"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு

Go down

மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு

Post by அ.இராமநாதன் on Thu Feb 15, 2018 2:41 pm

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்களில் பயணிகளுக்கான முன்பதிவு இருக்கை, படுக்கை குறித்த பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களிலும் முன்பதிவு பட்டியல் ஒட்டப்டாது. ஆனால், முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை தொடர வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கையாக இருக்கிறது.ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவையும் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல்முறைக்கு மாறும் முயற்சியிலும் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.


இதற்காக முன்பதிவு பட்டியல் குறித்த அறிக்கை ஒட்டுவதை கடந்த 3 மாதங்களாக சோதனை முயற்சியாக சென்னை சென்ட்ரல், புதுடெல்லி நிஜாமுதீன், மும்பை சென்ட்ரல், ஹவரா ரயில் நிலையங்கள் செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமானதையடுத்து, இப்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இதன்படி, மார்ச் 1-ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஏ1, ஏ மற்றும் பி கிரேடு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு குறித்த அறிக்கை அடுத்த 6 மாதங்களுக்கு ஒட்டப்படாது என கடந்த 13ம்தேதி ரயில்வே துறைக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதன் மூலம், எக்ஸ்பிரஸ், மெயில், சதாப்தி, ஹம்சபர், துரந்தோ, ராஜ்தானி, கரீப் ராத் எஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாமல் இயக்கப்படும். அதற்கு பதிலாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.


இந்த திட்டம் மார்ச் 1-ம் தேதி முதல் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டாலும், தெற்கு ரயில்வே சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில ரயில்களில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் உள்ள 40 ரயில் நிலையங்களில் ஏ1 ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை ஆகியவை உள்ளன. மற்றவை ஏ மற்றும் பி பிரிவு ரயில்நிலையங்களாகும். இந்தஅனைத்து ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் இனி முன்பதிவு சார்ட் ஒட்டப்படாது.


ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.


ஐஆர்சிடிசி இணையதளம், மொபைல் ஆப்ஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு குறித்த அறிவிப்பும், இருக்கை, அல்லது படுக்கை எண் குறித்த விவரம் வரும்.


ஆனால், ரயில் நிலையங்களில் சென்று முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்படுகிறது, இருக்கை எண், படுக்கை எண் ஆகியவை அனுப்பப்படாது. இதனால், டிக்கெட் பரிசோதகர் பின்னால் பயணிகள் அலைந்து கொண்டு இருக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.


பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கு இன்னும் மொபைல் போன் இயக்குவதிலும், எஸ்எம்எஸ், பார்ப்பதிலும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கும் போது, இந்த முறை அவர்களுக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தும் என்று பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25700
Points : 55978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum