"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Today at 1:16 pm

» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 1:14 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Today at 10:20 am

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:17 pm

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:16 pm

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:14 pm

» எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:13 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» துளி வெட்கம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:33 pm

» வம்பு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:29 pm

» விவசாயி
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:25 pm

» கானல் நீர்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:11 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:29 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:28 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
by eraeravi Mon Feb 20, 2017 6:25 pm

» சினிமா துளிகள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 3:24 pm

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

» கவிதை
by viji Thu Feb 16, 2017 3:13 pm

» நான் அம்மாவானேன்....!
by viji Thu Feb 16, 2017 3:12 pm

» ‘கவண்’ படத்தின் பாடல்கள்..!
by அ.இராமநாதன் Wed Feb 15, 2017 10:31 am

» உனக்கென்ன வேணும் சொல்லு...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:44 pm

» கொஞ்சி பேசிட வேணாம்...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:42 pm

» என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:40 pm

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue Feb 14, 2017 10:33 pm

» அன்புள்ள அம்மாவிற்கு!
by viji Tue Feb 14, 2017 6:06 pm

» என்னருகில் !!
by viji Tue Feb 14, 2017 5:48 pm

» எங்கே நான்?
by viji Tue Feb 14, 2017 5:39 pm

» நான் பார்த்த என் மழலைப்பருவம்
by viji Tue Feb 14, 2017 1:57 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon Feb 13, 2017 10:42 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்

View previous topic View next topic Go down

ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்

Post by eraeravi on Sun Aug 08, 2010 11:46 am

நூலின் பெயர் ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்
தொகுப்பாசிரியர் திரு.பாக்கியநாதன்
– நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா



வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள்

தொகுப்பாசிரியர் திரு.பாக்கியநாதன் கலை விளக்கு வெளியீடு


தங்க வயலில் விளைந்து ஆங்காங்கே சிதறிக்கிடந்த அற்புத நெல்மணிகளைச்
சேகரித்து பக்குவத்துடன் பதப்படுத்தி பாங்காய் சமைத்து உலகத் தமிழர்க்குப்
பாசத்துடன் பரிமாறியிருக்கும் பார்போற்றும் விருந்தே பாக்கியநாதனின்
ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள் எனும் தொகுப்பு நூல். சேரன் செங்குட்டுவன்
கை காட்ட கனக விசயர் கல்லெடுக்க கண்ணகி கற்பு தெய்வமானாள் அன்று: கலாநிதி
செங்குட்டுவன் கை காட்ட கனக வயலின் எழூத்துக்கள் கண்ணில்பட அயல்நாடு வாடி;
தமிடிர்கள் செய்த பாக்கியம் கலைமகளின் கரங்களில் இன்னுமோர் ஏடு?


கலைச் சுடரின் துணையோடு பாக்கியநாதன் நூற்கடலுள் மூழ்கி
நல்முத்தெடுத்து அவற்றை நளினமாய்த் தொடுத்து தமிழ்த் தாய்க்கு அணிவித்த
நவமாலையே இந்நூல். இலக்கிய கடலில் பயணி;ப்போரைத் தமிழெனும் கரைசேர்க்க
கலங்கரை விளக்காய் வழி காட்டியிருக்கிறது கலைவிளக்கு. பொதுவாக தொகுப்பு
நூலெனில் அது காசுமாலை போல ஒத்த வடிவமுடைய ஒருமித்த செய்திகளின் கோர்வையாக
இருக்கும். ஆனால் இத்தொகுப்பு நூலோ முன்னிலிருந்தும் உயரியதாக கவிதைகளும்
கட்டுரையுமாய் உண்மை நிகழ்வுகளும் உருப்படியான தத்துவங்களுமாய் விநோதச்
செய்திகளும் விலங்கியல் குறிப்புகளுமாய் அறிவுரைக் கொத்துக்களும் அறிவியல்
உண்மைகளுமாய் பொன் மொழிகளால் அலங்கரிக்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்
பெற்ற அட்டிகையாய் சுடர்விடுகின்றது.


ஆசிரியர் கையாண்டிருக்கின்ற வார்த்தைகள் சில நேரம் அம்புகளின்
கூர்மையாய் அல்லித் தடாகத்தின் குளுமையாய் அனல் மின் உலையின் வெம்மையாய்
பூந்தேனின் இனிமையாய் வானமிழ்தின் வளமையாய் உடற்பிணிக்கு மருந்தாகும்
உச்சி மலை மூலிகை போல் உள்ளப் பிணி நீக்கும் உயிர் மருந்தாயும் ஆகின்றன.


தங்கவயல் லோகிநாதன் ஒரு வேந்தனைப் போல் சிம்மாசனத்தில் வீற்றிருக்க
அவரது போர்ப்படைத் தளபதியாய் கவிதை கட்டுரை அதிசயச் செய்தி அறிவியல்
குறிப்பு எனும் நால்வகைப் படைகளை ஒழுங்குற நகர்த்திச் சென்று இலக்கியப்
போரில் தமிழனின் அறியாமையை வென்று போர்க்களத்திலிருந்து நம் இதயக்
களத்திற்குள் இடம் மாறுகிறார் தொகுப்பாசிரியர் பாக்கியநாதன்.


மகுடத்தில் பதிக்கப் பெற்ற மாணிக்கம் போல இந்நூலில் தொகுக்கப்பெற்ற
கதைகளி;ல் நீதிகள் உள்ளடங்கி மனித மனங்களில் ஒளியைப் புகுத்தி
இருளிலிருந்து அறிவுலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த தொகுப்பில் இடம்
பெறும் கவிதைகள் எல்லாம் அதீத அன்பின் அருமையை அகிலத் தலைவர்களின் அயரா
உழைப்பை உலக ஞானத்தி;ன் உட்பொருளை பண்பு நலன்களின் பரிமளத்தை மழலைச்
செல்வத்திற்கு மாதா அமுதூட்டும் பாங்குடன் புலம் பெயர்ந்த தமிழர்க்கு
புத்துணர்ச்சி அளிக்கும் விதமாய் எடுத்துக் கூறுகின்றன.


தத்துவம் சமூகம் விஞ்ஞானம் பொருளாதாரம் பெண்ணியம் அரசாங்கம் எனும்
அறுங்கோணத்தில் ஆராயப்பட்ட இந்நூலின் கட்டுரைகள் அனைத்தையும் அயல்கடல்
தாண்டி வசிக்கும் தமிழர் வாசித்துணரும் வேளையில் அது அவர்கள் வாழ்வை
புடமிட்டப் பொன்னாய் ஒளிரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.


இயற்கை அன்னையின் விந்தைகளும் செயற்கை மனம் கொண்ட மனிதனின்
நிந்தைகளும் விரவிய இத்தொகுப்பு நூல் அவலச் சுவையும் நகைச் சுவையும் அளவாக
கலக்கப் பெற்ற ஓர் அருமையான நூல் எனலாம். நன்செய் வயலில் விளைந்த
நற்கருப்பஞ்சாற்றின் இனிமையை மிஞ்சும் வண்ணமாக உள்ளது ஆசிரியரின்
மொழிநடைச் சிறப்பு.


தூக்கு மரத்தை தூசாக எண்ணிய கட்டபொம்மன் சாதாரண மனிதனாயிருந்து
சர்வாதிகாரியாக மாறிய ஹிட்லர் கண்டம் விட்டு கண்டம் தாவி விடுதலை வேள்வி
செய்த கரிபால்டி மலை குலைந்தாலும் மனம் குலையாத சத்ரபதி அரபு நாட்டோடு
அகிலத்தையே ஆண்ட நபிகள் நாயகம் என குவலயம் போற்றும்; தலைவர்களின் நீண்ட
நெடிய வரலாற்றை அழகுறச் சுருக்கி அற்புதமாய் தமிழர்க்கு தந்திருக்கிறார்
நூலாசிரியர்.


அறிவோடு ஆற்றல் புகழோடு பெருமை சொந்தத்தோடு சுற்றம் மரணத்தோடு மதி
இவற்றையெல்லாம் இழக்கச் செய்யும் கோபத்தை கொன்று விடு எனும் ஆசிரியரின்
அன்புக் கட்டளையை ஏற்று நடந்தோமானால் கவலைகள் நமக்கு நிரந்தரப் பகைவனாகி
நம்மிலிருந்து எட்டாத தூரம் பறந்து சென்றுவிடும்.


மேல்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களைப் புலவர்கள் தொகுக்க புரவலர்கள்
தொகுப்பித்தது அக்காலம்: இலக்கிய சித்தரின் எண்ணற்ற மலர்களை ஒரு வண்டினைப்
போல் நாடிச்சென்று தேனெடுத்து உலகத் தமிழர்களி;ன் நாவிற்கு உன்னத
களையூட்டியிருக்கும் திரு. பாக்கியநாதன் தமிழ் காக்கும் புரவலர் என்பதற்கு
ஒன்றினைந்த சிந்தனை முத்துக்கள் எனும் இத்தொகுப்பு நூல் ஒரு சிறந்த
சான்று! புதையலைக் கண்டறிந்து கலைமகள் கரம் சேர்க்கும் பாக்கியநாதன்
அவர்களின் இலக்கியப் பயணம் இனிதாகத் தொடரட்டும்!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2062
Points : 4622
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum