"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Today at 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Today at 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Today at 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Yesterday at 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ‘பூட்டு’ பூமியில் குட்டியாய் டூர் -

View previous topic View next topic Go down

‘பூட்டு’ பூமியில் குட்டியாய் டூர் -

Post by அ.இராமநாதன் on Wed Jun 07, 2017 4:30 pm

திண்டுக்கல் : 


கோடை விடுமுறையில்  ஒட்டுமொத்த பார்வையையும் 
ஈர்ப்பது சுற்றுலாத்தலங்கள் தான். ஒரே நேரத்தில்  பலரும் 
மொய்ப்பதால் நெருக்கடி, வாகன நெரிசல், அடிப்படை 
வசதிகளில் சிரமம்...  என ஒட்டுமொத்த உல்லாச 
மனோநிலையே சிலவேளைகளில் கெட்டுப்போய் விடுகிறது.


ஆனால்  பலரது பார்வையிலும் படாமல் மகிழ்ச்சியையும், 
ரம்மியமான சூழ்நிலையையும் வாரி  வழங்கும் பல்வேறு 
சிறிய சுற்றுலாத்தலங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலுமே 
இருக்கின்றன.  


அவற்றை அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டும் கண்டு
களிக்காமல், வெளிமாவட்டங்களை  சேர்ந்தவர்களும் ரசிக்க 
வழி வகுப்பதே இக்கட்டுரையின் நோக்கம். 


இதோ பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் 
வெளிச்சம்படாத சில சுற்றுலாதலங்கள்:


சிறுமலை... பெரு மகிழ்ச்சி


சிறுமலை... பெயருக்கேற்றார்போல் சிறியது தான். 
ஆனால் வழியெங்கும் சில்லென்ற காற்றும்,  பசுமையான 
காட்சியும் மனதை ரொம்பவே அள்ளும். 


2,750 மீட்டர் உயரம்  கொண்ட இம்மலை 18 கொண்டை 
ஊசி வளைவுகளை கொண்டது. நான்காவது வளைவிலே 
விண்ணில்  மிதப்பதை போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. 


தென்னை மரம், அடுக்குமாடி  கட்டடங்கள் என்று உயரமாகத் 
தெரிந்த அத்தனையும், அடுத்த அரை மணிநேரத்தில்  
குனிந்து அதலபாதாளத்தில் பார்க்க வேண்டிய அளவிற்கு 
இந்த மலை மாற்றத்தை  ஏற்படுத்துகிறது.


எப்படி போவது? திண்டுக்கல்லில் இருந்து 21 கிமீ தூரத்தில் 
உள்ளது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு பஸ் உண்டு. 
கட்டணம் ₹30.


பஞ்சாமிர்த பழம்!


சிறுமலை  வாழைப்பழம், தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. 
சிறியவர் முதல் பெரியவர் வரை  எவரும் இதனை உண்ணலாம். 
எளிதில் அழுகிப்போகாது. இப்பழம் இருக்கும் அறை  அப்படி 
ஒரு கமகமப்புடன் இருக்கும். 


முக்கியமானவர்களை சந்திக்க செல்லும்  போது இப்பழங்களை 
கொண்டு செல்வது பலரது வழக்கம். பழநி முருகன் கோயிலில்  
இப்பழம் தான் பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 


மலை, குளிர்ச்சியான  பருவநிலை உள்ளிட்டவற்றால் 
இச்சிறப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்  கூறுகின்றனர்.


பீரங்கி பார்க்கணுமா? 


சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திண்டுக்கல் மலைக்
கோட்டைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. 1605ல் 
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் 60 0அடி உயரம் உள்ள இந்த 
கல் மலையில் ஒரு கோட்டையை கட்டினார். 


தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் திருமலைநாயக்கர், 
ராணிமங்கம்மாள், திப்புசுல்தான், ஹைதர்அலி, 
மைசூர் சுல்தான்கள், ஆங்கிலேயர் என்று இங்கு தடம் 
பதித்துள்ளனர். 


பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பீரங்கிகள், சிறைகள், போர் 
வீரர்கள் தங்கும் அறைகள் என்று இன்றும் வரலாற்றின் 
நினைவுகளாக நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்து 
செல்கின்றன. 


15வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம். 
அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.15, வெளிநாட்டினருக்கு 
ரூ.200 கட்டணம். காலை 8 முதல் மாலை 6 மணி வரை 
அனுமதி உண்டு. 


பெரிய்ய்ய... கருடாழ்வார்


திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயில் 
முன்புள்ள கருடாழ்வார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் 
வரை பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. 


26 அடி உயரத்தில் விண்ணை முட்டிக்கொண்டு நிற்கும் 
கருடாழ்வார் கண்களை உருட்டிக் கொண்டிருக்கும் காட்சி 
காண்போரை ஈர்க்கும். பிரமாண்டமான கால் விரலை 
மட்டும் தான் அருகில் இருந்து பார்க்க முடியும். 
அவரின் தோற்றத்தை அண்ணாந்து  பார்த்தே வழிபட 
முடியும். 


வைகை கரையில் வீர ஆஞ்சநேயர்
 
நிலக்கோட்டையில்  இருந்து 7 கிமீ தூரத்தில் 
வைகையாற்றின் கரையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 
வீரஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் 
இதிகாச காலங்களுடன்  தொடர்புடையது. அருகே 
சித்தர்கள் மலை உள்ளது. இங்கு சித்தர்கள் பலர் தவம்  
செய்ததாக ஐதீகம். 


மலை உச்சியில் மகாலிங்கம் கோயில் உள்ளது. கோயிலுக்கு  
முன்பு வற்றாத  சுனை ஒன்று உள்ளது. நவக்கிரகங்களில் 
குருபகவானுக்கு தனிக்கோயில் உள்ள குருவித்துரை  
இக்கோயிலில் இருந்து 4 கிமீ.தூரத்தில் அமைந்துள்ளது 
மற்றொரு சிறப்பு.


ஓராயிரம் ரூபாயில் ‘ஒரு பக்க பிரிண்டிங்’
 
பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் 
திருஆவினன்குடி கோயில்  எதிர்புறம் உள்ள சன்னதி வீதியில் 
அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு  பழங்கால 
பொருட்கள் அதிகம் வியாபித்துள்ளன. 


ஓலைச்சுவடிகள்,  மருத்துவச்சுவடி, மந்திர ஏடு, இந்திய
 நாணயங்கள், எழுத்தாணிகள்,  செப்புத்தகடுகள், 
மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி. இரண்டாயிரம்  
வருடத்திற்கு முந்தைய மூங்கில் பாத்திரம், இசைக்கருவிகள் 
என்று நம்  மூதாதையரின் பயன்பாட்டு கருவிகள் நம்மை 
ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 


மேலும் கிபி 2ம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் வகைகள்,
 மரச்சிற்பங்கள்,  உலோகவியல் பொருட்கள், படிமங்கள், 
கிபி 18ம் நூற்றாண்டில் பழநி என்ற  எழுத்துடன் அனுமன், 
மயில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள நாணயம், 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்ட ஆயிரம் ரூபாய் 
நோட்டு (ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட்  செய்யப்பட்டிருக்கும்) 
உள்ளன. 


சமணர்களின் ஹெட் மலை


பழநியில் இருந்து கொழுமம் சாலையில் 17 கிமீ தூரத்தில் 
பாப்பம்பட்டி அருகே  இம்மலை உள்ளது. கிபி 2, 3ம் நூற்றாண்டில் 
வாழ்ந்த சமணத்துறவிகளின் பள்ளி  அங்கு செயல்பட்டதற்கான 
ஆதாரம் உள்ளது. 1,800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, 
குகை ஓவியங்கள் அதிகம் உள்ளன. உத்தமபாளையம், மதுரை, 
கொல்லிமலையில் செயல்பட்ட சமண பள்ளிகளுக்கு ஐவர்மலை 
தலைமையிடமாகவும் இருந்துள்ளது.
-
-----------------------------
நன்றி- தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum