"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Today at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவேன்: விஜயகாந்த் ஆவேசம்

Go down

கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவேன்: விஜயகாந்த் ஆவேசம்

Post by கவிக்காதலன் on Mon Jan 17, 2011 1:00 am

""வரும் சட்டசபை தேர்தலில் எனது தொண்டர்கள் விரும்பினால் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து போட்டியிடுவேன்,'' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்., கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது. உழைத்தால் தான் எதையும் பெற முடியும். உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள தி.மு.க.,வினர் ஐந்து மாதங்கள் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தலில் தொகுதிக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற நினைக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் நம்முடைய வரிப் பணத்தை வாங்கி கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதி ஆட்சியில், வெங்காயம் என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் இலவசம் வழங்கும் கருணாநிதியால் நமக்கு இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் லோக்சபா கூட்டு குழு விசாரணைக்கு ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.

நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் எந்த கட்சியிலிருந்தும் வரவில்லை. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன். ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? 7 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருந்த டாஸ்மாக் கடையில் தற்போது 15 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதால், இலவசங்களை தாராளமாக வாரி வழங்குகின்றனர். பொங்கல் விழாவிற்கு அனைவரின் வீடுகளிலும் எண்ணெய் விளக்கேற்றினால் மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கருணாநிதி பகல் கனவு காண்கிறார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும். ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை. கருணாநிதியிடம் ஒரே ஒரு முன்னேற்றம் என்றால் முன்பெல்லாம் மத்திய அரசிற்கு கடிதம் எழுதுவார், தற்போது தந்தி அனுப்புகிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தருவதற்கு பதிலாக லஞ்சம், ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம். மின் வசதி இல்லாமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் வழங்கி பயனில்லை. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

காவல் துறையினரை இந்த ஆட்சி ஏவல் துறையாகப் பயன்படுத்துகிறது. போலீசார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் ஆட்சியாளர் களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்று வெற்றிப் பெறுவேன். பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்., கூட்டணி நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். இவ்வாறு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum