"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:43 am

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:42 am

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:41 am

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:40 am

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:45 pm

» டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கார் திருட்டு
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நிலா ரசிகன்கவிதைகள்

View previous topic View next topic Go down

நிலா ரசிகன்கவிதைகள்

Post by அ.இராமநாதன் on Mon Sep 25, 2017 8:54 pm

1.
நீங்கள் இறந்து போவீர்கள் 
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள். 
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.


2.

நேற்று மரணித்தார்
நண்பர் ஒருவர்.
நான்கு மரணத்தை
ருசித்து வீழ்கிறது அருவி.
கடல் கொண்ட உயிர்கள்
சில.
இறகு உதிர்த்து சாலையோரம்
உயிரற்று கிடக்கிறது
பறவையொன்று
யார் யாருக்கோ
அறியாத காரணங்களுடன்
மரணம் நிகழ்கிறது.
எதற்கிந்த கவிதை எழுதும்
வேலை என்றொரு
கேள்வி எழுப்பப்பட்டது.
இப்போது
காரணமுடன் மரணிக்கிறேன்
நான்.

3.

பறவைகளின் எச்சம் 
மண் தொட இயலா 
அடர்வனத்தில் 
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே 
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

4.

உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும் 
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது 
நிறமற்ற மழை.


5.

சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில் 
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள் 
அவர்கள்.6.

காயத்தின் ஆழத்தில் 
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன் 
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள் 
நுழைந்து மெளனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.

7.

ஒரு 
வனத்தினூடாக 
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின் 
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை 
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய். 
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.

8.

அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.


9.உணர்ச்சிகள் உறைந்த பூச்செடியொன்று
உயிர்ப்பில்லாத வெண்ணிற
பூக்களுடன் நின்றாடுகிறது.
சாத்தான்களிடமும் வரம் பெற்றவன்
தேவதையின் முதல் சாபத்தை
பெறுகிறேன்.
விளக்கணைத்து அழுகின்ற 
துயரத்தின் வலி நிலவு வரை
நீள்கிறது.
சன்னமான குரலில் என்னுடன்
உரையாட துவங்குகிறாள்
கவிதைப்பெண்.

10.

புறக்கணிப்பின் முட்பாதை
என்னை வந்தடைகிறது.
வழியெங்கும் மரித்து கிடக்கின்றன
சிறகிழந்த பட்டாம்பூச்சிகள்.
ஈர்ப்பின் அர்த்தம் அறியாத
பாதங்களில் மிதிபடுகின்றன
விருப்பங்கள் சில.
சுயத்தின் மரண ஊர்வலத்தில்
பூக்கள் தூவிச் செல்கிறாள்
சிறுமியொருத்தி.
சுயம் கவிதையென்று 
பொருள் கொள்க.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நிலா ரசிகன்கவிதைகள்

Post by அ.இராமநாதன் on Mon Sep 25, 2017 8:54 pm

11.

வாழ்வின் மிகப்பெரும்
தவறை ஒரு சொல்லாக்கினேன்.
எனது பிம்பத்தை தின்று
தீர்த்த அச்சொல் ஒரு வாக்கியமானது.
உடலெங்கும் படர்ந்த
அவ்வாக்கியம் 
ஒரு பொய்யாக உருப்பெற்றது.
இப்போது, 
பொய்யின் வடிவத்தாலான
கனவுச்சில்லுகளில்
எனக்கான கடைசி விருப்பங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

12.
ழை ருசித்துக்கொண்டிருக்கும் 
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மெளனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மெளனத்தின் 
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.

13.
தீராத பெரும்துயர் கரைந்துருகி 
நதியென ஓடுகிறது.
கண்ணீரால் சூழந்திருக்கிறது 
என் இரவுத்தீவு.
வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து ஊமையாகும் தருணத்தில்
ஒர் உன்னதமான பாடலை
இவ்விரவு இசைக்க ஆரம்பிக்கிறது.
பவித்திரம் வழியும் இந்த இரவுக்குள்
வந்தமர்கின்றன சில ஊனப் பறவைகள்.

14.

இதென்ன பெரிய விஷயமா
என்கிறீர்கள்.
இதிலென்ன அற்புதமிருக்கிறது
என்று பரிகசிக்கிறீர்கள்.
இவ்வளவு முட்டாள்த்தனங்கள்
ஏனென்று வினவுகிறீர்கள்.
என் சின்னஞ்சிறு உலகிற்குள்
சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன்
நான்.


15.

இளவேனில் பூக்களால் பின்னப்பட்ட 
என் கனவுகளை உனக்கு பரிசளிக்கிறேன்.
மழையின் குதூகலத்துடன் பெற்றுக்கொள்வாய்
என்றிருந்தேன்.
கோடரியுடன் வருகின்ற உன்னைக் கண்டு
மரித்து விழுகின்றன பூக்கள்.
கவிதைகளின் மரணமும் 
இப்படித்தான் நிகழ்ந்தது.

மழையை தின்னத்துவங்குகிறது
செங்குருதி வெயில்.

16.

புத்தனுக்கும் உனக்குமிடையே
யுத்தமொன்று நிகழ்கிறது.
முடிவில்
வீழ்கிறது போதிமரம்.
நிச்சலன குளத்தில் கற்களை
எறிந்தபடி அமர்ந்திருக்கிறாய்
உனது வாக்குவாதங்கள் ஒவ்வொன்றாய்
கற்களாக உரு மாறுகிறது.
கொஞ்சம் அழுதுவிட்டு
சிலுவை சுமந்தபடி நடக்கிறாய் 
நீ.

17.

கூரிய பற்களின் ஓரங்களில்
என் குருதி படிந்திருக்கிறது.
புசித்த களைப்பில் நிஜம்
உதிர்க்கிறாய்.
காமத்தின் துவக்கப்புள்ளி 
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
சாம்பலென உதிர்கிறேன்.
சர்ப்பவாசம் அறைக்குள் ஊடுருவும்
தருணம்
நேசத்தின் முகமூடி அணிந்து 
வெளியேறுகிறாய்,
விஷம் தோய்ந்த வார்த்தைகளை
வீதியெங்கும் சிதறவிட்டபடி.

18.
மொழி மரணித்த இரவொன்றின்
தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன 
சில ஞாபகங்கள்.
இருத்தல் தொலைந்த அவமானத்தில்
உடைகிறது தேநீர்க்கோப்பை.
சிறகறுந்த பறவைகளின் குருதி 
மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.
காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது
இந்த உயிர்மிருகம். 


19.


மழைத்துளியொன்றை ஏந்தி வந்தாள்
கருமை நிற தேவதை.
அத்துளி பேருருவம் பெற்று 
ஒரு மாளிகையான தருணம்
சிறுவனாகியிருந்தேன்.
கண்கள் மின்ன என்னை 
மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.
புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.
நீண்டதொரு மயக்கத்திலிருந்து
விடுபட்ட கணம்
என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.
ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்
நடனமிடுகிறாள் கருமை நிற
வதை.

20.
நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்.

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன. 

உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.

மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
நிலா.

- நிலாரசிகன்.

courtesy
[You must be registered and logged in to see this link.]


 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23588
Points : 50964
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum