"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்

Go down

சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்

Post by அ.இராமநாதன் on Fri Apr 20, 2018 12:01 pm


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28060
Points : 61706
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்

Post by அ.இராமநாதன் on Fri Apr 20, 2018 12:07 pm

ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம்
-



உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்
போது உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை 
இயற்கை தந்த பரிசு. 

சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் 
பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் 
உறையாமை நோய்.

உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், 
எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் 
மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். 

ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது,
வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும்.

அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் 
வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், ரத்தம் 
உறையாமலே இருக்கும் பிரச்சினைதான் ஹீமோபீலியா.

 பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரும் இந்நோய், பரம்பரை 
சம்பந்தப்பட்டது.

தேவை எச்சரிக்கை

பொதுவாக அடிபட்டு மூன்று நிமிடங்களில் ரத்தம் உறையத் 
தொடங்கும். ஆனால், இந்நோய் உள்ளவர்களுக்கு 30 நிமிடங்கள் 
ஆனாலும் உறையாது.

 "பல் பிடுங்குதல் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் 
இந்நோய் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் முன்கூட்டியே
 தெரிவித்துவிட வேண்டும். இதனால் ஆபத்தில் இருந்து தப்பி
விடலாம். 

மேலும் இந்நோய் உள்ளவர்கள் வலிநிவாரண மருந்துகளைச் 
சாப்பிடக்கூடாது. ஏனெனில் வயிற்றுக்குள் ரத்தப் போக்கு 
ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்’’ என்கிறார் டாக்டர் 
பாஸ்கரன்.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் 
புரிந்துகொள்ள முடியும். பாலினத்தை நிர்ணயிப்பவை
 குரோமசோம்கள். இது ஆண்கள் உடலில் xy குரோமசோம்களாகவும், 
பெண்கள் உடலில் xx குரோமசோம்களாகவும் இருக்கும்.

 X குரோமசோமில் ஏற்படும் குறைபாடே இந்நோய்க்கு முதன்மைக் 
காரணம். 
x குரோமசோமில் உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் 
என்பதால், ஒரு x கொண்ட ஆண்களுக்கு, இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் 
சமாளிக்க முடியாது.

இரண்டு xx கொண்ட பெண்களுக்கு ஒன்றில் குறை ஏற்பட்டால்,
 மற்றொரு x-ல் உள்ள மரபுப் பண்புகளைக் கொண்டு ரத்தம் 
உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.

சொந்தத்தில் திருமணம்?

இந்நோயால் ’பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவும் 
பெண் என்பதால் இந்நோயின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்
கொண்டார்.

 ஆனால் இவரது சந்ததியை அது பாதித்தது. அவருக்கு வந்ததோ 
மிக மோசமான ஹீமோபீலியா பி நோய் வகை. இவரது ஐந்து 
குழந்தைகளில் இரண்டு பெண் குழந்தைகள் மூலம், அரச வம்சத்து 
ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் பரவ விக்டோரியா காரணமாக 
இருந்தார்.

இதனால் இந்நோய் அரச நோய் (Royal desease) என்ற 
பெயரையும் பெற்றது. ரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின்
வாழ்நாள் குறைவு. அடிபடாமல் கவனமாக இருந்தால் வாழ்நாளை 
நீட்டிக்கலாம்.

ரத்த உறவில் திருமணம் செய்வதால்தான் இந்நோய் அதிகம் 
பரவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மரபணுவில் உள்ள 
இந்தச் சிக்கல், ரத்த சொந்தங்களுக்குள் நடைபெறும் 
திருமணங்கள் மூலமே பரவுகிறது. 

மரபணு காரணமாவதால் இந்நோய்க்குத் தீர்வு இல்லை.
 ஆனால், இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

ரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு 
உண்டாக்குவதற்காக, உலக ரத்தம் உறையாமை கூட்டமைப்பு
 நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனரான 
பிராங்க் கெனபெல்லின் பிறந்த நாளான ஏப்ரல் 17-ம் தேதியே,
 உலக ரத்தம் உறையாமை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------
நன்றி - தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28060
Points : 61706
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum