"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 7:59 pm

» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூல்:தானாய் கழிந்தது பொழுது , திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

View previous topic View next topic Go down

நூல்:தானாய் கழிந்தது பொழுது , திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

Post by eraeravi on Sat Aug 07, 2010 11:12 pm


ஆசரியர்:இரா. ஆனந்தி
வீணாய்க் கழியாமல் தானாய் கழிந்த பொழுதுகள்...

கற்பனையா? நிஜமா?
ஆனந்தாஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ரூ.60 விலை மதிப்புள்ள 'தானாய்
கழிந்தது பொழுது' - என்ற கவிஞர் இரா.ஆனந்தியின் நூல் ஓர் அற்புதமான நூல்.
கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறோமா அல்லது கவிஞர் ஆனந்தி நம் அருகில்
அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறாரா என்று உய்த்து உணர முடியாதபடி
வாசிப்போர் அனைவரும் இந்த கவிதை தொகுப்புடன் ஜக்கியமாகி விடுகிறோம். அந்த
அளவிற்கு நூலின் மொழிநடை ஜில்லென்று ஓடையின் சிலிர்ப்போடு இலக்கியப்
பாதையில் பயணிக்கின்றது. கற்பனையும் நிஜங்களும் பக்கத்திற்குப் பக்கம்
போட்டியிடுகின்றன. வாழ்வியல் யதார்த்தத்தை அப்படி அப்படியே எடுத்துச்
சொல்லும் ஆசிரியரின் கவித் திறனை நாம் மெச்சித்தான் ஆகவேண்டும். அஃறிணை
உயிர்களின் உயர்ச்சி கூறி, உயர்திணையின் தாழ்ச்சி கூறி, மனிதத்தை ஊட்டும்
பொழுதில் இக்கவிஞர் ஒரு தாயின் நிலையிலிருந்து எழுத்துக்களைப்
பிரசவித்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது.


பரிமாற்றமா? தடுமாற்றமா?
"தானாய் கழிந்தது பொழுது" - நூலில் நிகழ்காலத்தின் நிஜங்கள்,
எதிர்காலத்தின் ஏக்கங்கள், இறந்த காலத்தின் இழப்புக்கள்
பட்டியலிடப்படுகின்றன. இந்நூலில் சொல்லப்பட்டுள்ள பொய்மைக்கான இலக்கணம்,
புரியாதவரும் புரிந்துகொள்ளும்படி இருப்பதோடு அவர்களையெல்லாம் வாய்மையின்
பாதைக்கு திருப்பி விடுகின்ற நல்ல காரியத்தையும் செய்துவிடுகின்றது.
உணர்வுகளுக்கும் நிகழ்வுகளுக்குமான வேறுபாட்டை, மாறுபாட்டை அழகுற
விவரிக்கிறார் கவிஞர் ஆனந்தி. மனதின் தேடல் குறித்த கவிதை மகத்தான கவிதை.
கவிதைகளில் பெரும்பாலன முடிக்கப்படாமலேயே இருப்பினும், முடிந்தது போன்ற
மனநிறைவை நமக்குள் உருவாக்குவதுடன் இறுதி வரிகள் நம்மை வியப்புலகத்திற்கு
இட்டுச் செல்லும் வண்ணம் புதிர் விடுக்கும் கவிதைகளாக
அமைக்கப்பட்டிருப்பதே இந்நூலின் சிறப்பம்சம் எனலாம். அதீத அன்பில் நிகழும்
பரிமாற்றங்களும், விளையும் தடுமாற்றங்களும் அப்படி அப்படியே இயல்பாகச்
சொல்லப்பட்டுள்ளன ஒவ்வொரு கவிதையிலும்.


காத்திருத்தலா? தொலைத்தலா?
"கடிதம்" - பற்றிய கவிதை - "கவிதையல்ல" அது ஒரு காவியமே!| முரணாக ஒரு சில
கவிதைகள் படைக்கப்பட்டிருப்பினும் அது வாழ்வியலின் நடைமுறை நிகழ்வுகளைப்
பிரதிபலிப்பதனால் அவற்றை நம் மனது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மண்ணோடு
விண்ணையும் சேர்ந்து அளக்கும் கவிதை மாண்புறு கவிதை. கனவுகள் கலைதலும்,
நினைவுகள் சிதைதலும், இருப்பது இழத்தலுமாக கவிதைகள் இந்நூலில்
பயணிக்கின்றன. காத்திருத்தலும் தொலைத்தலும் இத்தொகுப்பில் திரும்பத்
திரும்ப நிகழ்கின்றன. கடலலைகளோடு நினைவலைகள் அடிக்கடி போட்டியிடுகின்றன.
ஏக்கமும் தாக்கமும் நூலில் மாறி மாறி இடம்பெறுகின்றன. மேகமும் காற்றும்
அலையும் நதியும் மலரும் உயர்திணைக்கு பாடம் கற்றுத்தரும் ஆசிரியனாய் உலா
வருகின்றன நூல் முழுவதும். நிகழ்விற்கும் நிகழ்வற்ற தன்மைக்குமான
வித்தியாசத்தை அத்துணை அழகாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார் இந்நூலில்.
விழிகள் புரியும் வேலையை வெகு இயல்பாக கவிஞர் வர்ணிக்கின்றார். வாழ்வியல்
கூறுகள் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ப்படுகின்றது இந்த தொகுப்பில்.
நேசமும் பாசமும் உயிர்பெற்று உலாவி பக்கம் பக்கமாய் பேசுகிறது நம்மோடு.
கவிதைகள் முடிந்தும் முடியாமலும் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்துடனும்,
முடியாமலேயே முடிந்தும். எல்லைக்கோட்டைத் தாண்டியும், சில வேளைகளில்
தாண்டாமலும் கண்ணீரும், கலக்கமுமாய், நெருப்பும் தவிப்புமாய், நிழலும்
நிஜமுமாய், வேதனையும் போதனையுமாய், வினாவும் விடையுமாய், தேடலும் ஊடலுமாய்
கனவோடு களித்து, மனதோடு உறவாடி, இயற்கையை எட்டிப்பிடித்து, செயற்கைத்
தனத்தை நெட்டித்தள்ளி, காயங்களோடும் மாயங்களோடும் கை கோர்த்து,
பெரும்பாலும் மௌனமாய் பயணிக்கின்றன: சில கவிதைகளோ சப்திக்கவும் செய்கின்றன.


மனதில் பதிந்த கல்வெட்டுக் கவிதை :

தொட்டுத் தொடரும்
முட்களின் நகர்வாய்
நான்
எண்களாய் நீ"!


மனித மன புரிதுலணர்வை மேம்படுத்தும் விதமாக, அதீத பாசம் கொள்வோர் தங்கள்
பாதையில் சீராகப் பயணிக்கும் வண்ணமாக, "இந்தச் சமூகம் இப்படிப்பட்டது தான்
- பார்த்து நடந்துகொள்" என்று வலியுறுத்தும் வண்ணமாக நல்லெண்ணத்துடனேயே
கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2105
Points : 4751
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum