"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:12 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Today at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Today at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Today at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Today at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Today at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Today at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Today at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Today at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொடி வீரன் - விமர்சனம்

Go down

கொடி வீரன் - விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Fri Dec 15, 2017 6:45 am

[You must be registered and logged in to see this image.]

கதையின் கரு: “அநியாயங்களை தட்டிக் கேட்க அந்த 
கண்ணன் வராத இடத்தில் கூட, எங்க அண்ணன் வந்து
நிற்பான்” என்று நம்புகிற ஒரு தங்கையையும், 
அவளுடைய பாசக்கார அண்ணனையும் பற்றிய கதை.

ஒரு கிராமத்து கோவிலின் சாமியாடி, சசிகுமார். 
திருவிழாவில் சாமியாடி, பக்தர்களுக்கு அருள்வாக்கு 
சொல்கிறார். ஊர் ஜனங்கள் அனைவருக்கும் அருள்வாக்கு 
சொல்லும் அவரிடம், ஒரே தங்கை சனுஷாவுக்கும் 
அருள்வாக்கு சொல்லும்படி கேட்கிறார்கள்

. “உனக்கு திருமணம் ஆகும். ஆனால், அதில் ஒரு சிக்கல் 
வந்து சேரும்” என்று தங்கை சனுஷாவுக்கு அருள்வாக்கு 
சொல்கிறார், சசிகுமார்.

அதுபற்றி தங்கை சனுஷா கவலைப்படவில்லை என்றாலும், 
அவள் மீது உயிரை வைத்திருக்கும் அண்ணன் சசிகுமார் 
கவலைப்படுகிறார். நேர்மையான ஆர்.டி.ஓ. விதார்த்துக்கு 
சனுஷாவை மணமுடித்துக் கொடுக்கிறார், 

சசிகுமார். விதார்த்தின் உயிருக்கு குறி வைக்கிறார், 
அந்த ஊரின் ரவுடி பசுபதி. அவரிடம் இருந்து விதார்த்தை 
சசிகுமார் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது உணர்ச்சிகரமான 
மீதி கதை.

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சசிகுமாரின் தாய், கணவரின் 
கொடுமை தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து 
கொள்வது போல், ஒரு கனத்த துயரத்துடன் படம் ஆரம்பிக்கிறது. 

உயிர் பிரிவதற்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. 
தங்கையை பாசமூட்டி வளர்த்து ஆளாக்குகிறார், சசிகுமார்.

அந்த தங்கைக்கு மாப்பிள்ளை தேடும்போது, வில்லன்களுக்கு 
மேல் வில்லன்களாக நான்கு வில்லன்கள் குறுக்கே வருகிறார்கள். 
அவர்களில் ஒரு வில்லனின் தங்கை மகிமா நம்பியார் மீது 
சசிகுமார் காதல்வசப்படுகிறார். அவருடைய நல்ல குணங்களைப் 
பார்த்து மகிமா நம்பியாரும் காதல்வசப்படுகிறார்.

தங்கை மீது அண்ணன் கொண்ட அபரிமிதமான பாசமும், 
அதன் விளைவாக சசிகுமார் சந்திக்கும் மோதல்களும் 
உயிரோட்டமாக இருப்பதால், திரைக்கதை விறுவிறுப்பாக 
நகர்கிறது.



_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கொடி வீரன் - விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Fri Dec 15, 2017 6:45 am

சசிகுமார் காதல் காட்சிகளை விட, தங்கை மீது பாசத்தை 
வெளிப்படுத்தும் காட்சிகளிலும், வில்லன்களுடன் 
மோதுகிற சண்டை காட்சிகளிலும் கொடி வீரனாக நிமிர்ந்து 
நிற்கிறார். 

நண்பர் பாலசரவணனுடன் சேர்ந்து ‘காமெடி’ செய்யும் 
காட்சிகளில், கலகலப்பூட்டுகிறார். பசுபதியின் மிரட்டலுக்கு 
பயந்து மைத்துனர் விதார்த்தின் உயிரை காப்பாற்ற அவரை 
பின்தொடர்கிற காட்சியிலும், எரியும் நெருப்புக்குள் புகுந்து 
தங்கை சனுஷாவையும், அவருடைய கணவர் விதார்த்தையும் 
மீட்டு கொண்டு வரும் காட்சியிலும், ‘சூப்பர் ஹீரோ’வாக 
சசிகுமார் உயர்ந்து நிற்கிறார்.

மகிமா நம்பியார், கிராமத்து பெண்ணாக மனதில் பதிகிறார்.
அண்ணன் பசுபதிக்காக தலைமுடியை மொட்டையடித்துக்
கொள்கிற பூர்ணா நிறைய எதிர்பார்க்க வைக்கிறார். 
அவர் வில்லியாக கண்களை உருட்டுவது, எந்த பாதிப்பையும் 
ஏற்படுத்தவில்லை. அழகான தங்கையாக சனுஷா. 
படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகும் இவருடைய
சிரித்த முகம் கண்ணுக்குள் நிற்கிறது.

வழக்கமான நண்பர் கதாபாத்திரம் என்றாலும், 
பாலசரவணன் வசன உச்சரிப்பிலேயே சிரிக்க வைக்கிறார். 
ஆர்.டி.ஓ.வாக விதார்த், வழக்கறிஞராக பிரேம் ஆகிய 
இருவரும் ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகிறார்கள். 

நான்கு வில்லன்கள் என்றாலும், பதற வைப்பவர், பசுபதிதான்
. “முதலில் பதற்றப்பட வைப்பேன். அப்புறம் பயப்பட 
வைப்பேன். அடுத்து ஒரேயடியாக தூக்கி விடுவேன்” என்று 
சசிகுமாரை பயமுறுத்துகிற மிரட்டலான வில்லன், பசுபதி.

என்.ஆர்.ரகுந்தன் இசையில், பாடல்கள் மென்மையான 
ராகங்கள். பின்னணி இசை, கதையோட்டத்துக்கு வேகம் 
சேர்த்து இருக்கிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் கோவில் 
திருவிழா காட்சிகள், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

அண்ணன்-தங்கை பாசத்தை கருவாக கொண்ட படங்கள் 
நிறைய வந்திருந்தாலும், கதை சொன்ன விதத்தில் 
வித்தியாசம் காட்டியிருக்கிறார், டைரக்டர் முத்தையா. 

படத்தின் ஆரம்ப காட்சியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 
விடுகிறது. வெட்டு-குத்து காட்சிகள் அதிகம் என்றாலும்,
அதையே குடும்ப பின்னணியில் காட்சிப்படுத்தியிருப்பதால் 
கவனம் ஈர்க்கிறார், டைரக்டர் முத்தையா.
-
------------------------
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27136
Points : 59394
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum