"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மீண்டும் குரங்காக மாறும் மனிதன் இணையத்தின் ஈனச் செயல்:

Go down

மீண்டும் குரங்காக மாறும் மனிதன் இணையத்தின் ஈனச் செயல்:

Post by பட்டாம்பூச்சி on Thu Feb 03, 2011 5:25 pm

குரங்கில் இருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி மூலம் வந்தான் என்ற லோகோவோடு, லங்கா சிறியின் உதவியோடு புலம் பெயர் தமிழர்களுக்கு பம்மாத்து வீடியோவைக் காட்டி செய்திகளை வெளியிட்டு வரும் இணையம் மனிதன்இணையமாகும். அரசியல் அறிவோ இல்லை நிலையான நிலைப்பாடு எதுவும் இல்லாத ஒருவரால் இந்த இணையம் நடாத்தப்பட்டுவருவது யாவரும் அறிந்ததே. நாய்க்கும் மனிதருக்கும் திருமணம் நடந்தது, மலைப்பாக்கும் மலைப்பாம்புக்கும் திருமணம் நடந்தது என முன்னுக்குப் பின் சற்றுத் தொடர்பு இல்லாத பல செய்திகளை அது பிரசுரித்து வருகிறது.

பொழுது போக்கிற்காகவே மக்கள் அந்த இணையத்தைப் பார்வையிட்டு வருவதும் யாவரும் அறிந்ததே. ஆனால் அதில் நேற்று "புலம்பெயர் நாடுகளில் உள்ள 20 தமிழர்களை கைது செய்ய அரசு பகீரதப் பிரயத்தனம்! " என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் 20 பேரின் பெயர்களை இணையத்தில் அப்பட்டமாக வெளியிட்டுள்ளனர். இவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என மனிதன் இணையம் அவர்களை அப்படியே அடையாளம் காட்டிக் கொடுக்கிறது. இது ஏன் ? இலங்கை அரசு இவர்களைக் கைது செய்ய இன்டர் போலின் உதவியை நாடியுள்ளதாக மனிதன் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது விடுதலைப் புலிகளின் செயல்பாட்டாளர்களை மனிதன் இணையம் நேரடியாகவே அச்சுறுத்தியுள்ளது.

இலங்கையில் இருக்கும் எந்தவொரு சிங்கள இணையங்களோ இல்லை ஆங்கில இணையங்களோ இதுவரை வெளியிடாத இந்த 20 பேரின் முழுப்பெயர்களையும் மனிதன் இணையம் மட்டும் முண்டி அடித்துக்கொண்டு வெளியிட என்ன காரணம் ? விடுதலைப் போரில் 33,000 யிரம் போராளிகளைப் தியாகம் செய்து, ஈழ விடுதலைக்காய் போராடிய அமைப்புகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு முதன்மையானது. அதன் ஆதரவாளர்களை மனிதன் இணையம் இன்று காட்டிக்கொடுத்திருக்கிறது என்றால் மனிதன் இணையத்தை இயக்குவது யார் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

இலங்கை அரசானது மனிதன் இணையமூடாக புலம்பெயர் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இலங்கைப் புலனாய்வுத் துறையினர் மனிதன் இணையத்தை கையகப்படுத்தி இத் தகவலை வெளியிட்டுள்ளனரா ? என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றது. தற்போது இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களை ஒடுக்க இலங்கை அரசானது மனிதன் இணையத்தைப் பயன்படுத்துகிறது. வெளிநாடுகளில் செயல்படும் ஆதரவாளர்களை, மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை இவ்வாறு புலிகளோடு தொடர்பு என்று விமர்சித்து, அவர்களை அச்சுறுத்த முனையும் இலங்கை அரசோடு மனிதன் இணையம் தற்போது கைகோத்து நிற்பது ஆதாரத்தோடு நிரூபனமாகியுள்ளது. மனிதனில் வெளியான செய்தியை இங்கே ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் பிரசுரித்துள்ள படங்களைப் பாருங்கள்.

இந்தச் செய்தியை நாம் வெளியிட்ட காரணத்தால் மனிதன் இணையம் சிலவேளைகளில், தாம் பிரசுரித்த அந்தச் செய்தியை அகற்றவும் கூடும். புலம்பெயர் தமிழர்கள் மனதில் போராட்டம் என்பதை அடியோடு கருவறுக்க சிங்களம் கங்கணம் கட்டி ஆடும் இவ்வேளையில், புலத்தில் புதுக் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் இதுபோன்ற புல்லுருவி இணையங்களை மக்கள் இனங்காண வேண்டும். புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல ! போராட்டம் வேறு தமிழர்கள் வேறு அல்ல ! எனவே இதனைப் பிரித்து, புலம்பெயர் மக்களின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதன் போன்ற இணையங்களின் சாயங்கள் வெளுத்துக்கொண்டு வருவதை எவரும் மறுத்துவிட முடியாது.

20 புலம் பெயர் செயல்பாட்டாளர்களைக் கைதுசெய்ய இலங்கை அரசு இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது என்றாவது செய்தியினை போட்டிருக்கலாம் அதைவிடுத்து 20 பேரின் பெயர்களை இணையத்தில் ஏற்றி, அவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என கட்டம்போட்டுக் காட்டி இலங்கை அரசின் கால்களை நக்கிப் பிழைப்பு நடத்துகிறது மனிதன் இணையம். இலங்கை அரசு வெளியிட்டுள்ள 20 பெயரின் பட்டியல் நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதா ? இதில் ஒருவர் சரி பொய் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாமே.

அவர் உண்மையில் புலிகளோடு தொடர்பு இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் அவர் பெயரை ஏன் களங்கப்படுத்தவேணும். மனிதன் இணையத்தில் குறிப்பிட்டதற்கு மாறாக அவர் ஒன்றுடனும் தொடர்பு இல்லை என்றால், பாதிக்கப்பட்டவர் மான நஷ்ட வழக்கையும் தொடரலாம். மனிதன் இணையத்தின் இக் காட்டிக்கொடுப்பு மாபெரும் தமிழினத் துரோகமாகும். தமிழர் போராராட்டங்களை மழுங்கடிக்க இலங்கையின் கைக்கூலியாக மாறியுள்ளது மனிதன் இணையம். அதன் முதல் வெளிப்பாடே புலம் பெயர் தமிழ் ஆர்வலர்களைக் இது காட்டிக்கொடுத்துள்ளது. சில மனித நேய செயல்பாட்டாளர்களை அது பகிரங்கமாகவே அச்சுறுத்தியும் உள்ளது.

ஆசிரியர் குறிப்பு: பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்தவாறே பெயர்கள் பிரசுரம் ஆகி உள்ளன என்பதை மனிதன் வாசகர்களுக்குத் தெரியத் தருகின்றோம்
இறுதியில் இவ்வாறு ஒரு குறிப்பை போட்டு தப்பிக்க நினைக்கும் மனிதன் இணையம்.
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum