடுத்தினால் அசுத்த காற்று ஈரமாகி மண்ணுக்குத்தானே வருகிறது.  


மண்ணின் மேல் உள்ள கழிவுகளை மண் இழுத்துகொள்ள நாம் ஒத்தாசை பண்ணக்கூடாதா


ஒத்தாசை வரும் பர்வதம்.


நீர்


          நெற்றி சிறு நீர், காது சிறு நீர், வாய் சிறு நீர், கண் சிறு நீர், கழுத்து சிறு நீர், கை சிறு நீர், உள்ளங்கை சிறு நேர், வயிறு சிறு நீர், பிறப்பு உறுப்பு 


சிறு நீர், சிறு நீரக சிறு நீர், ஆசன வாய் சிறு நீர், தொடை சிறு நீர், கால் சிறு நீர் 


          நான் என்ன சொல்ல வருகிறேன்.


          சிறு நீர் (குறுகிய நீர்) என்பதை வேர்வையாக வரும் நீரையும் சொல்லலாமா. 


          இன்று பல வியாதிகளுக்கு காரணம் உடலில் வேர்வை நீர் வெளியாகணும். 


           நெற்றி வேர்வை துளி மண்ணில் விழ நிலத்தை பண்படுத்தி அதன் கனியை புசிப்பாய்.


             இன்று வேர்வை துளிகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. 


            அக்காலத்தில் உடல் உழைப்பு அதிகம் அதனால் வேர்வை சுரப்பி நன்கு வேலை செய்து உடல் ஆரோக்கியமாக இருந்தது. 


             நம் உடலில் பெருந்துளைகள் வாய் காது இப்படி இருந்தாலும் உடல் முழுவதும் சிறு துளைகள் உள்ளன. 


             சுகர் அதிகமானாலோ இன்னும் பல வியாதிகளில் நடை முடையில் திடீரென ஒரு மயக்கம் அத்துடன் உடல் முழுக்க வேர்த்து விறுவிறுத்து கொட்டும். 


              இந்த சிம்டஸ் (அறிகுறி) எதை குறிக்கிறது நுண் துளைகள் வழியாக கழிவு வெளியேற்றபட வேண்டும். 


             உடல் முழுக்க உள்ள கழிவை வெளியேற்ற சிறு நீரக உறுப்பையும், ஆசனவாயையும் மட்டும் நம்பினால் அவ்வுறுப்புகள் 


அதிகமான வேலைபளுவால் சரிவர கழிவை வெளியேற்ற முடியாமல் சீக்கிரம் செயல் இழந்து பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது. 


                தோளில் உள்ள அனைத்து வேர்வை துவாரங்கள் வழியாய் வேர்வை வெளியேறினால் நமக்கு பல வியாதிகள் வராது.


                வேர்வை வெளியேற நீர் வேது புடிக்கீறீர்களோ , நடை பயிற்சி செய்கிறீர்களோ நூதன, நுணுக்கமான அல்லது எளிய வழிகளிலோ நீங்கள் பின்பற்றி வேர்வை என்ற சிறு நீரை வெளியேற்றுங்கள். 


                நீங்கள் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் செய்வதே போதும்.


                கடவுளுக்கு பலி, ஆட்டின் தலைஈற்று, கோழியின் தலையீற்று என்பதன் அடிப்படியில் முதல் ஈற்றின் பிறப்பை ஆண்டவருக்கு பலி கொடுப்பது போல் 


             வீட்டில் யாரவது ஒருவர் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்யலாமே நம் முன்னோரின் ரத்த பழி நீங்க


நீர் - திரு நீர் 
             மோசேக்குக்கு முட்செடி தீயில் இறைவன் தரிசனம் ஆனபோது 


ஒரு பர்தா என்ற விருத்தச்சேதனமான காலணிகளை கழற்றும்படியாக அறிவுறுத்தப்பட்டது 


              இறைவன் கை நீட்டுவார் என்று எண்ணி அவர் மனைவி அவரை காக்கும் பொருட்டு நுனித்தோலை நீக்கும் பர்தாவான விருத்தச்சேனம் நடைபெற்றது. 


              பூசாரி மட்டுமே இறைவனின் சந்நிதானத்திற்குள் போக முடியும் 
அந்த சந்நிதானத்திற்குள் பூசாரி கூட சென்று திரும்புவாரா அல்லது 


திரும்பாமல் இறப்பாரா என்ற அளவிற்கு பர்தா என்ற விருத்தச்சேனம் கடைபிடிக்கப்பட்டது. 


               வனாந்தரத்தில் இஸ்ரேல் மக்களை நடத்திச்செல்லும் பொழுது இஸ்ரேல் மக்கள் தங்கள் கழிவுகளை மண்ணினால் மூடு என்று அறிவுறுத்தப்பட்டது. 


                கிறிஸ்த்துவமக்களும், முஸ்லீம் மக்களும் மரணம் ஆன தங்கள் இனத்தவரை புதைத்துத்தான் அடக்கம் பண்ணுவார்கள்.  எரிக்க மாட்டார்கள். 


                 நம் உடலில் அவ்வப்போது உடல் செல்கள் இறக்கின்றன பிறகு புதிய செல்கள் தோன்றுகின்றன 


                 இறந்தால் மண்ணில் அடக்கம் பண்ணனும் என்ற கூற்றுபடி இறக்கின்ற உடல் செல்களும் அடக்கம் பண்ணப்பட்ட வேண்டுமா?


                 உதிர்கின்ற நம் தலை முடி, வெட்டப்படுகின்ற நகம், எச்சில், சளி, அடிபட்ட ரத்தம் இழந்த இவைகள் இறந்தவை தானே ஆகவே இவைகளை நல்ல அடக்கம் பண்ணப்பட்ட வேண்டும் அல்லவா


                  விளைந்தவைகளை பலி செலுத்தும்பொழுது நல்லவைகளை கொஞ்சம் பலி செலுத்திவிட்டு மீதியானவைகளை நாம் பயன்படுத்தலாம்.


                 அது போல் உதிர்கின்ற நம் தலை முடி, வெட்டப்படுகின்ற நகம், எச்சில், சளி, அடிபட்ட ரத்தம் இழந்த இவைகள் இறந்தவை தானே 


ஆகவே இவைகளில் சிறிதாவது அடக்கம் பண்ணப்பட்ட வேண்டும் என்ற பலி செலுத்தலாமே.   


                 பலி செலுத்த, பலிசெலுத்துவதற்குரிய பர்தா என்ற விருத்தசேனம் கடைபிடித்தே இறந்த செல்களான (நகம், முடி....) அடக்கம் பண்ணலாமே 


                அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என்கிறோம். 


                நாம் மட்டும் ஒழுங்கா சாலையில் போகாமல் ரோட்டை அடைத்துக்கிட்டு ஆக்கிரமிப்பு செய்கிறோம் விபத்து ஏற்படும்  படி. 


                குழந்தைகளை ஆக்கிரமிப்பு செய்கிறோம் அவர்களின் சுதந்திரத்தை தேவையில்லாதபடி பறிக்கும்படி.
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

மிச்சம்

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:30 pm

மிச்சம் 


           கடவுள் சொத்தை மிச்சம் பண்ணுவீங்களா?


           காச மிச்சம் பண்ணனும் என்போம்


           மின்சாரத்தை மிச்சம் பண்ணுங்கள் என்பார்கள்.


           திருமணத்தில் திராட்சை ரசம் மிச்சம் 


           மலை பிரசங்கத்தில் வந்திருந்த மக்கள் சாப்பிட்டு கூடைகளில் 
           உணவு மிச்சம் 


           பலர் இன்று வேலை இல்லாத பட்டதாரிகளாக இருப்பதற்கு 
   
           கடவுளுடைய சொத்து மிச்சம் ஆவதற்காக இந்த போராட்டம் 


           வேலை இல்லாத பட்டாதாரிகளாக இல்லாமல் எல்லாருக்கும் 
           நல்ல வேலை கிடைத்தால் 


           எல்லாருக்கும் வருமானம் அதிகமாகும் 


          வருமானம் அதிகமானால் விரும்பியதை எல்லாம் வாங்குவோம் 


          அப்படி வாங்கினால் கடவுளுடைய சொத்து மிச்சம் ஆகாது. 


          கடவுளுடைய சொத்து மீன், இறைச்சிகள் அதிகம் சாப்பிடுவோம் 


          அதனால் ஆடும், மாடு, மீன், கோழி இனங்கள் அழியும். 


          கடவுள் சொத்து மிச்சம் ஆகாது 


          சுற்றலா என்ற பெயரில் இயற்கையை நாசம் பண்ணுவோம்.      


          ஹைட்ரோ கார்பன் திட்டம் வேணாம், மீத்தேன் திட்டம் வேணாம் 


          ஆனால் எப்படியாவது மின்சாரம் தட்டுப்பாடு இருக்கக்கூடாது
          எரிவாயு தட்டுபாடு இருக்க கூடாது மானியம் கிடைக்கணும்


          வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம் என்று சொல்லும் நாம் 


          வீட்டுக்கு வீடு நம் கழிவுகளையே  மின்சாரம், எரிவாய்வும் நாமே 
          தயாரித்து தன்னிறைவு பெற்றால் 
  
          ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் கொண்டு 
          கிடைக்கும் எரிவாய்வு ஒரு பகுதியில் பத்து வருடத்திற்கு 


          கிடைக்கும் ப்ராஜெக்ட்டாக இருந்தால் நமக்கு நாமே மின்சாரம்,  
          எரிவாய்வு தன்னிறைவால் இன்னும் இருபது வருடத்திற்கு 
          கிடைக்கும் படி மிச்சம் பண்ணலாமே 


          ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் இதனால் மட்டும் 
          நிலம் வீணாகாது.        


          நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சினாலும் 
          அந்த பூமி பாழ்ப்படும்


          நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சினால் பூமி எரி குழம்பு பாதிப்பும் 
          இருக்கும்  அதனை தவிர்க்க 


         கொஞ்சம் குறைவான பாதிப்பாக 


         ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் இருக்கும் என்பதால் 
         இத்திட்டம் செயல்படட்டுமே 


         சூறை காற்று, புயல் என்று கேள்வி பட்டிருப்போம் 


        அதுபோல் நிலத்தடி நீர் சூறையாடப்பட்டால் தவறு தானே 
      
        தென்றல் இனிமையாக இருக்கும்


        புயல் சூறை காற்று பாதிப்பு தானே 


        நிலத்தடி நீரை காற்றின் தென்றலை போல் பயன்படுத்தினால் 
        நன்றாக இருக்கலாம்  


       நிலத்தடி நீரை புயல் சூறை காற்றை போல் பயன்படுத்தினால் 
       நன்றாக இருக்குமோ 


       ஜெயலலிதா அதிகார துஷ் பிரயோகம் செய்தார் 


      சசிகலா அதிகார துஷ் பிரயோகம் செய்தார் 


      கலைஞர் அதிகார துஷ் பிரயோகம் செய்தார்


      காவல் துறை அதிகார துஷ் பிரயோகம் செய்தனர் 


      அதுபோல் எதில் தன்னிறைவு பெறவேண்டும் என்று 
      கணக்கில்லாமல் 


       தனிமனிதர்கள் நாமும் அதிகார துஷ் பிரயோகம் செய்வதில் 
       தன்னிறைவு பெறும்படி


       நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு powerful மோட்டரை வைத்து 
       powerful ட்ரில்லர் வைத்து பூமியின் ஆழத்தில் உள்ள நீரை 


       சூறையாடும்படி அதிகார துஷ் பிரயோகம் மான அதிகார ful 
       செய்வதற்கு  மோட்டார் ட்ரில்லர் வடிவமைத்து 


       அழகு காட்டுகிறோம். அந்த அழகு நடன மாடுகிறது.


       அந்த நடனம் சிவனின் உத்தர தாண்டவமா?
ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும் 


           ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும் என்பார்கள்.


            ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்து புண்ணியம் சேர்த்தால் தன் பிள்ளையின் சந்ததிக்கு நாம் சேர்த்த புண்ணியம் நன்மை செய்யும்.


             என்னதான் தன் பிள்ளைய மட்டும் கொஞ்சி, கொஞ்சி வளர்த்தாலும் உனக்கும், உன் பிள்ளையின் மூதாதையர் பாவ கணக்கு 


நன்மையால் சரிகட்டப்படவில்லையென்றால் உன் பிள்ளை மற்றும் சந்ததிக்கு சாபமும், தீமையும் தொடரும் 


               சோத்துள்ள உப்ப போட்டு சாப்பிடுறியா? சூடு, சொரணை இல்ல            
வாங்கின கடனை வட்டியும், முதலுமா கொடுத்து கணக்க சரிக்கட்டிட்டு அப்பறம் சாப்பிடு.  உனக்கெல்லாம் சோறு ஒரு கேடா?


                ரோசம் மற்றும் உணர்வு உள்ளவர்கள் நாம கஞ்சி தண்ணி குடிச்சாலும் பரவாயில்லை முதல இந்த கடனை அடைச்சிடனும் என்பார்கள் 


                நம் மூதாதையர் செய்த கொடுமைகள், அக்கிரமங்கள் கொலை, கற்பழிப்பு ஆகிய அக்கிரம கணக்கை மாற்றனும்.


               நம் மூதாதையர் செய்த அக்கிரமங்களை நீக்க நம் மூதாதையர் பட்ட கடனை பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளையின் சந்ததிகளிடம் அன்பு காட்டி நம் சாபத்தை போக்க வேண்டும். 


               ஆம். ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும்.            


ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்து புண்ணியம் சேர்த்தால் தன் பிள்ளையின் சந்ததிக்கு நாம் சேர்த்த புண்ணியம் நன்மை செய்யும்.


            ஆயிரம், ஆயிரம் தலைமுறைக்கும் நம்மை விசாரிப்பவர் இறைவன். 


              தன் மூதாதையர் தந்த பாவம் போதாதுன்னு நாமும் நம்முடைய செல்வாக்கினால் ஒடுக்கப்பட்டோரை இன்னும் ஒடுக்கினால் நமக்கு பாவ போராட்டம்தான். 


             இது ஒரு சின்ன உதாரணம் .


             அதாவது தான் சுயநலத்தோடு வாழ்ந்து நிறைய சம்பாதித்து 


தன் மகளை திருமணம் பண்ணிக்கொடுக்க 50 பவுன் நகை இன்னும் சொத்தெல்லாம் வைத்திருந்தாலும் 
                
               வருகிற வரன் எல்லாம் 100 பவுன் வேணும் என்று கேட்பார்கள் 
ஆம் அதையும் செய்து திருமணம் பண்ண சம்மதித்தாலும் மாப்பிள்ளை மோசமான கேரக்ட்டர் ஆக இருப்பான். 


மற்றவர்களுக்கு உதவி செய்தும்,  புண்ணியம் சேர்ப்பவனும் 40 பவுன் வைத்திருந்தாலும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வருகிறவர் 


உங்களால் முடிந்ததை செய்யுங்கள், கட்டிய சேலையோடு வந்தாலும் 


பரவாயில்லை என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு பெண்ணை நேசித்து வாழ்பவனை இருப்பவன் மாப்பிள்ளையாக வருவான்.
சுயநலமுள்ளவனுக்கு தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கூட அமையலாம் 


தன் கொள்ளு பேத்திக்கு சீரழிவு வந்தால் 


கொஞ்சம் உன் மூதாதையரால் புண்ணியம் அமைந்து உன் மகள்  வாழ்க்கை நன்கு அமைந்திருக்கலாம் 


ஆனால் உன் அக்கிரமத்தை உன் மகளுக்கும் கற்று கொடுத்தால் உன் பேத்தி வாழ்க்கை சாபமாகும்.
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

வேண்டுதலை-பொருத்தனை

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:31 pm

வேண்டுதலை-பொருத்தனை


            எனக்கு மொட்டை போடனும் என்ற வேண்டுதலை இருக்கு.


            எனக்கு எடைக்கு எடை வெள்ளி காணிக்கை செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு.


            நான் பாதயாத்திரை செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு. 


            நான் 10 வருடத்திற்குள் ஐந்து லட்சம் காணிக்கை செய்யனும் என்ற பொருத்தனை செய்திருக்கிறேன் 


            அன்னதானம் செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு என்றெல்லாம் சொல்வார்கள்.


            கடவுளுக்கும் வேண்டுதலை இருக்கு தனது அன்பான வார்த்தையினால் அனைவரையும் தேற்றனும் தனது சந்தோசத்தை நமக்கு தரனும் என்று. 


           தன்னுடைய இப்படிப்பட்ட வேண்டுதலையை அல்லது பொருத்தனையை கடவுள் எப்பொழுது நிறைவேற்றுவார்.


           சீடர்கள் இயேசுவின் நாமத்தினால் பேய்களை ஓட்டினார்கள். 
மந்திரவாதிகளும் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டும்பொழுது 
பேய்கள் ஓடாமல் மந்திரவாதிகளை எதிர்த்தன. 


           இயேசு என்ற வார்த்தையின் விசுவாசம் மந்திரவாதிகள் அறியவில்லை. 


           அதுபோல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்ற வார்த்தையின் விசுவாசம் அறிந்தவர்கள் மட்டுமே அதன் பலனை அடைவார்கள். 


             நீ காணிக்கை செய்யும்பொழுது உன் சகோதரனுடன் ஒப்புரவு இல்லை என்றால் அவனோடு சமாதான ஒப்புரவாகி காணிக்கை செலுத்து என்பதை விசுவசித்தவர்கள் அதன் பலனை அடைவார்கள். 


              ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்பதன் வார்த்தையின் விசுவாசம் அறிந்தவர்கள் அதன் பலனை அடைவார்கள். 
               
           சீடர்கள் இயேசுவின் நாமத்தினால் பேய்களை ஓட்டினார்கள். 
மந்திரவாதிகளும் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டும்பொழுது 
பேய்கள் ஓடாமல் மந்திரவாதிகளை எதிர்த்தன. 


           இயேசு என்ற வார்த்தையின் விசுவாசம் மந்திரவாதிகள் அறியவில்லை. 
                   
            அதுபோல் ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்பதன் வார்த்தையை மந்திரவாதிகள் போல் அறிந்திருந்தால் பலன் இல்லை. 


            ஒரு பேயை 10 கிலோமீட்டர் தூரம் ஓட்டவேண்டுமானால் 10 கிலோமீட்டர் தூரம் வரை இயேசுவின் நாமம், இயேசுவின் நாமம் என்று சொல்லிகொண்டே இருந்திருப்பார்களா இயேசுவின் சீடர்கள் ஒரே முறை இயேசுவின் நாமத்தினால் உன்னை துரத்துகிறேன் என்று சீடர்கள் சொல்லியிருப்பார்களா?


            சமையலில் உணவில் உப்பை சேர்க்க வேண்டுமானால் எவ்வளவு சேர்ப்போம். 


           சமையலுக்கு அரிசியை எவ்வளவு சேர்ப்போம்,  தண்ணீரை எவ்வளவு சேர்ப்போம். மிளகாய் தூள் எவ்வளவு சேர்ப்போம். 


           அதுபோல் ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து திருப்திகரமாக சொல்லலாமே. சமையலை போல 


            நம்முடைய திருப்திகரம் எவ்வளவோ அவ்வளவு சொல்லலாம். 


            காணிக்கைக்கு பணம், காசு கொடுப்பதில் எவ்வளவு அளவு திருப்திகரம் இருக்கு.


             வாஷிங் மெஷினில் துணிகளை போட்டால் அது ஆட்டமேட்டிக்கா துவைத்து தரும் அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு தூரம் ஓடி தானாக நின்று விடும்.


            ஸ்தோத்திரம் தானே அது சொல்லிகிட்டே இருக்கலாம் அது ஈஸி 
என்று அதை மட்டும் குறிவைத்து சொல்லிவிட்டு, தேவனுடைய விருப்பத்திற்கு வெகு தூரம் ஆக இருந்தால்


            ஸ்தோத்திரத்தை ஒலி பதிவு பண்ணி (ரெகார்ட்) எப்ப பிரச்சனையோ அப்பொழுது எல்லாம் ஆன் பண்ணி விட்டுட்டு நாம் பிரீ ஆகிடலாமே 


             வாஷிங் மெஷின் துணி துவைப்பது போல் - சிந்திப்போம்.
கல்யாணம் ஆனவர் கல்யாணம் 


       கல்யாணம் ஆனவர் கல்யாணம் ஆகாதவர் போலவும்
       கல்யாணம் ஆகாதவர் கல்யாணம் ஆனவர் போலவும் 


       இச்சொற்றொடரை வைத்து ஒவ்வொன்றின் பங்கீட்டில் 
      முடிவெடுத்து சமாதானத்திற்கான வழி பார்ப்போம்


       ஏழை ஆனவர் ஏழை இல்லாதவரை போலவும் 
       ஏழை இல்லாதவர் ஏழையை போலவும்
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

தசம பாகம் செலுத்துதல்

Post by ராஜேந்திரன் on Sun Mar 26, 2017 3:32 pm

     தசம பாகம் செலுத்துதல் 


       நம்முடைய வருமானத்தில் தசமபாகம் செலுத்துதல் 
 
       நம்முடைய ஒவ்வொரு பங்கீட்டை பணம் என்ற அலகால் அளந்து 
       பண்டபரிமாற்றத்தை செய்கிறோம். 


       பண்டபரிமாற்றத்தில் 
       பண்டங்களாக உணவு பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி
       நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் என்றெல்லாம் 


       இவைகள் சம்பந்தப்பட்டதை பணம் ஆக தசமபாகம்    
       பரிமாறப்படுகிறது.         


       தசம பாகம் ஆக பெறப்பட்ட பணம் பண்டங்களாக உணவு 
       பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி, ஆலயம் 
       எழுப்புதல், ஆலய கட்டுமான பொருள்கள், ஆலய கட்டுமான கூலி
       நகைச்சுவை செலவழிக்கப்படுகிறது.
 
       உணவு பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி
       நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் என்றெல்லாம் உள் மீட்சி 
       திறன் பெற்று பணம் ஆகிறது. 


       பணம் வெளி மீட்சி திறன் பெற்று உணவு பொருள்கள், உடை
       உறைவிடம், உழைப்பு, அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு
       மன மகிழ்ச்சி, நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் 
       என்றெல்லாம் மாற்றம் ஆகிறது. 


       100 இறை வசனத்தில் தசம பாகம் ஆக 10 இறைவசனத்தை நாம் 
       கைக்கொள்ளலாம் அல்லது 10 இறைவசன தசம பாகம் ஆக 
       மற்றவரிடத்தில் விதைப்பதை செலுத்தலாம்.   


       ஒரு ஆண்டில் நாட்களின் தசம பாகமாக 36 நாட்கள் இறை ஊழியம் 
       செய்யலாம் அல்லது மருத்துவ சேவை செய்யலாம் 
      - ஒரு ஆண்டு 365  நாட்கள்  


       ஒவ்வொரு ஆண்டும் தசமபாக 36 நாட்களை பல்வேறு 
       நலத்திட்டங்கள் செய்யலாம் 


       இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் குடும்பம் என்ற ஜெயிலில் 
       இருந்து விடுதலை அடைந்து பலரின் கட்டுகளை விடுவிக்கும் 
       விடுதலைக்கு செயல்படுவோம். 


       அதனதன் பருவத்திற்கான வயது வரும்பொழுது அந்த அந்த தசம 
       பாகம் செலுத்துவோம் மற்றும் பெறுவோம் என்று 
       நிறைவேற்றுவோம். 
ஆண்டு நாட்களுக்கான தசம பாக நாட்கள் 36

               3
வருடம் , 4  வருடம் , 5  வருடம்  பொண்டாட்டி, பிள்ளையை விட்டுட்டு foreign (பாரின்) போறாங்க. ஏன்? வருடத்திற்கு 36 நாட்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆக முழு வீச்சில் சேவை செய்யக்கூடாது.

             
திடீர் என சம்பந்தமே இல்லாம ஏதோ ஒரு கேசில் மாட்டி ஒரு வருடம், இரண்டு வருடம் ஜெயிலுக்கு போக நேரிடலாம்.

              
ஏன் வருடத்திற்கு 36 தசம நாட்கள் இறைவனுக்காக செலவிட கூடாது

              
வருமானம் ஈட்ட 3 வருடம், 4 வருடம் வீட்டை பிரிந்து ஃபாரின் செல்லலாம்

                 
ஏன்? நாம் ஒரு கிராம முன்னேற்றத்திற்காக மக்கள் நல்வாழ்வுக்காக வருடத்திற்கு 36 தசம பாக நாட்களை செயல்படுத்தக்கூடாது.  


இறைவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டை


           தசம பாகம் என்ற வார்த்தையின் இருபுறமும் கருக்குள்ள பட்டை. 


பிளஸ் தசம பாகம்,  மைனஸ் தசமபாகம், மல்டிபிளை தசம பாகம்


மைனஸ் X  மைனஸ் மல்டிபிளை தசம பாகம், பிளஸ் x  பிளஸ் மல்டிபிளை தசம பாகம், மைனஸ் X  பிளஸ் மல்டிபிளை தசம பாகம் 


டிவிசன் தசம பாகம் மீதி, டிவிசன் தசம பாகம் ஈவு 


பிறந்த குழந்தை தனக்கு வேண்டிய பாலுக்காக சம்பாதிக்குமா ?
அந்த குழந்தை எந்த விதத்தில் தசம பாகம் செலுத்துகிறது.


இறைவன் பெயரால் அக்குழந்தைக்கு பிறரால் தசம பாகம் பெறப்படுகிறது. 


அக்குழந்தை எப்படி தசமபாகம் செலுத்துகிறது என்றால் மைனஸ் தசமபாகம் செலுத்துகிறது. 


வேதம் தசம பாகம் செலுத்து என்ற பதம் ஒரு தசம பாகம் செலுத்து என்று பொருள் அல்ல 


தசம பாகம் செலுத்து அவ்வளவுதான் 


தசம பாகம் வேறு, காணிக்கை வேறு 


தசம பாகம் செலுத்து அவ்வளவுதான்
ஒரு தசம பாகம் செலுத்து, இரண்டு தசம பாகம் செலுத்து, ஐந்து தசம பாகம் செலுத்து, மைனஸ் தசம பாகம் செலுத்து, மைனஸ் மூன்று மடங்கு தசம பாகம் செலுத்து 


வயது வந்த ஒரு அனாதை கை, கால் அடிபட்டு கிடக்கிறார்.  அவரால் சம்பாதிக்க முடியாது 


அவர் 6 மடங்கு மைனஸ் தசமபாகம் செலுத்துவார் 


அதாவது அந்த மைனஸ் ஐ மூட ஒரு லட்சத்தில் 60 ஆயிரம் அவருக்கு கொடுத்து மைனஸ் மூட பட வேண்டும். 


1௦௦௦  கோடி வருமானம் என்றால் 100 கோடி தந்து தசமபாகம் என்று 100 கோடி செலுத்த கூடாது.  900  கோடி கூட செலுத்தலாம் நிலைமையின் தீவிரத்தை பொறுத்து. அதாவது 9 தசம பாகம் (900 கோடி )   


ஒரு கிராமம் சுனாமி, அல்லது வெள்ளம் ஆகியவற்றால் பெரிய அளவில் பாதிக்க பட்டால். 


இறைவன் இப்படி சொல்கிறார் உன்னுடையதை எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடு, பின் என் பின்னே வா.  இது ஒருவகையான சூழல் 


அப்படியென்றால் 9 தசம பாகம்  கொடுப்பது சரியே


எப்படியோ மேடும் பள்ளமும் சம நோக்கு அடையலாமே
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

இன்னும் பிற, சொடுக்குங்கள்

Post by ராஜேந்திரன் on Fri Mar 31, 2017 2:24 pm

இன்னும் பிற, சொடுக்குங்கள்http://www.tamilthottam.in/t46941-4
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 444
Points : 460
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum