"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?

View previous topic View next topic Go down

இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?

Post by eraeravi on Tue Mar 21, 2017 4:47 pm

இணையத்தில் இரவி !

கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர்  ச.சந்திரா !

சாதனமா?சீதனமா?

அன்று தமிழ் வளர்க்க, அதியமான் தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கி கடையெழுவள்ளல்களுள் ஒருவனானான்.இன்றோ இலக்கிய ஆர்வலர்களுக்கு இல்லம் தேடிவந்து தமிழ் இணையதளங்கள் கனியை வழங்கிச் செல்கின்றன. இளைய தலைமுறையினருக்கு அறிவியல் தந்திருக்கும் அதிசய சாதனமே இணையம்.இயந்திரயுகத்தில் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியரசனை மிக்கவர்களுக்கும் கால இடைவெளி மற்றும் தூர இடைவெளியைக் குறைக்க வந்த தகவல் தொடர்பு சாதனமே தமிழ் இணையம் எனலாம்.

ஆறிலிருந்து அறுபதுவரை :

ஏட்டில் படித்த நாளும் போய்,புத்தகத்தைப் புரட்டிய காலமும் படிப்படியாய் மாறி,இன்று ஆறிலிருந்து அறுபதுவரை இணையத்தை நாடுவது நடைமுறையாகிவிட்டது.காலத்தின் ஓட்டத்தில் தமிழின் அவசியத்தை வளரும் தலைமுறையினர் புரிந்துகொள்ள,உலகின் பிறமொழிகளோடு தமிழ்மொழியும் ஈடுகொடுத்து நடைபோட,மொழிப்பற்றைப் பெருக்க-என பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒரு வியத்தகு சாதனமே இணையம் கவிக் களஞ்சியம்:. அன்றாடப் பணிகளால் மனம் அயர்ந்து, சற்றே இளைப்பாற எண்ணி தமிழ் இணையத்திற்குள் புகுந்தேன்.கண்ணிற்பட்டது கவிமலர்.காம். அத்தளத்தில் புதுக் கவிதை,ஹைக்கூ,நகைச்சுவைத் துணுக்குகள் என எண்ணற்ற படைப்புக்கள். www.kavimalar.com கவிமலரை உருவாக்கிய பிரம்மா யாரென உற்றுநோக்கினேன்.அம்மூலவர் யாரெனில் மதுரைக் கவிஞர் இரா.இரவி.தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் உதவி சுற்றுலா அலுவலராகப்   பணியாற்றிவரும் இவர் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களிலும் உலா வருவதை அறிந்தேன்.கவிமலரோடு மேலும்  www.eraeravi.blogspot.in வலைப்பூ  இவருக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்தத் தளங்களும் முப்பத்தி நான்கு வலைதளங்களோடு இணைக்கப் பட்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றே.இன்னும் ஒரு ஆச்சிரியப்படத்தக்கச் செய்தி என்னவெனில், கவிஞர் இரா.இரவியின்  www.kavimalar.com கவிமலர்.காமைப் பார்வையிட்டவர்கள் நான்கு இலட்சத்திற்கும் மேலான இலக்கிய பிரியர்கள் என்பதே.இவையெல்லாம் ஒருபுறமிருக்க,தற்செயலாக http://www.tamilthottam.in/f16-forum தமிழ்த்தோட்டம் எனும் இணையத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் பெரும்பான்மையான இலக்கியப் பதிவுகளைச் செய்தமைக்காக செவ்வந்தி எனும் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும் செய்தியும் அறியமுடிந்தது.ஈகரை களஞ்சியம் http://www.eegarai.net/sta/eraeravi எனும் தமிழ் இணையத்திலோ இவரது படைப்புக்கள் நிரம்பி வழிகின்றன.

எங்கும் எதிலும்:

எழுத்து.காமில் http://eluthu.com/user/index.php?user=eraeravi   இவரது கவிதைகள் சிறப்புத்தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.தாளம்.நியூஸ்.காமிலோ இரா.இரவியின் நூல் விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தது.தான் ஒரு படைப்பாளியாக இருந்து 16 நூல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் பிறரது சிறந்த நூல்களுக்கான விமர்சனங்களையும் வாசகர் என்ற நிலைக்கு மாறி, எழுதி இணையத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.இவரது ஒவ்வொரு விமர்சனமும் உணர்ந்து வாசிக்கப்பட்டு படைக்கப்பட்ட உன்னத விமர்சனமாகும்.படைப்பாளி தரமான நூலைப் படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நிறைகளோடு நூலில் குறையிருந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டவும் இரா.இரவி தவறுவதில்லை.

இவரது https://www.facebook.com/rravi.ravi
முக நூல் நண்பர்கள் 5000 .பின் தொடர்வோர் 5500

http://tamil.pratilipi.com/kavignar-eraravi  இணையத்தில் 600 படைப்புகள் 
http://www.tamilauthors.com/4.html இணையத்தில் நூல் மதிப்புரைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் உள்ளன .

மதிப்புரையும் தொகுப்புரையும்:

இவரது படைப்புக்கள் நான் வாசித்தறிந்த வரையில் முப்பதுக்கும் மேலான தமிழ் இணையங்களில் பதிவு செய்யபட்டிருக்கின்றது.கவிதை, திறனாய்வு மட்டுமல்லாது தான் நேரில் சென்று கேட்டறிந்த பிரபலமானவர்களின் சொற்பொழிவின் தொகுப்புரையும் தமிழ் இணையங்கள் பலவற்றிலும் இவரால் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் இலக்கிய ஆர்வலர்களின் வசதிக்காக இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களின் வழி தமிழ்.ஆத்தர்ஸ்.காமில் தவறாது அழைப்பு விடுப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.இதுபோல் நடந்து முடிந்த இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் முக்கிய நிகழ்வின் புகைப்படங்களும் கவிஞர் இரா.இரவியால் பல்வேறு தமிழ் வலைதளங்களில் பொருத்தப்பட்டிருப்பதும் அவரது தமிழியல் ஆர்வத்தை புலப்படுத்துகிறது.

ஈடு இணையுண்டோ?

 கவிஞர் இரா.இரவியின் கவிதைகள் மூடத்தனத்தின் முதுகெலும்பை முறிக்க வருவன,பழமை மரபைச் சாடுவன,புதுமையைப்புகுத்துவன,தமிழின உணர்வை வெளிப்படுத்துவன,பெண்மையைப் போற்றுவன,இயற்கையை வியந்து பாடுவன,சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டுவன-என சொல்லிக்கொண்டே போகலாம்.தேசத்தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள்,நடப்புச்செய்தி இவற்றையெல்லாம் மனதில் வைத்து அவ்வப்பொழுதில் இணையத்தில் கவிதைகளை மறவாது பதிவு செய்வதில் கவிஞர் இரா.இரவிக்கு ஈடு இணை வேறு எவருமில்லை.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு ஹைக்கூ:

“தாயிருக்க சேய்
சேயிருக்க தாய்
சுனாமி!”

இயற்கையை வியத்தல்:

“இயற்கை எனும் கவிஞன்
வானம் எனும் தாளில்
எழுதிய கவிதை வானவில்!”

ஆங்கிலத்திலும்துளிப்பாக்கள்:

Rainbow:
“sweet verse
written on skypaper
By nature poet”(  http://www.kavimalar.com/vh/enhycoo.htm  )

அன்று முதல் இன்றுவரை கவிஞர்கள்:

திருவள்ளுவர்:

“தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே
தமிழுக்கு மகுடம் சூட்டிய மாண்பாளன்” தாளம்.நியூஸ்.காம்

கவி சுரதா:

“இவர் பாடாத உவமை இல்லை!
இவர் பாடாத உவமை உவமையே இல்லை!”

அப்துல்கலாம்;

“செய்தித்தாள் விற்றுப் படித்து
தலைப்புச் செய்தி ஆனவரே”

என்று மேனாள் குடியரசுத் தலைவரைப் பாடியதோடு அவரின் அழைப்பின்பேரில் கலாமைச் சந்தித்து அவரின் பாராட்டுதல்களைப் பெற்ற பெருமை கவி இரவிக்கு உண்டு.கவிமலர்.காம் இதனை புகைப்படத்துடன் நிரூபணம் செய்கின்றது.
கவி இரவி காலத்தோடு கைகோர்க்கும் திறம்:

அணுகுண்டு போட்டனர்!
புல்பூண்டு கருகியது!
உயிர்கள் ஒழிந்தன!
ஓய்வின்றி உழைத்தனர்.
உச்சம் தொட்டனர்!
சுனாமி வந்தது!
சும்மா புரட்டிப் போட்டது!
அணு உலை வெடித்தது!
ஆருயிர்கள் மடிந்தன!
இனியும் உழைப்பர்!
உலகின் உச்சம் தொடுவர்!
விதியை நினைத்து
வீழமாட்டார் ஜப்பானியர்! (எழுத்து.காம்)

பெண்மைகுறித்த கவிதை:

“பெண்ணைக் குறை சொன்னால் பொறுத்துக் கொள்வாள்!

பெற்றோரைக் குறை சொன்னால் கொதித்து எழுவாள்!” 

மனதார…

தமிழ் இணையத்தின் எந்தவொரு வலைதளத்தில் புகுந்தாலும் கவி இரா.இரவியின் படைப்புக்களைப் பார்க்க இயலும்.பெரும்பாலோர்க்கு வீடே உலகமாக இருக்க கவிக்கோ இணையமே உலகமாக இருப்பது தெள்ளத்தெளிந்த உண்மை.பதினாறு விருதுகளைப் பெற்ற பெருமையினை உடைய இவருக்கு இணையம் சார்பான விருதினை வழங்காமல் இருப்பது ஏனோ? என்ற ஆதங்கம் என்போன்ற இணையதள வாசகர்க்கு உண்டு.கவி இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum