"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

Go down

சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

Post by கலைநிலா on Tue Jan 04, 2011 3:33 am

செய்தி: சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!
மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...
இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.
‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்
கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘வலுவில்லாத சினைமு
ட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.

சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.

சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங் களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி. வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!

நன்றி : தமிழக அரசியல்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

Post by கவிக்காதலன் on Tue Jan 04, 2011 8:33 pm

வருத்தப்பட வேண்டிய செய்தி...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum