"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Go down

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Post by அ.இராமநாதன் on Thu Sep 28, 2017 9:23 am

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் 
போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று
(வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

‘களம் இறங்கி விட்டால் எதிரணி மீது கருணை காட்டும் பேச்சுக்கே 
இடமில்லை; வெற்றிப்பயணம் தொடரும்’ என்று இந்திய கேப்டன்
விராட் கோலி சூளுரைத்துள்ளார். 

முதல் ஆட்டத்தில் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சோபிக்க 
தவறிய போது, மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் 
கைகொடுத்தனர்.

3-வது ஆட்டத்தில் தொடக்க ஜோடியும் ஒரு சேர ‘கிளிக்’ ஆனது. 
அரைசதம் அடித்த ரோகித் சர்மாவும், ரஹானேவும் முதல் 
விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்து அசத்தினர். 

ஆக, இந்திய அணி பேட்டிங்கில் முழு பலத்துடன் இப்போது திகழ்கிறது. 

பேட்டிங் வரிசைக்கு முதுகெலும்பாக இருக்கும் ஆல்-ரவுண்டர்
ஹர்திக் பாண்ட்யா, 9 சிக்சருடன் இரு அரைசதங்கள் 
நொறுக்கியுள்ளார்.

பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா, சுழற்பந்து வீச்சாளர்கள் 
யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மிரட்டுகிறார்கள். 
ஆனால் தொடரை வசப்படுத்தி விட்டதால் ஒரு சில வீரர்களுக்கு 
ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடன் 5 அல்லது அதற்கு 
மேலான ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் 7 முறை 
விளையாடி உள்ளது. எந்த ஒரு தொடரிலும் 3 ஆட்டங்களுக்கு மேல் 
இந்தியா வெற்றி பெற்றதில்லை. 

இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் அது இந்திய அணிக்கு 
புதிய சாதனையாக அமையும். மேலும் தொடர்ச்சியாக 
10 ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்த முதல் இந்திய கேப்டன் என்ற 
அரிய சிறப்பு விராட் கோலியின் வசம் ஆகும்.

தினத்தந்தி_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Post by அ.இராமநாதன் on Thu Sep 28, 2017 9:23 am

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவில் விராட் கோலி கலக்கியிருக்கலாம். ஆனால் சர்வதேச போட்டியில் இங்கு அவரது செயல்பாடு மோசமாக இருக்கிறது. இங்கு அவர் ஆடியுள்ள 4 ஒரு நாள் போட்டிகளில் 0, 8, 34, 0 என்று வீதமே ரன் எடுத்துள்ளார். அந்த மோசமான நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேகத்துடன் வரிந்து கட்டுவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நடப்பு தொடரில் மூன்று முறையும் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளேன். அவருக்கு ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசக்கூடாது என்பதே எனது திட்டம். ஆப்-சைடுக்கு வெளியே, வேகத்தை மாற்றி பந்து வீச வேண்டும். எனது ஓவரில் 2-3 பந்தில் அடிக்காவிட்டால் அதன் பிறகு இறங்கி வந்து ஆட முயற்சிப்பார். அதன் மூலம் விக்கெட்டை வீழ்த்த முடியும்.

டேவிட் வார்னர் மிகவும் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேன். முடிந்தவரை அவரை சீக்கிரம் வெளியேற்றுவதே எங்களது பிரதான இலக்கு’ என்றார்.

வெளிநாட்டு மண்ணில் கடைசி 13 ஒரு நாள் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாததால் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தொடரை இழந்து விட்டாலும், இந்தியாவின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட்டு ஆறுதல் வெற்றிக்காக தீவிர முனைப்பு காட்டும். ஒரு வெற்றி கிடைத்து விட்டால் போதும். அதன் பிறகு உத்வேகம் கிளர்ந்தெழும், வீரர்களிடையே நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Post by அ.இராமநாதன் on Thu Sep 28, 2017 9:24 am

முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆரோன் பிஞ்சின் சதத்தின் (124 ரன்) உதவியுடன் 293 ரன்கள் குவித்த போதிலும், அதை வெற்றிக்குரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பீல்டிங்கின் போது கை விரலில் எலும்பு முறிவுக்குள்ளான சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தாயகம் திரும்புகிறார். அதனால் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா களம் இறங்குவார்.

இது பருவமழை காலம் என்பதால் பெங்களூருவில் அடிக்கடி மழை பெய்கிறது. இந்த ஆட்டத்தின் போதும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு உள்ளது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Post by அ.இராமநாதன் on Thu Sep 28, 2017 9:24 am

இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் அல்லது லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா அல்லது உமேஷ் யாதவ் அல்லது முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேம்ஸ் பவுல்க்னெர் அல்லது பேட் கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, கனே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்சன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27232
Points : 59650
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ‘வீறுநடை’ தொடருமா? 4-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum