"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Go down

பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 8:35 am

காதலை விரும்பாதவர்களுக்கு இந்தக் கதை பிடிக்காது. 

Hardcore Reality மற்றும் Practical Life குறித்துப் பேசுபவர்கள் இந்தக் கதையை வெறுப்பார்கள். 
இந்தக் கதையில் எந்த மரங்களும், கிளைகளும், இலைகளும், மிருகங்களும், பறவைகளும் வதைக்கப்படவில்லை. 
நன்றி:
காதல்.
உலகம் முழுக்க இருக்கும் காதலர்கள். 
சாக்லேட்டின் மணம் அந்த அறை முழுக்க பரவியிருந்தது. கொதிக்க, கொதிக்க இருந்த அந்த சாக்லேட் திரவத்தை, அந்த டிரேயில் அவன் அப்படியே ஊற்றினான். ஊற்றப்பட்ட அந்த சாக்லேட் திரவம் இன்னும் சில நிமிடங்களில் இறுகி கெட்டியாகிவிடும். அதற்குள் அவன் அதில் வரையத் தொடங்கினான். அவன் வேகமாக வரைவதைப் பார்க்கும்போது ஏதோ கிறுக்குவதுபோலத்தான் தெரிகிறது. படு வேகமாகச் செயல்படுகிறான். சில நிமிடங்களில் முடித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான். சற்று நெருங்கிப் போய், என்ன வரைந்திருக்கிறான் என்பதை எட்டிப் பார்ப்போம்.
ஆச்சர்யமாக இருக்கிறது... அவ்வளவு அழகான மரம். அடர்த்தியான இலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, கண்டிப்பாக 'ஓக் மரம்' (Oak Tree) தான். அதன் இலைகளை இதய வடிவில் வடிவமைத்திருந்தான். மொத்தமாக அந்த மரத்தின் கிளைகளையும் இலைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, அது அப்படியான ஓர் இதய வடிவில்தான் இருக்கிறது. இதோ, வேகமாக ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடியே அவன் வருகிறான். விலகிக்கொள்வோம். விலகி நின்று அவன் செய்வதைப் பார்ப்போம்.
கையில் சின்ன பெட்டியோடு வந்தான். அந்தப் பெட்டி, யானையின் சாணி நிறத்தில் இருந்தது. புதிதாகப் போடப்பட்ட யானைச் சாணியின் நிறமல்ல அது. நாளாகிக் காய்ந்துபோன சாணியின் நிறம் அந்தப் பெட்டி. அந்த அழகான மரத்தை அதில் எடுத்து பத்திரமாக வைத்தான். வெதுவெதுப்பாக இருந்தது அந்த அறை. ஓர் ஓரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கறுப்பு நிற குளிர் கோட்டை எடுத்து மாட்டினான். அந்தக் கோட்டை எடுக்கும்போது, பக்கத்தில் இருந்த கேலண்டர் கண்ணில் படுகிறது. அதில், வெள்ளிக்கிழமை - பிப்ரவரி 14, 1890 என்று இருந்தது. கதவைத் திறந்து நடக்கத் தொடங்கினான். அவன், வேகத்தில் அவனை நாம் பின் தொடர்வது சற்று கடினம்தான். காரணம் வேகம் மட்டுமல்ல, தாங்க முடியாத அந்தக் குளிர்தான். இருந்தும் அவனைத் தொடரலாம். 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 8:35 am

அத்தனை மகிழ்ச்சியோடு நடந்து போய்க்கொண்டிருந்தான். இடையே இருந்த அந்தப் பூ மார்க்கெட்டிற்குள் நுழைந்தான். அன்று, காதலர் தினம் ஆதலால், ரோஜாக்கள் அதிகமிருந்தன. அங்கு, வேகமாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. குறிப்பாக ஒரு கடையில், அந்தப் பெண்ணின் கைகள் அத்தனை வேகமாக ரோஜாக்களை எடுத்து, முட்கள் நிறைந்த அதன் தண்டுகளை வெட்டிக்கொண்டிருந்தன. அதுவல்ல ஆச்சர்யம். அவளின் பார்வை ரோஜாவில் இல்லை. தொட்டு உணர்ந்தபடியே அவள் அதைச் செய்துகொண்டிருந்தாள். இன்னும் அவளை உற்று நோக்கினால் தெரியும் அவள் பார்வையற்றவள் என்பது. அவளிடம்தான் இவன் போய் நின்றான்.
"ஹே ஜூலியா..."
"ஹே வில்... நீயா? அந்த பட்டர்ஃப்ளை சாக்லேட் வச்சிருக்கியா?" அவள் வேலையின் வேகம் துளியளவும் குறையவில்லை. 
தன் கோட் பாக்கெட்டிலிருந்து ஒரு கவரில் இருந்த சாக்லேட்டை எடுத்து, அங்கிருந்த பெட்டியின்மீது வைத்தான்.
"எனக்குக் கொஞ்சம் ரோஸ் வேணும்!"
"ஹா ஹா ஹா... நிஜமாத்தான் கேக்குறியா? உனக்குத்தானா?"
"ஆமா ஜூலியா...சீக்கிரம் கொடு. நான் வந்து கதை சொல்றேன்." அவளை அவசரப்படுத்தினான். அவள் கொடுத்த ரோஜாவை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினான். சரியாக மார்க்கெட்டை விட்டு வெளியேறும் சமயம், அவள் தன் அப்பாவோடு உள்ளே நுழைவதைப் பார்த்து அப்படியே நின்றான். 
பனியினால் வெடித்திருந்த உதட்டை விரித்து அழகாகச் சிரித்தான். அவள் சிரிக்கவில்லை. முகம் சிவந்திருந்தது. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இவனைக் கடந்த அந்த ஒரு நொடியில், அவள் ஏதோ சொன்னது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
"நம் ஓக் மரத்திற்கு அருகே போய் பாரு." 
வேகமாக ஓடினான். நம்மால் நிச்சயம் அவன் வேகத்திற்கு ஓட முடியாது. இருந்தும் அவனைப் பார்வையிலிருந்து விட்டுவிடாதபடியான தூரத்திலேயே தொடர்வோம்.
சாலையை விட்டு ஒதுங்கி, அந்த அழகான ஓக் மரத்தின் அருகே சென்றான். 3 மீட்டர் உயரம் அந்த மரத்தில் ஏறினான். அங்கிருந்த பொந்தில் ஒரு கடிதம் கிடந்தது. பிரித்துப் பார்த்தான்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 8:36 am

"நம் காதலை அப்பா ஒப்புக் கொள்ளவில்லை. உன்னைப் பார்க்கக் கூடாது என்று சத்தியம் வாங்கியிருக்கிறார். ஆனால், அவர் அவ்வளவு கொடியவர் இல்லை. சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை இந்த மரத்தின் வழி கடிதங்களில் பேசலாம். 
                                                                                                                                                                      - இப்படிக்கு "உன் காதல்" மின்னா ஜெல். 

அவனுக்குள் என்னென்னவோ தோன்றின. என்ன செய்வதெனத் தெரியவில்லை. அமைதியாக அந்த சாக்லேட்டையும், ரோஜாவை அந்தப் பொந்திற்குள் வைத்தான். அன்று முதல் அவர்களின் காதல் அந்த மரத்தின் வழியே வளர்ந்தது. ஒரு வருடத்தில், மின்னாவின் அப்பா இவர்களின் கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார். தங்கள் காதல் வளர்ந்த அந்த ஓக் மரத்தின் அடியிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். அன்று, இந்தக் காதல் கதை எல்லைகள் தாண்டி பிரபலமடைந்தது. காதல் கதையோடு சேர்ந்து அந்த ஓக் மரமும் பிரபலமடைந்தது. 
அன்று முதல் அந்த ஊரைச் சேர்ந்த பல ஆண்களும் பெண்களும் கடிதங்களை அந்த மரத்தில் வைக்கத் தொடங்கினார்கள். பல காதல் கதைகள் தோன்றின. பல, திருமணத்தில் சென்று முடிந்தன. 1927-யில் ஜெர்மன் அரசாங்கம், இந்த மரத்திற்கு என தனி முகவரி, பின்கோடு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு தபால்காரரையும் (PostMan) நியமித்தது. அன்று முதல் உலகம் முழுவதிலுமிருந்து காதல் கடிதங்கள் அங்கு வரத் தொடங்கின. யார் வேண்டுமென்றாலும் மரத்தில் ஏறி அந்தக் கடிதங்களைப் படிக்கலாம். தங்களுக்குப் பிடித்திருந்தால், அந்தக் கடிதத்திற்கு பதில் சொல்லலாம். இல்லையென்றால், அதைப் பத்திரமாக அந்தப் பொந்திலேயே வைத்துவிட வேண்டும்.
மரத்தில் ஏறி கடிதங்களைப் படிப்பது சிரமமாக இருந்ததால், அங்கு மூன்று மீட்டர் உயரத்திற்கு ஒரு மர ஏணி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 72 வயதிலிருக்கும் கார்ல் ஹெயின்ஸ் மார்டென்ஸ் (Karl Heinz Martens) என்பவர்தான் இந்த மரத்திற்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தபால்காரராக இருந்தார். இதுவரை இந்தக் கடிதங்களின்மூலம் 100 ஜோடிகளுக்கும் அதிகமானோர் கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார் மார்டென்ஸ். 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Post by அ.இராமநாதன் on Tue Mar 06, 2018 8:38 am

1958ல் ராணுவ வீரரான பீட்டர் பம்ப் (Peter Pump) மரத்தின்மீது ஏறினார். குவிந்துகிடந்த கடிதங்களிலிருந்து ஒன்றை எடுத்துப் படித்தார். பெயர், முகவரியைத் தவிர அதில் எதுவுமில்லை. "வணக்கம் மிஸ். மரிட்டா" என்று அந்தப் பெண்ணிற்கு முதல் கடிதத்தை அனுப்பினார். மரிட்டாவிற்கு ஆச்சர்யம். அவர் மரத்திற்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பவில்லை. அவரின் தோழிகள் செய்த சேட்டை அது. இருந்தும் பீட்டருக்கு பதில் எழுதினார். இப்படியாக மொத்தம் 40 கடிதங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். இறுதியில் அந்தக் காதல், கல்யாணத்தில் முடிந்தது. 1961ல் கல்யாணம் செய்து, இன்றும்  மகிழ்ச்சியோடும்  பெரும் காதலோடும் வாழ்ந்துவருகின்றனர். 
காதல் கடிதங்களின் வழி தூதுவராக இருந்த மார்டென்ஸுக்கும் அந்த மரம் ஒரு காதலைப் பரிசளித்தது. 1989-ல் ஒரு ஜெர்மானிய டி.வி நிறுவனம் மார்டென்ஸை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில், அவரிடம் இப்படியொரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
"இந்தக் காதல் கதைகள் இருக்கட்டும். உங்களின் காதல் கதையைச் சொல்லுங்கள்?"
"ஹா...ஹா...ஹா... என் வாழ்வில் காதலும் இல்லை. காதலியும் இல்லை. நான் அதை அனுபவிக்கும் அளவிற்கு வரம் வாங்கியவன் அல்ல."
டி.வி-யில் பேட்டி ஒளிபரப்பாகி சில நாள்கள் ஆகியிருக்கும். வழக்கம்போல 'காதல் மரத்திற்கு' வந்த கடிதங்களைக் கொடுக்க மரத்தின்மீது ஏறினார். அங்கு ஒரு கடிதம் இருப்பதைக் கண்டார்.
பெறுநர்: 
காதல் கடிதங்களை சுமக்கும் காதலும், காதலியும் அற்ற தபால்காரருக்கு. 
நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நானும் உங்களைப் போலதான். காதலும், காதலனும் வாய்க்கும் வரத்தைப் பெறாதவள்.
கடிதத்தைப் படித்து முடித்த நொடி முடிவுசெய்துவிட்டார் மார்டென்ஸ். ரெனெட்டை (Renate) சந்தித்தார். காதலர்கள் ஆயினர். 1994ல் கல்யாணம் செய்துகொண்டனர். இதோ, இன்று வரை காதலைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
காதலர்களைச் சேர்த்துவைத்து காதலைக் கொண்டாடிய ஓக் மரத்திற்கும் கல்யாணம் செய்துவைத்தார்கள். அதனால், காதல் பாக்கியம் பெற்றவர்கள்.
 2009ல் 500 வயதான ஓக் மரத்திற்கும் அதனிடமிருந்து 503 கி.மீ தூரத்தில் இருந்த 200 வயதான செஸ்ட் மரத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சில நாள்களில் திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால், அந்தத் திருமணம் 6 ஆண்டுகள்தான் நீடித்தது. வயது முதிர்வின் காரணமாக செஸ்ட்நெட் இறந்துவிட, இன்று கணவனின்றி தனியே தவித்துவருகிறாள் ஓக். 
ஆரோக்கியமாகத்தான் இருந்தாள் ஓக். ஆனால், வயது மூப்பின் காரணமாக தளர்ந்துவிட்டாள். சில மாதங்களுக்குப் பூஞ்சைத் தொற்று (Fungal Infection) ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டாள். இப்போது தளர்ந்துபோயிருக்கும் அவளின் கிளைகளை எல்லாம் மருத்துவம் பார்த்து ஓரளவிற்குச் சீர்செய்து வைத்திருக்கிறார்கள். இருந்தும் அவளின் உடல்நிலை மோசமாகத்தான் உள்ளது. 
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓக் மரத்திற்கான தபால்காரராகப் பணியாற்றிவிட்டு, ஓய்வுபெற்றிருக்கும் மார்டென்ஸ் லுகிமியா, நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தும் ஓக் மீதான காதல் அவருக்கு குறைந்துவிடவில்லை. உடலின் எலும்புகள் தளர்ந்து விழப்போனாலும், அவ்வப்போது அந்த மர ஏணியை உறுதியாகத் தன் கைகளில் பிடித்தபடி மரத்தில் ஏறத்தான் செய்கிறார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் பெரும் அன்போடு அவரை அரவணைத்துக்கொள்கிறாள் ஓக். 
-
இரா.கலைச்செல்வன்
நன்றி- விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பெயர் : ஓக் ; நாடு : ஜெர்மனி; வயது: 500; சேவை: காதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum