"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

Go down

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

Post by அ.இராமநாதன் on Thu Mar 22, 2018 9:49 pm

முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகளையும் கூர்ந்து பார்ப்பவர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். இந்து மதத்திலும், புத்த மதத்திலும் பயன்படுத்தப்பட்ட முத்திரைகள் காலம் செல்லச் செல்ல உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத்துவங்கின.

இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்துக்கும் மன நலனுக்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.  எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய்வதனால் ஏற்படும் பலன்களையும் பார்ப்போம்.

ஞான முத்திரை:
கையின் பெருவிரல் நுனியையும், ஆட்காட்டி விரலின் நுனியையும் இணைக்கையில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக் குறைவைக் குறைக்கவும், மன அமைதியை அதிகரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
வருண முத்திரை:
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
உடலில் உள்ள நீர்ச் சமநிலை மாறினால் ஏற்படும் தீய விளைவுகளை இது தடுக்கிறது. ரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் வருண முத்திரை உதவுகிறது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்

Post by அ.இராமநாதன் on Thu Mar 22, 2018 9:50 pm

சூன்ய முத்திரை:
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக்கொள்ளும்போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். இது காது வலியையும், காது சம்பந்தமான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
பிராண முத்திரை:
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொடும்போது பிராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத்தல் வேண்டும்.
இது கண்பார்வைக் கோளாறை குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும் களைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
அபான முத்திரை:
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொடும்போது அபான முத்திரை ஏற்படுகிறது.
இது சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தவும் மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.
அபான வாயு முத்திரை:
அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியைப் பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல்களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட்காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும்போது இந்த முத்திரை உருவாகிறது.
இதயம் சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப்படுத்தவும், வாயுத் தொந்தரவுகளையும் இது கட்டுப்படுத்துகிறது.
 
இனி இந்த முத்திரைகளைச் செய்யும்போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.
முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். பின் கைகளை நன்றாகத் துடைத்துக்கொண்டு கைகள் சூடாகும்வரை இரு கைகளையும் சேர்த்து தேய்த்துக்கொள்ளுங்கள்.
இந்த முத்திரைகளை அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும், படுத்த நிலையிலும், நடந்துகொண்டும்கூட செய்யலாம். ஆனால், பரபரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.
இந்த முத்திரைகளைச்செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. 'அரை மணி முதல் முக்கால் மணி நேரம்வரை உங்களுக்குத் தேவையான முத்திரைகளைச் செய்யலாம்' என்கிறார்கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட காலங்களில் சிறிது இடைவெளி விட்டு மூன்று முறைகூடச் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.
ஒரேயடியாக நீண்ட நேரத்துக்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரிசோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்திரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum