"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi on Sun Mar 18, 2018 11:02 pm

தனிமையில் வாடும் பொம்மை !

நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் !


[size=13]நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 
[/size]

வெளியீடு :
அன்னை ராசேசுவரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-600 011.  பக்கம் 64, விலை : ரூ. 50.

******
      ‘தனிமையில் வாடும் பொம்மை’ என்ற தலைப்பைப் படித்தவுடன் குழந்தையின் நினைவு வந்து விடுகிறது.  நூல் ஆசிரியர் கவிஞர் இராமசெயம் அவர்கள் இந்நூலை வாழ்க்கை இணை சீதா மரகதம் மகள் இராம. சுடர்க்கொடிக்கு காணிக்கையாக்கி இருப்பது சிறப்பு.

      முனைவர் ஹைக்கூ கவிஞர் ம. ரமேஷ் அவர்களின் அணிந்துரை நன்று.  ஹைக்கூ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளிவந்துள்ள ஹைக்கூ நூல்.

      பெய்யும் மழை
      ஏக்கத்தில் குழந்தை
      கட்டிய மணல் வீடு!      குழந்தையின் குழந்தை மனசை படம்பிடித்துக் காட்டிடும் ஹைக்கூ நன்று.

      பூவாய் மாற்றியது
      தோள் மீது அமர்ந்து என்னை
      வண்ணத்துப் பூச்சி!      வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும். ஆனால் அதுவாக வந்து தோள் மீது அமர்ந்தால் பரவசம்.  பூவாக மனமும் மாறி விடும் என்பது உண்மை தான்!

      மெல்ல நகரும் பூனை
      பழகிக் கொண்டது
      பின்னால் நகரும் எலி!      பூனையையும் எலியையும் காட்சிப்படுத்தும் விதமாக ரசிக்கும்படியான எள்ளல் சுவையுடன் கூடிய ஹைக்கூ நன்று பாராட்டுக்கள்.

      கவிழ்ந்தது கப்பல்
      சிறிதும் கவலையில்லை
      வேறொன்று கப்பல்!      கன்னத்தில் கை வைத்தால் கப்பல் கவிழ்ந்து விட்டதா? என்று கேட்பார்கள். பெரியவர்கள் கவலை கொள்வது போல குழந்தைகள் கவலை கொள்வது இல்லை.  குழந்தைத்தனத்தை படம்பிடிக்கும் விதமாக பல ஹைக்கூ கவிதைகள் உள்ளன.

      பெய்த மழை
      நிறைய வளர்த்துள்ளது
      மனித நேயம்!      உண்மை தான். சென்னையில் பெய்த பெருமழை சாதி, மத வேறுபாடுகளைத் தகர்த்து மனிதநேயத்தை மனிதமனங்களில் விதைத்தது உண்மை தான்.

      நல்ல மழை
      ரசிக்க முடியவில்லை
      ஒழுகும் குடிசை!      ஏழ்மையை குடிசையின் குறைபாட்டை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாகச் சுட்டிய விதம் அருமை.  குடிசையில் வாழ்பவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும்.  வசதியானவன் ரசிக்கும் மழையை வசதியற்றவன் ரசிக்க முடிவதில்லை என்பது உண்மை!

      மழையில் நனையும் மரம்
      தலை துவட்டி விடுகிறது
      இடை இடையே வீசும் காற்று!      மழையில் நனையும் மரத்தைப் பார்த்து ரசனையுடன் வடித்து ஹைக்கூ நன்று.  காற்று தலை துவட்டுவது நல்ல கற்பனை.

      நல்ல இசை
      தொடர்ந்து தருகிறது
      ஓட்டை புல்லாங்குழல்!      நேர்முகம் சிந்தனை விதைக்கும் நல்ல ஹைக்கூ.  ஒரு சிலரிடம் ஏதாவது ஒரு வேலை சொன்னால் செய்யாமல் அதில் ஒரு ஓட்டை, இதில் ஒரு ஓட்டை என்று சாக்கு போக்கு சொல்வார்கள்.  அவர்களுக்கான ஹைக்கூ இது.  ஓட்டைகள் உள்ள புல்லாங்குழல் தான் நல்ல இசை தருகின்றது.  ஓட்டைகளுக்காக அவை வருந்துவதில்லை என்ற சிந்தனை விதைத்த விதம் அருமை. 

      மனம் முழுக்க ஆசை
      புத்தனாக
      தடுக்கும் ஆசை!      ஆசையைத் துறக்க எல்லாராலும் முடியாது.  பேராசையைத் துறந்து விடலாம். ஆனால் ஆசையைத் துறப்பது கடினம் தான்.  எல்லோரும் புத்தராகி விட முடியாது என்ற உண்மையை உணர்த்திய விதம் சிறப்பு.

      இயற்கையைப் பாடாமல் எள்ளல் சுவையுடன் நடைமுறைகளைப் பாடுவது சென்ரியூ என்ற தலைப்பில் நூலின் இரண்டாம் பகுதியில் எழுதி உள்ளார். அவற்றிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.

      வெளிநாட்டுக் கொள்ளையரை விரட்டினோம்
      வீரமாய் நீட்டி முழங்கினார்
      உள்நாட்டுக் கொள்ளையர்!      இங்கிலாந்துக்காரன் நம்மை சுரண்டுகின்றான் என்று சொல்லி வீரமாகப் போராடி விடுதலை பெற்றோம். ஆனால் அடுத்து வந்த அரசியல்வாதிகளின் சுரண்டலோ அளவிட முடியாது.  ஆங்கிலேயனே தேவலாம் என்ற மனநிலைக்குத் தள்ளி விட்டனர் இன்றைய அரசியல்வாதிகள்.

      வேறென்ன சொல்ல
      இன்னும் நம்புகின்றன ஆடுகள்
      கசாப்புக் கடைக்காரனையே!      மக்கள் இன்னும் மாக்களாகவே இருக்கின்றன.  விழிப்புணர்வு வரவில்லை.  இலவசங்களுக்கு மயங்கிடும் இளிச்சவாயர்களாகவே இருக்கின்றனர் என்ற வேதனையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.கோடிகள் திருடுபவன் எல்லாம் வெளிநாடு ஓடி விடுகிகிறான் .நூறு இருநூறு திருடுபவன் சிறையில் கம்பி எண்ணுகிறான் .

யாரேனும் காப்பாத்துங்கோ கடவுளை
கோவிலுக்குள் புகுந்தது
மழை வெள்ளம்!எள்ளல் சுவையுடன் பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் விதமாக வடித்த ஹைக்கூ. நன்றி.  வெள்ளத்திலிருந்தும் தீயிலிருந்தும் கடவுளை மனிதன் தான் காக்க வேண்டி உள்ளது என்ற உண்மை கசக்கும் பலருக்கு.

பஞ்சகல்யாணிக்கோ கல்யாணராமனுக்கோ
      கொடுங்கள் விவாகரத்து
      விடும் அடைமழை!மழை வேண்டும் என்பதற்காகவே கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் மூட நம்பிக்கை கணினியுகத்திலும் சிலர் நடத்தி வருவதை இன்றும் காண்கிறோம்.  அந்த மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக மழை நிற்க கழுதைக்கு விவாகரத்து செய்யுங்கள் என்று சொன்ன எள்ளல் புத்தி நன்று. 
 நூலாசிரியர் கவிஞர்  க. இராமசெயம் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள். 


.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum