"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தகவல் களஞ்சியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» நீல பெங்குவின்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» கருமை தேவாலயம்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» நம்புங்கண்ணே....நம்புங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சாத்தானின் குரல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» வேப்பமர சாமி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» அப்பா - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:06 pm

» மளிகை கடையில் இருப்பாள் இந்த ராணி...? -விடுகதை -
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Go down

குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by kowsy2010 on Tue Jan 11, 2011 3:35 pm

குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

பஞ்சு உடல் ஒன்று பூமித்தாயிடம் புகலிடம் தேடி அன்னை என்ற ஆதாரத்தின் துணையோடு அகிலத்தை வந்தடைகின்றது. இராட்சத உருவங்களாய்ச் சுற்றித்தன்னைச் சூழ்ந்து நிற்கும் வைத்தியர்களையும்; இருண்ட உலகு விட்டு வெளிச்சமான ஒரு புரியாத உலகத்தையும கண்ட குழந்தை, தொண்டை விரித்துத் தன் தொனியைக் குரல் எனக் கொண்டுவருகின்றது. குரல் எடுக்க யாரும் துணைக் கொடுத்தாரா? புரியாத உலகில் வெற்றுக் காகிதமாய் எழுதப்படாத இதயத்துடன் பிறந்த அந்த விநாடி தொட்டு வியத்தகு சாதனை புரியும் வின்னர்களாகத் தடம்பதிக்க அவர்கள் வளர்ந்தார்களா? வளர்க்கப்பட்டார்களா? விடைதேடி விளக்கமாய் விரிகிறது மனம்.

தொட்டில் வந்த பிள்ளை சுவை தேடி, உடல் உறுதிநாடி அவதரிக்கும் போதே அன்னையின் மார்பகத்தில் பால் சுரக்கச் செய்து கட்டுச் சோற்றுடன் உலகுக்கு உதயமாகிறது. உணவின்றி உடல் எங்கு உருப்பெறப்போகிறது என்று உள்ளிருந்து உற்பத்தித் தொழிற்சாலையை ஊக்குவித்ததோ! பாதப்பெருவிரல் பக்குவமாய்த் தான் இழுத்து சிறுவாயில் விரல் வைத்துச் சுவை பார்க்கும் போதும், பட்டுப் போன்ற பாதம் நோகாது உருண்டு பிரண்டு சிற்சில பற்பல யோகாசனக் கலையைத் தானாகவே செய்து உடலை வளர்க்கின்றது. அதற்காக ஒரு உபாத்தியாயரை உதவிக்காய் அமர்த்தினோமா? என்னே அற்புதம்!

உறுதியாக உணவு உட்கொள்ள உடல் வலுப்பட்டு விட்டதா? பற்களின் தேவை உணவைப் பதப்படுவதற்காக அன்று தொடங்குவது அகப்பட்ட பொருளை வாயினால் கடிகடியென்று கடிக்கின்றது. அது விறகா விரலா புரியாது அஃறிணைப் பொருளல்ல குழந்தை. கடிப்பதையே காண்கின்றோம். அதன் கருத்தைப் புரிந்தோமா? அத்தனையும் அதன் பற்கள் வெளிவரவேண்டும் என எடுக்கும் முயற்சியே. தன் தேவைக்காய்த் தானாகத் தோற்றுவித்த பற்களல்லவா!

அறிவு துளிர்க்கின்றது. அண்மையிலுள்ள பொருளென்ன. சேய்மையிலுள்ள பொருளென்ன. அளைந்து உறவாட ஆசை பூக்கின்றது.
ஆராய மனம் துடிக்க கையில் பட்டதைத் துணைக் கொண்டு எழுந்து பிடித்துப்பிடித்து நோக்கிய குறியை நாடி நடைபயில்கின்றதே. நம் துணை தேவையென நாம் எடுக்கும் முயற்சியெல்லாம் நம் தற்பெருமை தானென்று நாம் அறிய வேண்டும். தானாய் தன் முயற்சியில் தானாய் எழுந்த தளிர்நடை பயிலும். சமநிலைப்படுத்த தன் இரு பிஞ்சுக் கரங்களையும் சமநிலைப் பலகையாய் விரித்துத் தன் தள்ளாடும் தளிர்ப்பாதங்களைத் தாண்டித் தாண்டி வைத்து அழகாய் நடந்துவரும் காட்சியை அகக்கண்ணிலே நிறுத்துங்கள். ஐயோ இதுவன்றோ அதிசம்!

பொருள் நோக்கிச் சுவை நோக்கி எம் அதரங்களின் அசைவை நோக்க முனைகின்றதே. அன்று தான் பேச்சுக்கலைக்கு முக்கியத்துவம் தேடுகின்றது. பேசுகின்றபோது எங்கள் உதடுகளின் அசைவை இமைவெட்டாது. உற்றுநோக்கித் தன் மென் இதழ்களையும் அசைத்துப் பார்க்கும். அங்கே பேச எத்தனிக்கும் முயற்சியின் முழுவடிவத்தையும் நாம் காணலாம்.

இத்தனையும் சுயமாய் நடைபெறுகின்ற போது பறவைகளுக்கும் மனிதர்களுகு;கும் இடையே பாகுபாட்டை நாம் காண்கின்றோம். நடைபயிலும் காலம் வரை உணவு ஊட்டவேண்டியவர் உதவிநாடி நிற்கவேண்டியுள்ளது. இதற்காகப் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தைத் தந்த அந்தக் குழந்தைகளில் எங்கள் கருத்துக்கள் அத்தனையையும் திணிக்க முயலலாமா? அவர்களுக்கென ஓர் உலகம், உணர்வு ஆசைகள், அனைத்தும் உண்டு. எழுந்து நடமாட எவ்வளவோ முயற்சிகளைத் தங்களுக்காகத் தாங்களாகவே மேற்கொள்ளும் அவர்கள், அவர்களுக்காகவே இப் பூமியில் பிறப்பெடுத்தவர்கள். இதனையே அப்துல்கலாம் அவர்கள்,''உங்கள் குழந்தைகள் உங்களுக்கூடாக வந்தவர்கள் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல. அவர்கள் வளர நீங்கள் உதவியாக இருக்கலாம். அவர்கள் உணர்வாக மாறுதல் கூடாது'' என்றார். குழந்தை வளரத் தாய் வளர்க்கிறாள். என்பதைவிட தாய், தாயாக வளர்கிறாள் என்பதே மெய். குழந்தை குழந்தையாக வளர்கிறது என்பதும் மெய் ஆகும்.


kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by வ.வனிதா on Tue Jan 11, 2011 4:39 pm

உடல்ரீதியான வளர்ச்சியில் குழந்தை தானாகவே வளர்கிறது ! ஆனால் அதன் மனம்சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் , அதன் சுற்றுப்புரங்களே மிகமுக்கிய காரணமாகின்றன.
உங்களின் குழந்தையின் நிலைப்பாடு அழகாக வர்ணனை செய்து உள்ளீர்கள் ! அருமை !
avatar
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 27
Location : சென்னை

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 11, 2011 4:42 pm

மனம் சார்ந்த வளர்ச்சி சுற்று புறத்தை பொருத்தே அமையும்..

அருமையான பகிர்வு நண்பரே மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by கவிக்காதலன் on Tue Jan 11, 2011 11:26 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மனம் சார்ந்த வளர்ச்சி சுற்று புறத்தை பொருத்தே அமையும்..

அருமையான பகிர்வு நண்பரே மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்

_________________
www.anishj.in | www.anishj.com | Am I Online?


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by jeba on Tue Jan 11, 2011 11:37 pm

க.வனிதா wrote:உடல்ரீதியான வளர்ச்சியில் குழந்தை தானாகவே வளர்கிறது ! ஆனால் அதன் மனம்சார்ந்த வளர்ச்சிகள் அனைத்தும் , அதன் சுற்றுப்புரங்களே மிகமுக்கிய காரணமாகின்றன.
உங்களின் குழந்தையின் நிலைப்பாடு அழகாக வர்ணனை செய்து உள்ளீர்கள் ! அருமை !
avatar
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 31

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by kowsy2010 on Tue Jan 11, 2011 11:47 pm

வனிதா, யுஜின், கவிக்காதலன், ஆகிய மூவருக்கும் நன்றி. மனவளர்ச்சிக்கு சுற்றாடல் காரணமானாலும், பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சியில் தம்முடைய எண்ணங்களை திணிக்கக்கூடாது. சென்றுவருகிறேன் செல்

kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jan 12, 2011 8:56 am

kowsy2010 wrote:வனிதா, யுஜின், கவிக்காதலன், ஆகிய மூவருக்கும் நன்றி. மனவளர்ச்சிக்கு சுற்றாடல் காரணமானாலும், பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சியில் தம்முடைய எண்ணங்களை திணிக்கக்கூடாது. சென்றுவருகிறேன் செல்

அது உண்மையே.. பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சியில் பிள்ளைகளின் எண்ணங்களுகும் மதிப்பு அளிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum