"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம்

Go down

பொங்கல் சிறப்பு சர்வீஸ் என்ற பெயரில் அடாவடி கட்டணம்

Post by கவிக்காதலன் on Tue Jan 18, 2011 6:44 pm

[You must be registered and logged in to see this image.]

பொங்கல் பண்டிகை சிறப்பு சர்வீஸ்கள் என்ற பெயரில், ஆம்னி நிறுவனங்களுக்கு இணையாக அரசு பஸ்களிலும், நூதன முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி.,), மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.,), தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் (டி.என்.எஸ்.டி.சி.,) விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, கோவை, மதுரை, சேலம் ஆகிய ஏழு கோட்டங்கள் என, மொத்தம் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு, அதில் நாள்தோறும் இரண்டு கோடியே 11 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

தற்போது, அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன.இதில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அதிக நஷ்டத்தில் சிக்கியுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், லாபமும், நஷ்டமும் இல்லாமல் இயங்குகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில், சாதாரண பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும், "எல்லோ லைன், புளூ லைன், எக்ஸ்பிரஸ்' பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

மாதந்தோறும் பவுர்ணமி நாளில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலம் மற்றும் அமாவாசை நாளில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஊஞ்சல் உற்சவ நாட்களில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.அத்தகைய நேரங்களில், சிறப்பு பஸ்களில் பயணிகளுக்கு, "சீட்' ஒதுக்குவதற்கு, தனியாக ஐந்து ரூபாய் டோக்கன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல சிறப்பு பஸ்களில் பயணிப்பவர்கள், எந்த நிறுத்தத்தில் இறங்கினாலும் கடைசி நிறுத்தத்திற்கான டிக்கெட் வாங்க வேண்டும் என்ற நடைமுறையும் கறாராக கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரு நடைமுறைகள் தான் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் நஷ்டம் இல்லாமல் இயங்குவதற்குக் காரணம் என தெரிந்துள்ளது.

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் மற்ற போக்குவரத்துக் கழகங்களும் இதே நடைமுறையை தற்போது பின்பற்றத் துவங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை ஒட்டி, மாநகர போக்குவரத்துக் கழகத்தைத் தவிர மற்ற போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டன.இதற்காக, மற்ற டிப்போக்களில் வேறு ரூட்களில் இயங்கிய பஸ்கள், சென்னைக்கு எடுத்து வரப்பட்டு, கடந்த 13ம்தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் திருச்சி செல்ல 175 ரூபாயும், "ஏசி' பஸ்சில் செல்ல 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் மதுரை செல்ல 240 ரூபாயும், "ஏசி' பஸ்சில் 400 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்செந்தூர் செல்ல அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் 246 ரூபாயும், "ஏசி' பஸ்சில் 500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மதுரை, திருச்செந்தூர் செல்லும் அல்ட்ரா டீலக்ஸ், "ஏசி' சிறப்பு பஸ்களில் திருச்சி சென்றவர்களிடமும் கடைசி நிறுத்தத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதேபோல மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் மறைமுக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், டிக்கெட் கட்டணத்திற்கு கூடுதல் பணம் செலவிட வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர். நேற்று, பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிய பயணிகளிடம், இதே நடைமுறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் தான் விமான கட்டணத்திற்கு இணையாக பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகங்கள், கட்டணம் உயர்த்தாவிட்டாலும், நூதன முறையில் பயணிகளிடம் கட்டண வசூலில் ஈடுபடத் துவங்கியுள்ளன.இது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பஸ்களையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் நலன் கருதி, இப்புதிய நடைமுறையை தவிர்ப்பதற்கு, போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்னி பஸ்களில் திடீர் ரெய்டு: அதிகாரிகள், "கண்துடைப்பு' நாடகம் : சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்த புரோக்கர்கள் ஓடி ஒளிந்தனர். சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில், வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆம்னி பஸ் நிலையங்களில் புரோக்கர்களின் தொந்தரவும் அதிகமாக இருந்து வருகிறது. கமிஷன் கிடைப்பதால், ஆம்னி பஸ்களில் கூட்ட நெரிசல் நிலவுவதைப் போல தோற்றத்தை உருவாக்கி, கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கின்றனர் என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆம்னி பஸ்கள் தொடர்பாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, கோயம்பேடு போலீசார் சில தினங்களுக்கு முன் திடீர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில், ஐந்து புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும், ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வும், புரோக்கர்கள் தொல்லையும் குறையவில்லை.இந்நிலையில், அயனாவரம் ஆர்.டி.ஓ., தாமோதரன் தலைமையிலான சிறப்பு படையினர், நேற்று திடீரென கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரெய்டு நடத்தினர். அங்கு, பஸ்களின் ஆவணங்களை வாங்கி பார்த்து ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களிலும் அதிகாரிகள் ஏறி சோதனை நடத்தினர்.ஆர்.டி.ஓ., அதிகாரிகளின் சோதனையைப் பார்த்ததும், அங்கிருந்த புரோக்கர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சோதனையில் அதிக கட்டணம் தொடர்பாக எந்த ஆவணமும் சிக்கவில்லை. மேலும் ஒரு புரோக்கரும் பிடிபடவில்லை.

காலியாக இருந்த பஸ்சில் ரெய்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல அதிக கூட்டம் இருக்கும். பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், தற்போது பிற ஊர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களிலேயே அதிக கூட்டம் இருக்கும்.ஆனால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் தற்போது ஆய்வு நடத்தியது, வேடிக்கையாக இருந்தது. இதற்கு பதிலாக, வெளியூர்களிலிருந்து சென்னை வரும் பஸ்களில் ரெய்டு நடத்தியிருந்தாலாவது, ஏதாவது சிக்கியிருக்கும் என பயணிகள் கூறினர்.மேலும், ஆம்னி பஸ்கள் எதிலும், பஸ் கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படுவதில்லை. பல பஸ்களில் பயணச்சீட்டிற்கு பதிலாக டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணமாக எவ்வளவு வசூலிக்கின்றனர் என்பதை கண்டறிய எந்த வழியும் இருப்பதில்லை என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

DINAMALAR

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum