"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:25 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:16 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Go down

சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by அ.இராமநாதன் on Wed May 31, 2017 12:43 pm-
 
மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு 
ஊடகம் சிரிப்பு! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. 

பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த 
சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. 
கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை 
சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 
15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, 
ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு... 

திருக்குறள் முதல் வாட்ஸ்அப் ஸ்மைலி வரை அனைத்தும் 
அழுத்தமாகச் சொல்வது இதைத்தான். இதில் பலருக்கும் 
பிரச்னை என்னவென்றால், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித்தர 
முடியாத இந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது 
என்பதுதான்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25680
Points : 55918
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by அ.இராமநாதன் on Wed May 31, 2017 12:45 pm

-
ஏன் சிரிக்க வேண்டும்?
-
* மனிதன் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? 
ஏனென்றால், உயிர் வாழப் பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் 
மனிதன் மட்டும்தானே! `வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் 
போகும்’ என்பது வழக்குமொழி மட்டும் அல்ல... 
விஞ்ஞான உண்மையும்கூட. எபிநெஃப்ரின் (Epinephrine), 
நார்-எபிநெஃப்ரின் (Norepinephrine), கார்டிசால் 
(Cortisol) ஆகியவை மனஅழுத்தம் உண்டாக்கும் 
ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது 
அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனாலேயே, 

இயல்பாகவே மனஅழுத்தம் குறைகிறதாம். இயல்பிலேயே சிரிப்பை 
அடக்கிவைத்து, அதன் காரணமாகவே நம் ஊர்ப் பெண்களுக்கு 
ஏற்படுபவைதான் மனஅழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவை. 

* சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச் செய்து, நம் 
மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் 
உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் 
படிதலும்தான் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு எனப் பல 
பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, 
அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யும். 

* பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டி பயமுறுத்தும் 
புற்றுநோய்களுக்கும், அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் 
எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு 
காரணமே. 

* உயர் ரத்த அழுத்தம் தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் 
குறைவால் வரும் மாரடைப்புகளே அதிகம் எனப் பல ஆய்வு 
முடிவுகள் சொல்கின்றன. மாரடைப்பைத் தள்ளிபோடும் 
விலையில்லா மருந்து, வயிறு குலுங்கவைக்கும் சிரிப்பு!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25680
Points : 55918
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by அ.இராமநாதன் on Wed May 31, 2017 12:46 pm* சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் 
சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; 
பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்; தசைகளைத் 
தளர்வாக்கும்; வலி நீக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 
ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... 
போன்ற மூளையின் செயல்திறனைக் கூர்மையாக்கும்.

* `தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ 
என்பதுபோல, `தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ 
என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். 

சிரிப்பு

சிரிப்புக்கு நேர் எதிரானது கோபம். `கொஞ்சமே கொஞ்சம் சரியான 
கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், 
யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் 
காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ எனச் 
சொன்னவர் அரிஸ்டாட்டில். 

அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் 
பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை 
வர வழிவகுக்கும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25680
Points : 55918
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by அ.இராமநாதன் on Wed May 31, 2017 12:46 pmகோபத்தை திசை திருப்புவது எப்படி? 

* `கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்த விநாடியிலேயே, 
சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே 
தடலாடியாக நிறுத்திவிட வேண்டும். சில நிமிட இடைவெளிக்குப் 
பிறகு, `அது அவசியமா?’ என யோசிக்க வேண்டும். பல 
சமயங்களில், `அது அநாவசியம்’ எனத் தெரியும். 

* கோபம் உண்டாகும் தருணங்களில் மூச்சை நன்கு உள்ளிழுத்து
விடவும்; கோபத்தை வளர்க்கும் அட்ரினலின் ஹார்மோன் 
கட்டுப்படும். 

* நெருக்கமானவர் நம் மீது தொடர்ந்து கோபப்பட்டுக்கொண்டே 
இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், 
காதல் தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப் பார்த்து, 
சிந்தியுங்கள். கூலாகிவிடுவோம். 

* அடிக்கடி தேவையற்றதற்கெல்லாம் வரும் கோபத்துக்குப் 
பின்னணியாக மனஅழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல 
மருத்துவர் உதவியும்கூட தேவைப்படலாம். கோபப்படாமல், 
அவர் உதவியை நாடவும். 

* கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. 
மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், 
ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், 
பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25680
Points : 55918
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by அ.இராமநாதன் on Wed May 31, 2017 12:46 pmசிரிக்கச் சில வழிகள்... 

* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, 
சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம் 
சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் 
ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம். 

* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை 
உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் 
படத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது... என  தினமும் 
ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் 
தொற்றாநோய்களை தள்ளிப்போடலாம்... தவிர்க்கலாம். 

* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி 
செய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது 
தொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து 
அவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்டுமானாலும் 
முயற்சி செய்யலாம். 
அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும். அவர்களின் 
மனங்களும் மலரும். 

* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் 
போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. 
அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்
கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது அவற்றைப் பார்த்து 
ரசிக்கலாம். 

சிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் 
அது உங்களுக்கு சொர்க்கமாகவே தெரியும். 
-
-----------------------------------தொகுப்பு: பாலு சத்யா
விகடன்
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25680
Points : 55918
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சிரிப்பு... சிறந்த மருந்து! நலம் நல்லது-30 #DailyHealthDose

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum