"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Go down

பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by ceejay on Mon Jan 10, 2011 4:48 pm

நம் அனைவரின் மனத்திலும் உழவர்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. வெறும் தொழில் துறையும் தொழில்நுட்ப துறையும் வளர்ந்தால் போதுமா? சம்பாதித்து நாம் பணம் என்னும் காகிதத்தையா சாப்பிட போகிறோம்? நான் விவசாயி என்பதை வேதனையுடனும், நான் IT Professional என்பதை பெருமையுடனும் சொல்லும் நிலையில் சமுதாயம் இருப்பது சரியல்ல.


'வினை முடித்தன்ன இனியன்' னு யாரோ ஒரு பெரியவர் (அநேகமாக வள்ளுவர்)
சொன்னது தப்பே இல்ல. கொடுத்த வேலைய முடிச்சுட்டு ஹப்பானு உக்கார்ற சுகம்
எதுலயும் கிடையாது. பணி நிமித்தம் நிறைய ஆணிகள். எனவே தான் பதிவிட
முடியவில்லை.

தமிழ்மணத்துல பாத்தா நம்ம பதிவு ஊத்திக்கிச்சு. ஆனா
தகுதிவாய்ந்த பதிவுகள் தான் ஜெயிச்சிருக்கு. நல்லது. தேர்ச்சி அடைந்த
அனைவருக்கும் வாழ்த்துக்கள். பதிவு எழுதி ரெண்டு மாசத்துல ரெண்டாவது
ரவுண்டு வந்தது வரை எனக்கு பெருமையே. ஊக்குவித்தவர்களுக்கு நன்றிகள் பல.

ஆங்கில புத்தாண்டு நல்லவிதமாக ஆரம்பித்துள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்ததா பொங்கல் வருது. சித்தப்பாவ
அம்மான்னும் அத்தைய அப்பான்னும் கூப்பிடுபவர்கள் பொங்கலை தமிழ்
புத்தாண்டுன்னு சொல்லி கொண்டாடுங்க. நான் சித்திரையை தான் தமிழ்
புத்தாண்டாக கொண்டாடுவேன். எனக்கு பொங்கல் உழவர் திருநாள் தான். யாரோ
சொன்னதுக்காகவேல்லாம் இத்தனை நூற்றாண்டு பழக்கத்தை மாத்திக்க முடியாது.
டிவி முன்னாடி நாள் முழுவதும் உட்கார நேரம் ஒதுக்குபவர்கள் தயவு செய்து ஒரு
ஐந்து நிமிடமாவது நமக்கு உணவளிக்கும் தெய்வம் உழவனை வணங்க ஒதுக்குங்கள்.
அவன் இல்லாவிட்டால் நமக்கு மாத்திரைகளும், டானிக்குகளும் தான் சாப்பாடு.

நம் அனைவரின் மனத்திலும் உழவர்கள் பற்றிய
விழிப்புணர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. வெறும் தொழில் துறையும்
தொழில்நுட்ப துறையும் வளர்ந்தால் போதுமா? சம்பாதித்து நாம் பணம் என்னும்
காகிதத்தையா சாப்பிட போகிறோம்? நான் விவசாயி என்பதை வேதனையுடனும், நான் IT
Professional என்பதை பெருமையுடனும் சொல்லும் நிலையில் சமுதாயம் இருப்பது
சரியல்ல. உங்களை ஒரு விவசாயியாக எண்ணி கண்ணை மூடி சிறிது நேரம் அவன்
வாழ்க்கையை virtual ஆக வாழ்ந்து பாருங்கள். பகீரென்று இருக்கும். அப்படி
ஒரு ஸ்திரமற்ற நிலையில் அவன் வாழ்வது நமக்கு புரியும். நாம் அதற்கு என்ன
செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். மனம் இருந்தால் உங்களுக்குள்ளும்
ஓராயிரம் வழிகள் தோன்றும்.

உதாரணமாக,

1. நீங்கள் வேலையில் சேர ஒருவேளை உங்கள் விவசாய நிலம்
விற்கப்பட்டிருக்கலாம். நீங்கள் இப்போது ஒரு நிலத்தை வாங்கி குத்தகைக்காவது
விட்டால் விவசாயம் தெரிந்தவன் தானும் பிழைத்து நம்மையும் வாழ வைப்பான்.
ஷேர் போன்ற நிச்சயமற்ற விஷயத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. அதில்
குறிப்பிட்ட சதவீதம் வருங்கால சந்ததிக்காக விவசாயத்தில் முதலீடு செய்யலாமே.
நீங்கள் மட்டும் சாதம் சாப்பிடுவீர்கள். உங்கள் பேரக்குழந்தைகள்
மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா?

2. உங்களுக்கு விவசாயி யாரேனும் நண்பனாக இருந்தால் அவர்கள் கஷ்டமான
நிலையில் இருந்தால் அவர்கள் தொடர்ந்து விவசாயம் நடத்த at least loan apply
செய்தல், அரசின் புதிய சலுகைகளை பெறும் வழிமுறைகள் போன்ற சிறு சிறு
உதவிகளாவது செய்து கொடுக்கலாம்.

3. குழந்தைகள் பெரிதானால் டாக்டர், வக்கீல், என்ஜினியர், டீச்சர் போன்ற
தொழில்களுடன் விவசாயி என்பதையும் கௌரவமான தொழிலாக பார்க்க வையுங்கள்.
அந்த தொழிலின் பெருமையை உணர்த்துங்கள்.

4. ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது வரை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு
சம்பாதித்து விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்க உக்கார்ந்து கொள்ளுங்கள்.
உண்மையாகவே வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கலாம். எனக்கு விவசாயம் தெரியாது
என்று கூறாதீர்கள். நாம் ஒண்ணும் பிறக்கும்போதே கம்ப்யுட்டர் கற்றுக்கொண்டு
வரவில்லை. ஆனால் இப்போது தட்டு தட்டென்று தட்டவில்லையா? விவசாயமும்
அப்படித்தான். உங்கள் கடைசி காலத்தில் ஒரு நகரத்தின் டிஸ்கோதே பப்பில்
அல்லது முதியோர் இல்லத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சியையும், ஒரு
பசுமையான வயல்வெளியில் உட்கார்ந்திருக்கும் காட்சியையும்
நினைத்துப்பாருங்கள். எது சுகம் என தெரியும்.

5. இது எனக்கு உட்பட கொஞ்சம் சிரமம். ஆனாலும் மனம் இருந்தால்
செய்யலாம்தான். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உங்களுக்கு
இருந்தால் அவர்களில் ஒருவரை விவசாயி ஆக்கலாம். எல்லோரும் அலுவலகத்தில் தான்
வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லையே. விவசாயத்துறையின் மேன்மையை
விளக்கி, உங்கள் குழந்தைக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் அவர்கள்
விவசாயி ஆக விரும்பினால் தடுக்க வேண்டாமே...

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது 'HAPPY PONGAL' என குறுஞ்செய்தி
அனுப்புவதற்காக அல்ல. விவசாயிகளை நினைப்பதற்காகவும் தான். உழவன்
சூரியனுக்கு நன்றி சொல்லட்டும். நாம் உழவனுக்கு நன்றி சொல்வோம்.
இந்த விவசாய நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் போன்ற
சாதாரண பெண்ணுக்கே ஐந்து ஐடியாக்கள் தோன்றினால் இந்த பதிவை படிக்கும்
ஒவ்வொருக்கும் எத்தனை ஐடியாக்கள் தோன்றும். அவற்றையும் முடிந்தால் இங்கே
பதிவு செய்யுங்கள். பதிவு செய்வதை விட அவற்றை follow செய்யுங்கள். நம்
வாரிசுகளுக்காகவாவது...


http://sadharanamanaval.blogspot.com/2011/01/blog-post.html

ceejay
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 16
Join date : 10/01/2011

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவிக்காதலன் on Mon Jan 10, 2011 4:55 pm

ceejay wrote: நம் அனைவரின் மனத்திலும் உழவர்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. வெறும் தொழில் துறையும் தொழில்நுட்ப துறையும் வளர்ந்தால் போதுமா? சம்பாதித்து நாம் பணம் என்னும் காகிதத்தையா சாப்பிட போகிறோம்? நான் விவசாயி என்பதை வேதனையுடனும், நான் IT Professional என்பதை பெருமையுடனும் சொல்லும் நிலையில் சமுதாயம் இருப்பது சரியல்ல.


நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் இதில் சில சிக்கல்கள் உள்ளன... விவசாயி தான் விளைவிக்கும் விளைச்சலுக்கு அதிக பணம் பெற வேண்டுமானால், அவன் விளைவிக்கும் பொருள் அதிக விலைக்கு விற்க்கப்பட வேண்டும்... விவசாய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாரா?

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 4:56 pm

பதிவுகளை முழுமையாக போட்டு சுட்டியை கீழே கொடுங்கள் வெறும் சுட்டியை மட்டும் கொடுக்க வேண்டாம் நண்பரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by RAJABTHEEN on Mon Jan 10, 2011 9:30 pm

உங்கள் கதைகள் பல படிப்பினைகளைத்தந்தது பகிர்வுக்கு நன்றிதோழரே

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவி கவிதா on Mon Jan 10, 2011 9:56 pm

ceejay wrote: நீங்கள் இப்போது ஒரு நிலத்தை வாங்கி குத்தகைக்காவது
விட்டால் விவசாயம் தெரிந்தவன் தானும் பிழைத்து நம்மையும் வாழ வைப்பான்.

4. ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது வரை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு
சம்பாதித்து விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்க உக்கார்ந்து கொள்ளுங்கள்.
உண்மையாகவே வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கலாம்.

குத்தகைக்கு யார் வாங்குவாங்க??. வாங்கி என்ன பண்றது?? இங்க மஞ்சள் வெட்டுறதுக்கு கூலி எவ்வளவு தெரியுமா ௦௦ 500 ரூபாய்..!!!! எங்க போய் விவசாயி சொல்லி அழறது ??. நாங்க போட்டு இருக்கறது 20 செண்டு நாத்து ( நெல்லு). அதுக்கு அறுப்பு கூலி எவ்ளோ தெரீமா??? 2000 ?? அறுவடை ஒரு பொதி தான், சோத்துக்கு சரி, வாங்கின கடன எப்டி கட்றது?? வெங்காய வெல வானத்து அளவுக்கு ஏறி இருக்கு. எங்க காட்ல அடி மாட்டு வெலைக்கு வாங்கிட்டு போறாங்க. நாங்களே போய் விக்கலாம் !! ஆனா அங்க ஒரு கூட்டமே இருக்கு அடி வெலைக்கு தான் வாங்குவாங்க. எல்லாமே சரிங்க. யாரு விவசாயம் பண்ணுவாங்க ஒரு ஆளு கூலி எவ்ளோ தெரிமா? 200 . இதுல போய் எப்டி வெல்லாம எடுத்து கடன அடைச்சி புள்ள குட்டிய படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுக்கறது ?????

விவசாயம் பாக்க எல்லாம் 40 வயசுல உக்காந்துக்க முடியாது. அதுக்கு நீங்க காசு நெறைய வச்சிருந்தா கூலிக்கு, முட்டுவளிக்கு எல்லாம் சமாளிச்சுக்கலாம் இல்லாது போனால் தலைல துண்டு தான். எல்லாரும் தொழில் சாலைக்கு தான் வேலைக்கு போறாங்க. விவசாயம் பார்க்க நாதி அற்று தான் நிற்கிறோம். யாருமே வேலைக்கு வறது இல்ல. சரி சரி இயந்திரம் பயன் படுத்துங்கனு சொல்றீங்களா?? காசுக்கு எங்க போறது? வாங்கில கேக்க சொல்றீங்களா? அவங்க அந்த பத்திரம் கொண்டா, இந்த பத்திரம் கொண்டாங்கரங்க .. இங்க சோத்துக்கே திண்டாடுறோம் .
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவி கவிதா on Mon Jan 10, 2011 10:03 pm

எல்லாரும் நல்லா இருகாங்க. விவசாயி மட்டும் தான் சாகிறோம். நாங்க ஏன் சாகனும்?. அதான் காடு சும்மா கோடிக் கணக்குல விக்கித்து. வெல்லாம நெலத்த வித்து பாங்கியில போட்டு வட்டிக்கு வாங்கி தின்னா, தின்ன சோறாவது வயித்துல ஓட்டும். விவசாயி எல்லாம் விவசாயம் தான் செய்யணும் என்பது ஒரு தனி நபர் ஒரு தனி கணிப் பொறி முன் அமர்ந்து செய்து முடிக்கும் செயல் அல்ல. கூட்டு பணி. ஒருவரே 10 ஏக்கராவுல போய் வேல செஞ்சா 10 நாள்ல படுக்கை தான். அப்றோம் மருத்துவ செலவு செய்ய 1 ஏக்கராவ விக்கணும். வித்துட்டு என்ன பண்றது? அப்டி தானே இருக்கு மருத்துவ செலவெல்லாம்?.

பொறுத்திருகிறோம்... எங்களுக்கு காலம் பதில் சொல்லும். வெள்ளாம நிலமெல்லாம் தரிசாகவும், வீட்டு மனைக்கு விற்கப் போகும் போதும் எனக்கு சாகும் வலி வருகிறது.


avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by rajeshrahul on Mon Jan 10, 2011 10:10 pm

கவி கவிதா wrote:எல்லாரும் நல்லா இருகாங்க. விவசாயி மட்டும் தான் சாகிறோம். நாங்க ஏன் சாகனும்?. அதான் காடு சும்மா கோடிக் கணக்குல விக்கித்து. வெல்லாம நெலத்த வித்து பாங்கியில போட்டு வட்டிக்கு வாங்கி தின்னா, தின்ன சோறாவது வயித்துல ஓட்டும். விவசாயி எல்லாம் விவசாயம் தான் செய்யணும் என்பது ஒரு தனி நபர் ஒரு தனி கணிப் பொறி முன் அமர்ந்து செய்து முடிக்கும் செயல் அல்ல. கூட்டு பணி. ஒருவரே 10 ஏக்கராவுல போய் வேல செஞ்சா 10 நாள்ல படுக்கை தான். அப்றோம் மருத்துவ செலவு செய்ய 1 ஏக்கராவ விக்கணும். வித்துட்டு என்ன பண்றது? அப்டி தானே இருக்கு மருத்துவ செலவெல்லாம்?.

பொறுத்திருகிறோம்... எங்களுக்கு காலம் பதில் சொல்லும். வெள்ளாம நிலமெல்லாம் தரிசாகவும், வீட்டு மனைக்கு விற்கப் போகும் போதும் எனக்கு சாகும் வலி வருகிறது. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்_________________
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள்.
avatar
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவி கவிதா on Tue Jan 11, 2011 11:12 am

விவசாயம் இங்கே பாதி செத்து போச்சு. எத்தன மாடு, எருமை, ஆடு, கோழி, தீனி, இருந்துச்சு தெரீமா?? எல்லாமே இப்போ அங்க அங்க மட்டும் தான் பார்க்க முடீது. காட்ட சும்மா போட்டாலாவது கடனில் இருந்து தப்பிச்சுக்கலாம் னு வெள்ளாம செய்றது இல்ல
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 11, 2011 11:21 am

இப்போ விவசாயம் செய்தாலும் அதற்கு ஏற்ற பலன் இல்லையென்று விவசாயம் செய்கிறதை நிறுத்திடுறாங்க

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவி கவிதா on Tue Jan 11, 2011 11:25 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ விவசாயம் செய்தாலும் அதற்கு ஏற்ற பலன் இல்லையென்று விவசாயம் செய்கிறதை நிறுத்திடுறாங்க

நிறுத்திட்டு எங்க போறது ???!!! விவசாயம் தவிர வேறென்ன தெரியும் எங்களுக்கு??. கணிப்பொறி தட்டவா? இல்லை அலுவலகம் போவதா?. இததான் செய்தாகணும் எங்க அப்பன்கள் எல்லோரும். அவர்கள் பிள்ளைகள் (நாங்கள்) கடனில் சாக விருப்பம் இல்லை. அதனால் அதை விட்டு வேறொரு தொழில் செய்யப் போகிறோம், வேளைக்கு வெளி நாடு போகிறோம்.
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 11, 2011 11:28 am

ஒ வெளி நாடுக்காக போறீங்க? அங்கு விவசாயம் செய்யலாம் என்றா?

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by கவி கவிதா on Tue Jan 11, 2011 11:38 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒ வெளி நாடுக்காக போறீங்க? அங்கு விவசாயம் செய்யலாம் என்றா?

இது ஒரு விவசாயியின் குமுறல். நாங்களெல்லாம் வெளி நாடு போயிட்டா வெள்ளாமை வந்து நீங்களெல்லாம் செய்யுங்கள். கூலி மிக மிக அதிகம். ஒரு நாள் ஒருவருக்கு கூலியே 200 என்றால், விளைச்சலுக்கு அந்த அளவு காசு வந்தால் பரவாயில்லையே? இல்லாவிட்டால் அனைத்தையும் விற்று வீட்டில் நிம்மதியாக இருக்கலாமே!!
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 11, 2011 11:42 am

அதைத்தான் நானும் சொன்னேன்..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாவப்பட்ட விவசாயியும் நம் பேரன் பேத்திகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum