"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Today at 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Today at 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Today at 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Today at 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Today at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கூகுள் கோல்மால்

Go down

கூகுள் கோல்மால்

Post by அ.இராமநாதன் on Sat Jan 27, 2018 12:26 am

மேகி என்றால் நூடுல்ஸ் என்று புரிந்து கொள்வதை விட 
சுலபமானது கூகுளை சர்ச் எஞ்சினாக அறிந்து வைத்திருப்பது. 

தனது சூப்பர் அல்காரிதத்தின் மூலம் ரூ.7 ஆயிரத்து 208 கோடியை
 கடந்த ஆண்டு மட்டும் பேங்க் பேலன்சில் கெத்தாக ஏற்றியுள்ளது 
கூகுள். முதலில் சிம்பிளாக சர்ச் எஞ்சின், இமெயில் எனத் தொடங்கி
 யூ டியூப், மேப்ஸ், ஷாப்பிங், ஆண்ட்ராய்ட் ஓஎஸ் என வலுவாக 
விழுதுகளை ஊன்றி இணைய விளம்பர மார்க்கெட்டை 70% தன் 
கையில் வைத்துள்ளது.

 2016ம் ஆண்டுப்படி கூகுள் (79.4 பில்லியன்கள்), ஃபேஸ்புக்
 (26.9 பில்லியன்கள்) சம்பாதித்து, விரைவில் டைம்ஸ் குழுமத்தை 
வருமானத்தில் பின்தள்ளவிருக்கிறது. செய்தி நிறுவனங்களின் 
செய்திகளைத் தொகுத்து, லிஸ்ட்படி முன் பின்னாகக் காட்டிய
 மார்க்கெட்டிங் திறமைதான் இதற்குக் காரணம் என்றால் பலரும் 
நம்ப மாட்டார்கள். 
-
--------------------------------------


Last edited by அ.இராமநாதன் on Sat Jan 27, 2018 12:27 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26283
Points : 57371
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கூகுள் கோல்மால்

Post by அ.இராமநாதன் on Sat Jan 27, 2018 12:26 am

திறந்திடு சீசேம்!
-
பார்க்க விரும்பும் சினிமா, வாசிக்கத் தேடும் புத்தகம், 
அறிவுத்தேடலுக்கான தகவல்கள் என ஒருவர் டைப் செய்யும் 
தகவல்களிலிருந்தே அவரை அனுமானித்து, இடத்தை 
ஜிபிஎஸ் மூலம் அறிந்து விளம்பரங்களை வெளியிடுவதே 
கூகுளின் வெற்றி ரகசியம். 

இலவச ஆண்ட்ராய்ட் ஓஎஸ் மூலம் 80 சதவிகித போன்கள் 
உலகமெங்கும் இயக்கப்படுவது கூகுளின் ஃப்யூச்சர் வெற்றிக்கு 
அடித்தளம். கூகுள் நியூஸ், உலகிலுள்ள அனைத்து செய்தி 
நிறுவனங்களிடமிருந்து செய்திகளைப் பெற்று பயனர்களின் 
விருப்பத்துக்கு ஏற்ப லிஸ்ட் போட்டு அடுக்கித் தருகிறது. 

இதில் வரும் பாப் அப் விளம்பரங்களுக்கான கட்டணத்தை
 கூகுள் மட்டுமே தன்னிச்சையாக தீர்மானிப்பதால், செய்தியை
 உருவாக்கும் நிறுவனங்களின் பங்கேற்பு கீழே தள்ளப்படுகிறது 
என்ற சர்ச்சையும் உள்ளது.

சர்ச்சை சங்கடங்கள்!
--
‘‘கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய பெரும் கார்ப்பரேட் 
நிறுவனங்கள் விதிகளை மீறி வணிகம் செய்வதை இயல்பானதாக 
மாற்றிக் கொண்டுவிட்டன...’’ என்கிறார் IDIA நிறுவன 
இயக்குநரான சாம்நாத் பஷீர். 

2017ம் ஆண்டின் டாப் 30 நிறுவனங்களில் முதலிடம் பெற்ற 
நிறுவனமான ஆல்பபெட் இன்க், கூகுளின் தாய் நிறுவனம். 2012 - 16ம் 
ஆண்டில் கூகுளின் வளர்ச்சி 64%. இதற்கடுத்த இடத்தில் ஃபேஸ்புக் 
உள்ளது. ‘‘இவை இரண்டும் மார்க்கெட்டிங் மூலம் தனது வருவாயில் 
பெரும்பகுதியைப் பெற்றாலும் அதனை உருவாக்கிய கலைஞர்களுக்கு 
மிகக் குறைவான தொகையையே அளிக்கிறது...’’ என்கிறார் 
பஸ்ஃபீட் தளத்தின் இயக்குநரான ஜோனா பரெட்டி.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26283
Points : 57371
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கூகுள் கோல்மால்

Post by அ.இராமநாதன் on Sat Jan 27, 2018 12:26 am

கூகுள் தந்திரங்கள்!
---
‘‘புத்திசாலித்தனமான முறையில் தனது வியாபார எல்லைகளை 
விரிவாக்குவதோடு, தனது போட்டியாளர்களுக்குமான விதிகளையும்,
 தானே உருவாக்கி வருகிறது...’’ என ஒரே வார்த்தையில் கூகுளின் 
தந்திரங்களை புட்டு வைக்கிறார் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தைச் 
சேர்ந்த கௌதம் சின்கா. 

போட்டிகளை அழித்து தனிப்பெரும் ராஜாவாக கோலோச்ச விரும்பும் 
கூகுளின் செயல்பாடு பலரையும் ஈர்ப்பதாயில்லை. 

யூ டியூபில் வீடியோ தொடங்கும் முன் ஒளிபரப்பாகும் இன்ஸ்ட்ரீம் 
முறைக்காக 20 லட்சம், வீடியோ ஒளிபரப்பும்போது கீழே வரும் 
விளம்பரத்திற்கு 10 லட்சம் என கூகுள் தோராயத் தொகையாக 
வசூலிக்கிறது. இதில் ஸ்கிப் வசதி உண்டு என்பதுதான் விளம்பர
 நிறுவனங்களின் கடுகடுப்புக்கு காரணம். 

ஆனால், ‘‘யூ டியூப் என்பது டிஜிட்டல் ரியல் எஸ்டேட் போல. 
பத்து நாட்கள் விளம்பரம் ஒளிபரப்பினாலும் அது சென்று சேரும் 
மக்கள் பரப்பு அதிகம்...’’ என்கிறார் விளம்பரத்துறை சார்ந்த 
அதிகாரி ஒருவர். 

வரியும் தண்டனை நிமித்தங்களும்!
---
2017ம் ஆண்டு ஆல்பபெட் இன்க், 27.5 பில்லியன் டாலர்களை 
தனது Adwords மூலம் சம்பாதித்துள்ளது. இதுதவிர உப 
வருவாயை ப்ளே ஸ்டோர், ஆப்ஸ், கூகுள் ஃபைபர் ஆகிய 
திட்டங்கள் தருகின்றன. 

பொருட்களின் விலை பற்றி ஒப்பீடுகளை ஃபவுண்டெம் என்ற 
தளத்திலிருந்து அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தியது உள்ளிட்ட 
குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய யூனியனில் கடந்தாண்டு 
ஜூன் மாதம் 2.8 பில்லியன் டாலர்களை அபராதமாகக் கட்டியது 
கூகுள் நிறுவனம்.

 2015ம் ஆண்டு அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் 
மக்களவையில் போட்டி ஆணையத்திற்கு கூகுள் மீது வந்த 
புகார்களை விசாரிக்க ஆணையிட்டார். 
ஆயினும் கூகுள் இதற்கு ஒத்துழைக்க மறுத்தது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26283
Points : 57371
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கூகுள் கோல்மால்

Post by அ.இராமநாதன் on Sat Jan 27, 2018 12:27 am

2017ம் ஆண்டு அக்டோபர் 25 அன்று பெங்களூரு ஐடி துறை (ITAT) 
தொடர்ந்த வழக்கில் கூகுளின் ஆறு அப்பீல் மனுக்களை தள்ளுபடி
செய்த உயர்நீதிமன்றம், 2007 - 2013 வரையிலான ரூ.1,457 கோடிக்கான 
வரித்தொகையைக் கட்டுமாறு ஆணையிட்டது. 

அமெரிக்காவிலுள்ள கூகுள் இன்டர்நேஷனலின் மானிய உதவி 
பெறும் துணை நிறுவனமே கூகுள் இந்தியா. 
இந்நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்த வருமானத்தை கூகுள் 
அயர்லாந்துக்கு அனுப்பிய வகையில் அரசுக்கு கட்டவேண்டிய
 வரியை கட்டாததுதான் பிரச்னைக்கு காரணம். 


கூகுள் இதில் முக்கிய வாதமாக முன்வைத்தது, தான்
 இந்தியாவில் குர்கான், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு 
ஆகிய இடங்களில் செயல்படுத்தும் அலுவலகங்கள் 
நிரந்தரமானவை அல்ல என்பது. 

மேலும் இந்தியா - அயர்லாந்து நாடுகளுக்கிடையேயான 
இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தையும் (DTAA) வரி 
கட்டாததற்கு கூகுள் துணைக்கு அழைத்தது. ஆனால், நீதிமன்றம் 
இதனை ஏற்கவில்லை. ‘‘கூகுள் Adwords என்ற புரோகிராமைப் 
பயன்படுத்தி இங்குள்ள பயனர்களின் தகவல்களைப் 
பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது. கூகுள் என்பதை 
பிராண்டாக இந்தியாவில் பயன்படுத்தி வரும் லாபத்தை ராயல்டி
 என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்து அயர்லாந்துக்கு அனுப்பி
விடுகிறது. 

இதற்கு ஐடி சட்டமான 9(1)(Vi) சட்டத்தையும் சாட்சியாக்குகிறது...’’ 
என்கிறார் IDIA அமைப்பின் நிறுவனவரான சாம்நாத் பஷீர்.
 நிதி மசோதா 2016ன் படி டிஜிட்டல் இணைய நிறுவனங்களுக்கு
 6% மட்டுமே வரி விதிக்கலாம். இந்தியாவில் ஆபீஸ் உள்ள 
கம்பெனிகளைவிட அலுவலகமற்ற ஃபாரீன் நிறுவனங்களுக்கே 
வரிச்சலுகை அதிகம். 

‘‘இந்தியாவில் கூகுள் விரைவில் டேட்டா பண்ணைகளை 
அமைக்கவிருக்கிறது. அப்போது டெக் உலகின் ரூல்ஸ் அனைத்தும் 
மாறும்...’’என நம்பிக்கையோடு பேசுகிறார் ஹைதராபாத் 
பேராசிரியர் பிரசாந்த் ரெட்டி.
-
----------------------------

- ச.அன்பரசு
குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26283
Points : 57371
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கூகுள் கோல்மால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum