"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!

Go down

காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!

Post by அ.இராமநாதன் on Fri Dec 15, 2017 6:55 pm

சரித்திர புகழ் ராணிப்பேட்டையில் ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா 
நிதியுதவி நடுநிலைப் பள்ளி, இன்னொரு சரித்திரம் 
படைத்திருக்கிறது. சமீபத்தில் ராணிப்பேட்டை நகரில் நடந்த 
அறிவியல் கண்காட்சியில் இப்பள்ளியில் படிக்கும் மாணவன் 
சரவணன் கொடுத்த சிறு யோசனையின் செயல்வடிவம், 
இப்பள்ளிக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சியின் வெற்றி அங்கீகரிக்கப்பட்டு, செயல் 
பாட்டுக்கு வருமாயின் காது கேட்க, வாய்பேச முடியாதவர்கள் 
பாடல்களையும், இசையையும் அதிர்வலைகள் மூலம் உணர்ந்து 
ரசிக்க முடியும் என்கிற இப்பள்ளி மாணவன் சரவணனிடம் 
பேசினோம்.

எங்கள் பள்ளியில் வாய்பேச முடியாத, செவித்திறன் இல்லாதவர் 
ஒன்றாம் வகுப்பு மாணவி தமிழ்செல்வி, ஒருநாள் பள்ளியில் 
நடந்த விழாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 

ஆனால், தமிழ்ச் செல்வியால் எந்த சப்தத்தையும் கேட்க முடியாது. 
அப்படிப்பட்ட தமிழ்ச்செல்வியின் முகத்தில் ஒரு பிரகாசம். 
இந்த சப்தங்களை அவர் உணர்வது மாதிரி அவர் முகத்தில்
சந்தோஷம் தெரிந்தது.

அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியின்மீது முகம் 
சாய்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் 
முகத்தில் ஏதோ ஓர் உறுப்பு அந்த இசையை உணரச் செய்கிறது 
என்பதை அறிந்த நான் ஆசிரியர்களிடம் சொன்னேன்.

அறிவியல் ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் சாரும் அதைக் 
கவனித்தார். பட்டென்று பாடலை அவர் நிறுத்தச் சொல்ல அந்தப் 
பெண்ணின் முகத்தில் ஏமாற்றம், எங்களுக்கு விஷயம் புரிந்தது 
என்றார் மாணவன் சரவணன்.

அறிவியல் ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், 
மறுபடி மறுபடி அந்தப் பெண்ணைப் பாடல் கேட்க வைத்தோம். 
அந்த பெண்ணின் பற்கள் ஸ்பீக்கரில் படும்போது ஒலி 
அலைகளினால் ஏற்படும் அதிர்வலைகளை அவர் உணர்கிறார் 
எனப் புரிந்தது. 

உடனடியாக ஆராய்ச்சியில் இறங்கினோம். பென் டிரைவ் 
பிளேயர் ஒன்றை வாங்கி அதன் மூலம் பாடலை ஒலிபரப்பினோம்.
 ஆனால், அவுட்புட்டில் அந்த பாடலை ஸ்பீக்கரில் கனெக்ட் 
செய்யாமல் சிறு சுழலும் மோட்டார் ஒன்றில் இணைத்தோம்.

இப்பொழுது அவுட்புட்டில் வெளியாகும் இசையும் பாடலும் 
டிஜிட்டல் லைட்டிங்கில் ஏறி ஏறி இறங்குமே அதுபோல 
மோட்டரில் ஒலி அலைகள் ஏறி ஏறி இறங்க, அதன் வேகமும், 
ஏறி ஏறி இறங்கியது.

விளைவு மோட்டார் அதற்கேற்றாற்போல் வேகம் குறைந்தும், 
அதிகரித்தும் சுழல்கிறது. அதாவது மின்விசிறி வேகம் குறைந்தும்,
 அதிகரித்தும் இயங்குவதுபோல் சுழல்கிறது. 
அதில் ஒலி அலைகளை அதிர்வலைகளாக மாற்றி அந்த அதிர்வை 
உணரச் செய்தோம்.

அந்த மோட்டாரில் உள்ள சுழலும் சிறுகம்பியைத் 
தமிழ்ச்செல்வியின் பற்களில் படும்படி நேரடியாக வைக்காமல் 
பஞ்சை வைத்து லேசாகக் கடிக்கச் சொல்லி, பாடலை 
ஒலிபரப்பினோம். அந்தக் குழந்தையின் முகத்தில் ஆயிரம் 
வாட்ஸ் பல்பின் பிரகாசம் தெரிந்தது.

பார்வையற்றவர்கள் ப்ரெய்லி எழுத்துக்களை உணர்வது போல், 
இவரும் இசையை உணரத் தொடங்கினார். இந்தச் சிறு 
ஆராய்ச்சிதான் ராணிப்பேட்டை நகரில் நடந்த அறிவியல் 
கண்காட்சியில் பாராட்டு பெற்றது. 

இது மேலும் எளிமை மற்று நவீனப்படுத்தப்பட்டு மாவட்ட 
அறிவியல் கண்காட்சியில் பங்குபெறச் செய்ய உள்ளோம்.

இதற்கான அதிகபட்ச செலவு ஐநூறு ரூபாய் ஆகிறது. 
இதை வெகுவாகக் குறைக்க ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

இந்தக் கண்டுபிடிப்பு 100 மடங்கு வெற்றி பெருமாயின் கேட்கும்
 திறனில்லாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் 
என்பதில் ஐயமில்லை!

1960ம் ஆண்டு கண்ணையா நாயுடுவால் தொடங்கப்பட்ட
 இப்பள்ளி, பொன்விழா கொண்டாடி வைர விழா நோக்கி 
வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கண்ணைய்யா 
நாயுடுவின் பேத்தி ஜெய்ஸ்ரீ கோதைதான் இப்பள்ளியின்
 நிர்வாகியாகவும், தலைமை ஆசிரியராகவும் உள்ளார். 

அவரிடம் பேசினோம்.
மாணவர்களின் ஆர்வம், உற்சாகம், பெற்றோர்களின் ஊக்கம்,
 இங்குள்ள ஆசிரியர்களின் அற்பணிப்பு இவையே, மாணவர்கள் 
சாதிக்க உறுதுணையாய் நிற்கின்றன என்றார்.
-
--------------------------------

- அன்பு வேலாயுதம்
கல்கி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum