"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Today at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Today at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Today at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Today at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Today at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Today at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Today at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Today at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Yesterday at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Yesterday at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Yesterday at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:49 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Go down

மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Post by ceejay on Sun Jan 16, 2011 7:59 pm


இப்போதெல்லாம் மொபைல் நெட்வொர்க்குகளுடன் மல்லு கட்டிய பதிவுகளை அதிகமாக பார்க்க முடிகிறது. இதே அனுபவம் எனக்கும் நிகழ்ந்துள்ளது. கேவலம் முப்பது ரூபாய் போவது நம் யாருக்கும் பெரிதில்லை. அதை இந்த மொபைல் கம்பெனிகாரன்கள் சொல்லாமல் கொள்ளாமல் திருடுவது தான் நம் அனைவருக்கும் கடுப்பேற்றும். இல்லையா? வாருங்கள். என் அனுபவத்தையும் கேளுங்கள். (படியுங்கள்னு போடணுமோ?)


கடந்த 6,7 வருடங்களாக ஏர்செல் ப்ரீபெய்டு வாடிக்கையாளரான நான் சில மாதங்களுக்கு முன் இரவு 8 மணிக்கு EC செய்தபின் சில மணி நேரங்களில் 30 ரூபாய் குறைந்தது. அதிர்ச்சி அடைந்து உடனே எல்லாரையும் போல கஸ்டமர் கேரை (121) தொடர்பு கொண்டு புகார் செய்தேன். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியுடன் இது குறித்த மொக்கை விவரங்கள் நீளுமாதளால் நான் உரையாடல் வடிவில் முடிந்தவரை சுருக்கமாக தருகிறேன். நடுவுல வாங்க, போங்க, மேடம் எல்லாம் போட்டுக்கங்க.


நான் : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது.


வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம் (தவறாமல் இடம்பெறும் வாக்குறுதி). இது சம்பந்தமா எதுவும் எங்கள் database ல add ஆகல. நான்கு மணி நேரத்துக்கு பிறகு தான் add ஆகும். அதனால காலைல தொடர்பு கொள்ளுங்க. வேறு ஏதேனும் தகவல் தேவைபடுதுங்களா?


நான் : (எது சம்பந்தமா ப்ளாக் போடறதுன்னு சந்தேகம். உதவுவீங்களா?) இப்போதைக்கு எதுவும் இல்லைங்க


வா.சே.மை.அ:ஏர்செல்லை அழைத்தமைக்கு நன்றி. Thank you


(அடுத்த நாள் காலை எழுந்து பல் விலக்கியதும்)

நான் : என் பேரு இது. நம்பர் இது. பிரச்சனை இது. கடைசியா பேசினப்ப இப்படி சொன்னாங்க.


வா.சே.மை.அ: உங்களுக்கு நிச்சயம் உதவறோம். உங்க மொபைல்ல டயலர் ட்யூன் வைச்சிருக்கிங்க. அதனால தான் உங்ககிட்ட பணம் எடுத்திருக்காங்க.


நான் : ஆ.... என்னது? டயலர் ட்யுனா? நான் வைக்கலையே. என்ன பாட்டுங்க?


வா.சே.மை.அ: கொஞ்ச நேரம் லைன்ல வெயிட் பண்ணுங்க


(டோடடடோடடோடடோடடோயிங் அதாங்க... வெயிடிங்ல வர மியூசிக்)


வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. செக் பண்ணினதுல '--------' படத்தில இருந்து '-------' பாட்டு வச்சிருக்காங்க... .


நான் : .........................(அதிர்ச்சி. ஏன்னா அது காதலனும் காதலியும் காட்டுக்குள் தனியாக பாடும் இளையராஜா பாட்டு.) தயவு செய்து அந்த பாட்டை உடனடியா கேன்சல் பண்ணுங்க. என் மானமே போயிடும்.


வா.சே.மை.அ: கேன்சல் பண்ண இந்த நம்பருக்கு கூப்பிட்டு சொல்லுங்க. 48 மணி நேரத்துல கேன்சல் ஆயிடும்.


நான் : அதுக்குள்ள என் இமேஜ் போயிடும். நீங்க தயவு செஞ்சு கேன்சல் பண்ணுங்க ப்ளீஸ்....


வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.


(டோடடடோடடோடடோடடோயிங்)


வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________.அந்த பாட்டை கேன்சல் பண்ணிட்டோம் .


நான் : (உங்களாலேயே பண்ண முடியும்போது எதுக்கு வேற நம்பர் குடுத்தீங்க?) சரி அப்படியே பணத்தையும் refund பண்ணிடுங்களேன்.


வா.சே.மை.அ: அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க. நீங்க டயலர் ட்யூன் வச்சதால அதை கேன்சல் மட்டும் தான் எங்களால பண்ண முடியும்


நான் : நான் டயலர் ட்யூன் வைக்கவே இல்லீங்க. moreover, அந்த நேரம் கம்பெனில இருந்து எந்த போன்காலும் வரவே இல்லைங்க. நீங்களே செக் பண்ணி பாருங்க. அப்படி வந்திருந்த நீங்க எடுத்த பணத்த பத்தி நான் கேக்கவே இல்ல.


வா.சே.மை.அ: ஓகே. லைன்ல வெயிட் பண்ணுங்க மேடம்.


(டோடடடோடடோடடோடடோயிங்)


வா.சே.மை.அ: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க மிஸ் _________. நாங்க செக் பண்ணி பாத்ததுல ஏர்செல்ல இருந்து உங்களுக்கு கால் வரலனு தெரியவருதுங்க..


நான் : அப்ப என் பணத்த திருப்பி add பண்ணிடுங்க


வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.


நான் : (புடுங்க மட்டும் வசதி இருக்கோ?) என்னங்க இப்படி சொல்றீங்க. எடுத்தது நீங்கதான? அப்ப நீங்க தான திருப்பி குடுக்கணும்.


வா.சே.மை.அ: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.


நான் : (திரும்ப திரும்ப பேசற நீ) என்னங்க இது முட்டாள் தனமா இருக்கு. நான் வைக்காத பாட்டுக்கு நீங்களா பணம் எடுத்துட்டு தரமாட்டேங்கறீங்க?


வா.சே.மை.அ: சரி நான் என் மேலதிகாரிகிட்ட connect பண்ணறேன். அவங்ககிட்ட பேசுங்க.


நான் : பண்ணுங்க.


வா.சே.மை.அ :ஓகே. லைன் ல வெயிட் பண்ணுங்க மேடம்.


(டோடடடோடடோடடோடடோயிங்)


வா.சே.மை.அ 2: லைன்ல காத்திருந்தமைக்கு நன்றிங்க. உங்களுக்கு என்ன தகவல் தேவைபடுதுங்க?


நான் : (மறுபடியும் முதல்ல இருந்தா? இப்பவே கண்ணை கட்டுதே...) சார்... இது இது இப்படி இப்படி ஆகிபோச்சு. எனக்கு என் பணம் வேணும்


வா.சே.மை.அ 2: மன்னிக்கணுங்க. அந்த வசதி எங்ககிட்ட இல்லைங்க.


நான் : (இதைதான அந்த அக்காவும் சொன்னாங்க.) அப்படினா நான் 'ட்ராய்' ல கம்ப்ளைன்ட் பண்ணட்டுமா?


வா.சே.மை.அ 2 : (பண்ணிக்கோ) இதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது மேடம். எங்ககிட்ட பணம் refund பண்ற வசதி இல்லைங்க.


நான் : கடைசியா கேக்கறேங்க. என் பணம் திரும்ப வருமா? வராதா?


வா.சே.மை.அ 2: சாரிங்க. வராது.


நான் : (வேறு வழியின்றி) இப்படி எங்ககிட்ட பணம் புடுங்கறதுக்கு வேற எதுனா வேலை பண்ணலாம் (போய் பிச்சை எடுக்கலாம்) நான் போனை வைக்கறேன்.


வா.சே.மை.அ 2:வேறு ஏதாவது தகவல் தேவைபடுதுங்களா?


நான் : (அடேய்... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?) தந்த வரைக்கும் போதும்.


வா.சே.மை.அ 2:ஏர்செல்லை அழைத்தமைக்கு ரொம்ப நன்றி.இந்த உரையாடல் ஒரேமுறையில் நடந்ததை போல போட்டிருக்கிறேன். ஆனால், 24 மணிநேரத்தில் ஆகிவிடும், 48 மணிநேரத்தில் ஆகிவிடும், 96 மணிநேரத்தில் ஆகிவிடும் என்று தள்ளிப்போட்டு டார்ச்சர் செய்து கடைசியில் மேற்கண்ட மேலதிகாரியிடம் முடிவான பதில் வந்தது.

இதன் பின்னும் என் மனம் கொதிப்புடனே இருந்தது. சினிமாவில் வருவது போல இவங்களையெல்லாம் தட்டிகேட்க ஒருத்தன் வரமாட்டானா என்று தோன்றியது.


அதன்பின் 'டிராயில்' புகார் கொடுக்கலாம் என்று நெட்டில் தேடினேன். அங்கு புகார் பண்ணுவதன் வழிமுறைகளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்படி customer care இல் complaint செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இரண்டாவது ஸ்டெப்பாக அந்தந்த ஏரியா nodal officers க்கு மெயில் மூலமாக புகார் அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி நோடல் ஆபிசரின் ஈமெயில் ஐடியை கண்டுபிடித்து புகார் அனுப்பினேன்.


நான் அனுப்பிய இரண்டு மணி நேரங்களில் என் மொபைலுக்கு அவரிடம் இருந்தே கால் வந்தது. 'நீங்கள் பணம் குறைந்ததுமே உடனடியாக வா.சே.மை. அதிகாரியை தொடர்புகொண்டு புகார் அளித்ததால், நீங்கள் டயலர் ட்யுனை வைத்திருக்கமாட்டீர்கள் என்று எங்களுக்கு நம்புகிறோம் (லாஜிக்காம்) . எனவே உங்கள் பணம் 30 ரூபாயும் உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது' என்று கூறினார். அதே போல ஐந்தே நிமிடத்தில் முறையாக என் பணம் add ஆகிவிட்டது ...அதையும் அந்த ஆபீசர் திரும்ப கால் செய்து செக் செய்துகொண்டார். வெறும் புலம்பல் மட்டும் போதவில்லை. பொறுமையாகவும், முறையாகவும் ஸ்டெப் எடுத்ததால் இது சாத்தியப்பட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.எனக்கு தெரிந்த வழிமுறைகள்:நீங்கள் ரீசார்ஜ் கார்டுக்கு பின் உள்ள கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் அநேகமாக காசு வசூலிக்கிறார்கள். மூன்று நிமிடங்களுக்கு ஐம்பது பைசா. ஆனால், எல்லா நெட் வொர்கிலும் பொதுவாக, புகார் செய்யவென்று தனியாக ஒரு எண் உள்ளது. (நெட்டில் தேடிக்கொள்ளுங்கள்.) அங்கு கட்டணம் வசூலிப்பதில்லை. உங்கள் புகாரை அங்கே பதிவு செய்யுங்கள். அது தோல்வியடைந்தால் இரண்டாவதாக மெயில் மூலம் பதிவு செய்யுங்கள். (nodal officer,appellate authority, etc). அதன்பின் ட்ராயை தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். இன்னுமொரு நற்செய்தி. TRAI இனி நேரடியாக ஆன்லைனில் புகார் செய்யும் முறையை அமலுக்கு கொண்டுவரப்போகிறது. அடுத்ததாக SMS மூலமாகவும்.நான் இங்கு பதிவிட்டிருப்பது பிரச்சனை வந்த பிறகு எப்படி சமாளிப்பது என்று. ஆனால், உண்மையில் பிரச்சனையே வரக்கூடாது. அது தான் சிறந்த நிர்வாகம்.


திருந்தாத ஜென்மங்கள்:


இவ்வளவு மல்லுக்கட்டி ஜெயித்த பின்னும் மறுபடியும் ஒருநாள் Internet GPRS ஐ அனுப்பி 1.50 ரூபாயை பிடுங்கினார்கள். அட, இன்னொருநாள் வெறும் 6 ரூபாய்தான் வெச்சிருந்தேங்க. அது இந்த பக்கி பசங்களுக்கு புடிக்கல, அதுல அஞ்சு ரூபாய் எடுத்துகிட்டானுங்க. கஸ்டமர் கேருக்கு கூப்பிட்டு விவரத்த சொல்லி பணத்த கேட்டேன். பழைய பதில் தான் வந்தது. கடுப்புடனும் சலிப்புடனும் ஏர்செல் ஓனர் பேர் கேட்டேன். அவனும் புரிஞ்சுகிட்டு 'அது சம்பந்தமான விவரங்கள் எதுவும் தரமாட்டோம்' னு சொல்லிட்டான். அதனால என்ன? அதான் பதிவு போட்டு மானத்த முடிஞ்சவரை வாங்கறோமே.... கோடிகோடியாக சேர்த்தபின்பும் இந்த திருட்டு பிச்சைக்கார நாய்கள் எதற்காக இப்படி நம்போன்ற பொதுமக்களின் பணத்தை பிடுங்குகிறார்களோ .... இவர்களிடம் இருந்து வரும் dialer tune, miss call alert, friendship zone, love tips போன்றவற்றை நிறுத்த முடியாதா? DO NOT CALL சேவை என்பது இவர்கள் தொல்லையை உள்ளடக்காதா?


நொந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும், பரிதாபப்பட்டு ஓட்டு போடுபவர்களுக்கும் நன்றிகள்.

ceejay
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 16
Join date : 10/01/2011

Back to top Go down

Re: மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 17, 2011 10:05 am

உண்மைத்தான் நண்பரே.. இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது ஆனால் பலர் ஏன் இந்த வம்பு என்று விட்டுவிடுறாஙக்....

யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியாம இருக்கிறாங்க...

நீங்கள் தொடர்பு கொண்ட மின்னஞ்சல் முகவரியை பர்கிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

பாதிக்கப்பட்ட உறவுகளும் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்வார்களே..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jan 28, 2011 2:51 pm


மிக்க நன்றி .. மிகவும் தேவையான பயனுள்ள சுட்டி நண்பரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Post by RAJABTHEEN on Fri Jan 28, 2011 3:03 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைத்தான் நண்பரே.. இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளது ஆனால் பலர் ஏன் இந்த வம்பு என்று விட்டுவிடுறாஙக்....

யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியாம இருக்கிறாங்க...

நீங்கள் தொடர்பு கொண்ட மின்னஞ்சல் முகவரியை பர்கிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

பாதிக்கப்பட்ட உறவுகளும் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்வார்களே..

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: மொபைல் கம்பெனிகள் பிடுங்கிய பணத்தை திரும்பப்பெறும் வழிமுறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum